Health & Lifestyle

Tuesday, 20 September 2022 02:16 PM , by: Elavarse Sivakumar

சென்னையில் ப்ளூகாய்ச்சல் பாதித்த நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், நம்மைத் தற்காத்துக்கொள்ள, காய்ச்சல் அறிகுறி இருப்பவர்கள் வீட்டில் தனிமைபடுத்திக் கொள்ள வேண்டியது அவசியமாகிறது.

சென்னையில் கடந்த சில நாட்களாக இன்புளூயன்சா வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக குழந்தைகள் அதிக அளவில் பாதிக்கப் பட்டுள்ளார்கள். காய்ச்சல் பாதித்த நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

வீரியம் குறைந்தது

ஒரு காலத்தில் அதாவது 1918-ல் உலக போர் சமயத்தில் இனபுளூயன்சா பரவி ஏராளமான உயிர்களையும் பலி வாங்கி இருக்கிறது. அதன்பிறகு தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு கட்டுப்படுத்தப்பட்டது. நோயின் வீரியம் குறைந்து உலகம் முழுக்க பரவியது. அதே சமயம் பெரிய அளவில் பாதிப்புகளையும் ஏற்படுத்தாது என்ற நிலையில் இன்புளூயன்சா உருமாற்றம் அடைந்தது. உலகம் முழுக்க சீசனுக்கு சீசன் பரவும் காய்ச்சலாக மாறியது. தமிழகத்தில் இந்த சீசனில் பரவக் கூடியது தான். ஆனால் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா கட்டுப்பாட்டில் முடங்கி கிடந்ததால் இதன் தாக்கம் தெரியவில்லை. இப்போது பருவ நிலை மாற்றத்தால் 2018-ம் ஆண்டைப் போல் பரவி வருகிறது.

அறிகுறி

இந்த நோயின் அறிகுறி சளி, தொண்டை வலி, உடல்வலி, இருமல், தலைவலி ஆகியவைதான். விட்டு விட்டு காய்ச்சல் வரும். 3 நாட்களுக்கு காய்ச்சல் தீவிரமாக இருக்கும். அதன் பிறகு படிப்படியாக குறையும். பெரிய அளவில் பாதிப்பு எதுவும் ஏற்படாது.

தனிமை அவசியம்

காய்ச்சல் அறிகுறி இருப்பவர்கள் வீட்டில் தனிமைபடுத்திக் கொள்ள வேண்டும். வெளியே செல்லும் போது முக கவசம் அணிந்து செல்ல வேண்டும். தண்ணீர் நிறைய குடிக்க வேண்டும். சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். கூட்டமான இடங்களுக்கு குழந்தைகளை அழைத்து செல்வதை தவிர்க்க வேண்டும்.

சுய மருந்து கூடாது

காய்ச்சல் அறிகுறி ஏற்பட்டால் சுயமாக மருந்து வாங்கி சாப்பிட கூடாது. மருத்துவர்களை அணுகி அவர்களின் ஆலோசனையின் பேரில் மருந்துகளை சாப்பிட வேண்டும்.

பரவுவது எப்படி?

இன்புளூயன்சா காய்ச்சல் ஏற்பட்டவர்கள் இருமினாலும், தும்மினாலும் வெளியேறும் நீர் திவலைகள் வழியாக வைரஸ் பரவும். எனவே கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும்.

மேலும் படிக்க...

பைக்கில் லிஃப்ட் கொடுத்ததன் பயன் - விஷ ஊசி போட்டு கொன்ற மர்மநபர்!

தமிழகத்தில் அடுத்த ஐந்து நாள்கள் எப்படி இருக்கும்?

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)