மணத்தக்காளி என்றாலே மருத்துவ பயன்களுக்கு பஞ்சாமே இல்லை. மலச்சிக்கல், கல்லீரல் பிரச்சனைகள், சரும அலர்ஜி, வெயில் கட்டி, கை கால் வலி, காய்ச்சல் என பல பிரச்சனைகளுக்கு தீர்வு தரக் கூடிய முக்கிய அம்சங்கள் மணத்தக்காளியின் காயில் உள்ளது. காய் மட்டுமில்லாமல் இதன் இலைகளும் வாய்ப்புண், வயிற்றுப்புண்ணை என பல பிரச்சனைகளை தீர்க்கும் வல்லமை கொண்டது.
ஆகவே மணத்தக்காளி வைத்து என்ன செய்யலாம் என்று சிந்திக்காமல் விரைவில் ஒரு கார குழம்பு வைத்து சுவைத்திடுங்கள். கார குழம்பில் சின்ன வெங்காயம் எப்போதும் முக்கிய பங்கு வகிக்கிறது. சின்ன வெங்காயத்திலும் மருத்துவ நலன்கள் உள்ளன. சின்ன வெங்காயத்தில் உள்ள பொட்டாசியம் மற்றும் அலிசின் சேர்மம் உயர் இரத்த அழுத்தத்தைக் குறைப்பதில் மிகவும் உபயோகமாக உள்ளது.
வாருங்கள், மணத்தக்காளி மற்றும் சின்ன வெங்காயம் வைத்து காரக் குழம்பு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
காரக் குழம்பு செய்ய தேவையான பொருட்கள்
-
மணத்தக்காளி காய் – 100 கிராம்
-
எண்ணெய் – 3 டீஸ்பூன்
-
கடுகு – 1/2 டீஸ்பூன்
-
வெந்தயம் – 1/4 டீஸ்பூன்
-
சின்ன வெங்காயம் – 1 கப்
-
பச்சை மிளகாய் – 2 (நடுவில் கீறியது)
-
கருவேப்பிலை – தேவையான அளவு
-
பூண்டு – 10பல்
-
தக்காளி – 1 பெரிய அளவு (அரைத்துக் கொள்ளவும்)
-
மிளகாய் தூள் – தேவைக்கேற்ப
-
மஞ்சள் தூள் – ½ டீஸ்பூன்
-
புளி – சிறிய எலுமிச்சை அளவு (கரைத்து வைத்திருக்கவும்)
-
காய்ந்த வெந்தய இலைகள் அல்லது கஸ்த்தூரி மெத்தி இலைகள் – 1/2 டீஸ்பூன்
-
கொத்தமல்லி – தேவையான அளவு
செய்முறை
-
முதலில் ஒரு குழம்பு வைக்கும் பாத்திரம் எடுத்து அதில் எண்ணெய் ஊற்றி சூடேற்றவிடவும். பிறகு அவற்றோடு கடுகு, வெந்தயம் சேர்த்து பொறியவிடவும். அவை பொரிந்ததும், ஒன்றின் பின் ஒன்றாக சின்ன வெங்காயம், கீறிய பச்சை மிளகாய், கருவேப்பிலை சேர்த்து வதக்கி கொள்ளவும். பின்னர் அதில் பூண்டு, அரைத்து வைத்திருந்த தக்காளி, உப்பு சேர்த்து மீண்டும் வதக்கவும்.
-
இபோது சுத்தமான நீரில் இரண்டு முறை அலசி வைத்துள்ள மணத்தக்காளி காயை எடுத்து அவற்றோடு சேர்க்கவும். தொடர்ந்து வதக்கிய பிறகு அவற்றோடு மஞ்சள் தூள் மற்றும் தேவைக்கேற்ப மிளகாய் தூள் சேர்த்து மீண்டும் வதக்கவும்.
-
அதன் பின்னர், சிறிய எலுமிச்சை அளவு கரைத்து வைத்திருந்த புளி கரைசலை சேர்த்து, பின்பு அதன் மீது காய்ந்த வெந்தய இலைகளை தூவி விடவும். பாத்திரத்தை ஒரு மூடியால் மூடி 5 நிமிடங்களுக்கு குழம்பை கொதிக்க விட வேண்டும். விருப்பம் கொண்டவர்கள் தேங்காயை அரைத்து அத்துடன் சேர்த்து கொள்ளலாம், தேங்காய் அவசியம் இல்லை.
-
இப்போது, பாத்திரத்தை திறந்து பார்த்தல் மணத்தக்காளி காய் மற்றும் சின்ன வெங்காய காரா குழம்பு தயராக இருக்கும்.
-
இப்போது சூடான சாதத்துடன், மணத்தக்காளி குழம்பு சேர்த்து பரிமாறி ருசிக்கவும். இத்துடன் அப்பளம் வைத்து சாப்பிட்டால் ஆஹா!
மேலும் படிக்க:
LPG Subsidy: ரூ.79 - ரூ. 237 வரை சிலிண்டர் மானியம் யாருக்கு!