மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 1 August, 2021 6:15 AM IST

வேம்பின் (Neem) அனைத்து பாகங்களின் மருத்துவ குணங்களும் நாம் அறிந்ததுதான். தற்போது வேப்பம்பூ பூக்கும் காலம் என்பதால் அதன் அருங்குணங்களை அறிந்து கொள்வோம்

அருங்குணங்கள்

  • வேப்பம் பூ வெயில் காலத்தில் மட்டுமே பூக்கும் என்பதால் அதை சுத்தப்படுத்தி காய வைத்துக் கொண்டால் வருடம் முழுக்க பயன் படுத்திக் கொள்ளலாம். மாதக்கணக்கிலும் அதன் மருத்துவ குணம் குறையாது.
  • வேப்பம் பூ உடலுக்கு உஷ்ணத்தை தரக்கூடியது. உடலுக்கு பலத்தை தரக்கூடியது. வயிற்றில் உள்ள பூச்சிகளை அகற்றுகிறது.
  • குழந்தைகளுக்கு தோல் அரிப்பு, திடீர் திடீரென்று கை கால்களில் ஏற்படும் தடிப்பு, அலர்ஜி போன்ற பிரச்னைகளை வராமல் தடுக்க வேப்பம் பூவை வாரம் ஒரு முறை உணவில் சேர்க்கலாம்.
  • வேப்பம் பூவானது நாக்கில் ஏற்படும் பூஞ்சை தொற்றை சரி செய்யும். வேப்பம் பூவை ஊற வைத்து அந்த நீரை பருகுவதால் அல்லது அந்த நீரால் வாயை கொப்பளிப்பதாலும் சரி செய்ய முடியும். இது அல்சருக்கும் அருமருந்து.
  • வேப்பம்பூவை சிறிதளவு தொடர்ந்து உட்கொள்வதன் மூலம் ரத்த அழுத்தம், கொழுப்பு மற்றும் நீரிழிவு நோயாளிகள் அவற்றை கட்டுக்குள் வைத்திருக்கலாம்.
  • உடலில் உள்ள தேவையற்ற காற்றை வேப்பம்பூ வெளியேற்றுவதால் தானாகவே ரத்த அழுத்தம் குறையும். அதேபோல் கல்லீரலில் தேவையற்ற கொழுப்பும் சேராமல் பார்த்துக் கொள்ளும்.
  • உஷ்ண உடம்பு கொண்டவர்கள் வேப்பம் பூவை அளவுடன் எடுத்துக் கொள்வது நல்லது. ஏனெனில், இது உடல் சூட்டை அதிகப்படுத்திவிடும்.
  • அதேபோல் வயிற்றுப்போக்கு, மூல நோய் மற்றும் அதிக உடல் உஷ்ணம் உள்ளவர்கள் மாதத்திற்கு ஒரு முறை அல்லது இரண்டு முறை எடுத்துக் கொண்டாலே போதுமானது.
  • வேப்பம்பூவை துவையலாகவோ, ரசமாகவோ அல்லது குழம்பாகவோ எடுத்துக் கொள்ளலாம். இதனால் கசப்புத் தன்மை குறைந்துவிடும்.

மேலும் படிக்க

சருமத்தை இளமையாக்கும் மிகச் சிறந்த உணவுகள்!

English Summary: Rare Benefits of Amazing Neem flower!
Published on: 01 August 2021, 06:15 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now