கண்கள்
அதிக நேரம் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், மொபைல் போன்கள், கணினி போன்றவற்றை அதிக நேரம் தொடர்ந்து பார்ப்பதால் பெரும் பாதிப்பினைச் சந்திக்கின்றன.
சிறுநீரகங்கள்
நீண்ட நேரம் கண் விழித்தல், உறக்கமின்மை ஆகியவற்றால் சிறுநீரகங்கள் பாதிப்படைகின்றன.
வயிறு
உணவுப் பொருட்களை நீண்ட நாட்கள் கெட்டுப் போகாமல் இருக்க சேர்க்கப்படும் செயற்கை பாதுகாப்பு வேதிப் பொருட்கள் சேர்க்கப்பட்ட உணவுகளை உண்ணுதல், துரிதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள், குளிரூட்டப்பட்ட உணவுப் பொருட்கள் ஆகியவற்றை தொடர்ந்து சாப்பிடுவதால் வயிறு பாதிக்கப்படுகிறது.
நுரையீரல்
தொடர்ந்து புகைப் பிடித்தலால் நுரையீரல் பாதிப்படைகிறது.
கல்லீரல்
கொழுப்புச் சத்து நிறைந்த உணவுப் பொருட்களை உண்ணுதல், தொடர்ந்து மது அருந்துதல் ஆகியவற்றால் நாளடைவில் கல்லீரல் பாதிப்படைகிறது.
இதயம்
உப்பு நிறைந்த உணவுப் பொருட்கள், கொழுப்புச் சத்து நிறைந்த உணவுகள் இதயத்தை பலவீனமாக்குகின்றன.
கணையம்
தொடர்ந்து அதிகளவு நொறுக்குத் தீனியை உண்பது கணையத்தின் சுரப்பினை பாதிக்கின்றன.
குடல்
கடல்சார் உணவுகளை அதிகளவு உண்பது, நார்ச்சத்து குறைவான உணவுகளை உண்பது குடலினைப் பாதிக்கின்றன.
பித்தப்பை
காலை உணவினைத் தவிர்ப்பதால் பித்தப்பை பாதிப்படைகிறது.
உடல் உள்ளுறுப்புகள் பாதிப்படைந்து விட்டால் அதனை மாற்றுவது என்பது மிகவும் சிரமம். அத்தோடு உள்ளுப்புக்களை மாற்றம் செய்ய தேவையான பொருட்களின் விலை அதிகம்.
அவ்வாறு அவற்றை மாற்ற வேண்டுமானால் செலவு மிக அதிகம். மேலும் மாற்றுப் பொருட்கள் எளிதாகக் கிடைக்காது.
மேலும் அவை நம்முடைய சொந்த உறுப்புக்களைப் போல இயங்குவது இல்லை. எனவே எப்போதும் நாம் உண்ணும் உணவுப் பொருட்களில் கவனமாக இருக்க வேண்டும்.
நம்முடைய வாழ்க்கை முறைகள் மற்றும் நம்முடைய செயல்பாடுகளிலும் கவனமுடன் செயலாற்ற வேண்டும்.