மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 10 November, 2021 8:27 PM IST
Protect children from disease

பொதுவாக மழைக்காலத்தில் தொற்று நோய் என்பது கொசு , காற்று, தண்ணீர் , கெட்டுப்போன உணவுகள் போன்றவற்றின் மூலமாகவே பரவுகிறது. குறிப்பாக கொசுக்கள் மூலமாக பரவுவதுதான் நோய்க்கான முக்கிய காரணமாக இருக்கும். அப்படி கொசுக்கள் மூலமாக டெங்கு, சிக்கன்குனியா, மலேரியா, மூளைக்காய்ச்சல் போன்ற நோய்களை உண்டாக்கும். இந்த நோய்களை உண்டாக்கும் கொசுக்கள் தேங்கியிருக்கும் நீர்நிலைகளிலிருந்தே பெரும்பாலும் உருவாகின்றன.

கொசுக்கடியினால் குழந்தை பாதிக்கப்பட்டிருந்தால் எப்படி கண்டறிவது?

அதிகப்படியான காய்ச்சல், சளி, சோர்வு, அசதி போன்ற அறிகுறிகள் தென்படும். நீங்கள் வழக்கமாக கொடுக்கும் மருந்து , மாத்திரைகளுக்கு அந்த காய்ச்சல் குணமாகாமல் நீடிக்கும். இந்த அறிகுறிகள் இருந்தால் உடனே மருத்துவரிடம் அழைத்துச் சென்று உரிய சிகிச்சை பெறுவது அவசியம்.

கொசுக்கள் வருவதை தடுக்க

  • வீட்டை சுற்றிலும் நீர் தேக்கங்கள் இல்லாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.
  • வீட்டில் தேவையில்லாமல் தண்ணீர் நிரப்பி வைப்பதை தவிருங்கள். தேவைப்படும்பட்சத்தில் அவற்றை நன்கு மூடி வையுங்கள்.
  • வீட்டை சுற்றி சாக்கடைகள் இருந்தால் வீட்டின் ஜன்னல், கதவுகளில் கொசு வலைகளை பயன்படுத்துங்கள்.
  • வீட்டில் குப்பைகளை சேர்க்காமல் அடிக்கடி அப்புறப்படுத்திவிடுங்கள்.

குழந்தைகளை கொசுக்கடியிலிருந்து பாதுகாக்க

  • குழந்தைகளின் கை , கால் என உடலை முற்றிலும் மூடும் ஆடைகளை அணிந்துவிடுங்கள்.
  • கைகள் , கால்களில் கிளவுஸ் அணிந்துவிடுங்கள்.
  • வீட்டு கதவு , ஜன்னல்களை மாலையில் மூடி வையுங்கள். அடிக்கடி கதவுகளை திறந்து மூடாமல் இருங்கள்.
  • காலை நேரத்தில் காற்று வந்து செல்லுமாறு காற்றோட்டாமாக திறந்து வையுங்கள்.
  • குழந்தைகளுக்கு கொசு வலைகளை பயன்படுத்துங்கள்.
  • அவர்களுக்கு கொசு கடிக்காமல் இருக்கும் லோஷன்களை பயன்படுத்தாதீர்கள். அதற்கு பதிலாக மஸ்கிடோ ரிபெலண்ட் பேச்சஸ் என்று ஆடைகளில் ஒட்டக்கூடிய வகையில் பிரத்தியேகமாக கிடைக்கிறது. அவற்றை குழந்தைகள் அணிந்திருக்கும் ஆடையில் ஒட்டிவிடலாம். இதனால் பக்கவிளைவுகளும் இல்லை.

மேலும் படிக்க

கொசுத் தொல்லைக்கு குட் பை சொல்லும் அணு விஞ்ஞானம்: தமிழக விஞ்ஞானி சாதனை!

டெங்கு காய்ச்சல்: நம்மைப் பாதுகாத்துக் கொள்வது எப்படி?

English Summary: Rainy season diseases: How to protect children?
Published on: 10 November 2021, 08:27 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now