இந்தியாவின் பணக்கார விவசாயி: RFOI விருதினை வென்ற குஜராத் பெண்! விவசாயத்தில் மட்டும் 50 கோடி.. RFOI விருதினை வென்ற யுவராஜின் வெற்றிக் கதை! நல்ல மகசூல் தரும் கோ 10 கம்பு வீரிய ஒட்டு இரகத்தின் சாகுபடி தொழில்நுட்பம்! குறுவை பருவத்தில் 26 பயிர்களுக்கான பயிர் காப்பீடு- அமைச்சர் முக்கிய அறிவிப்பு! நம்மாழ்வரின் மாணவர்- விதைகளின் காதலன்: நம்பிக்கையூட்டும் சாலை அருண் கேள்விக்குறியான குறுவை சாகுபடி- டெல்டா விவசாயிகளுக்கு மானியத் திட்டத்தை வழங்கிட உத்தரவு! இலவச இயற்கை வேளாண் உற்பத்தியாளர் பயிற்சி- எங்கே? எப்போது? விவசாயிகளுக்கு பசுந்தாளுர விதைகள்- புதிய திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர்! Kisan Call Centre- ஒரே போன் காலில் விவசாய பிரச்சினைகளுக்கு தீர்வு!
Updated on: 26 March, 2022 8:23 AM IST

ரேஷன் கார்டு பயனாளிகளுக்கு மத்திய அரசு முக்கிய அறிவிப்பை வெளியிட்டு உள்ளது. இதன்படி ரேஷன் கார்டை ஆதாருடன் இணைப்பதற்கான கடைசி தேதியை மத்திய அரசு மீண்டும் நீட்டித்துள்ளது. முன்னதாக ரேஷன் கார்டுடன் ஆதார் அட்டையை இணைக்க மார்ச் 31 கடைசி தேதியாக இருந்தது.

மத்திய அரசு வழங்கி உள்ள ரேஷன் அட்டை மூலம் சாமானிய மக்கள் குறைந்த விலையில் ரேஷன் பொருட்களை பெற்று பயன் அடைந்து வருகின்றனர். மாநிலம்தோறும் லட்சக்கணக்கான மக்கள் பயனடைந்து வருகின்றனர்.
இதன் காரணமாக, அரசு அளிக்கும் பல சலுகைகளும் ரேஷன் கார்டு வாயிலாக பயனாளிகளைச் சென்றடைகிறது. மேலும் ‘ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு’ திட்டத்தை மத்திய அரசு தொடங்கியுள்ளது, இதன் மூலம் லட்சக்கணக்கான மக்கள் பயன்பெறுகின்றனர்.

நிபந்தனை

இந்தத் திட்டத்தின் கீழ் பயன்பெற வேண்டுமானால், ரேஷன் கார்டுடன் ஆதார் அட்டையை இணைக்க வேண்டியது கட்டாயம். அதாவது,
ரேஷன் கார்டுடன் ஆதார் அட்டையை இணைப்பதன் மூலம் ‘ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு’ திட்டத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம். இதன் மூலம் நாட்டின் எந்த மாநிலத்திலும் ரேஷன் கார்டை காட்டி ரேஷன் எடுக்கலாம்.
இந்நிலையில் ரேஷன் கார்டு, ஆதாருடன் இணைப்பதற்கான கடைசி தேதியை மத்திய அரசு மீண்டும் ஜூன் 30, 2022 வரை நீட்டித்துள்ளது.

அதேநேரத்தில்,ரேஷன் கார்டை ஆதார் அட்டையுடன் இணைக்காவிட்டால், அரசு வழங்கும் பல வசதிகளை ரேஷன் அட்டைதாரர்கள் இழப்பார்கள் என்று உணவு மற்றும் பொது விநியோகத் துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இணைப்பது எப்படி?

  • இந்த ஆதார் இணைப்பை ஆன்லைனில் எளிமையான முறையில் பண்ணலாம்.

    இதற்கு முதலில் uidai.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்ல வேண்டும்.

  • பின்னர் ‘ஸ்டார்ட் நவ்’ என்பதைக் கிளிக் செய்ய வேண்டும்.

  • அதன் பிறகு உங்கள் முகவரி, மாவட்டம், மாநிலம் ஆகியவற்றை நிரப்ப வேண்டும்.

  • இதற்குப் பிறகு ‘ரேஷன் கார்டு பெனிபிட்’ என்ற விருப்பத்தை கிளிக் செய்ய வேண்டும்.

  • இப்போது இங்கே உங்கள் ஆதார் அட்டை எண், ரேஷன் கார்டு எண், மின்னஞ்சல் முகவரி மற்றும் மொபைல் எண் போன்றவற்றை நிரப்ப வேண்டும்.

  • பிறகு, உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு OTP வரும்.

  • இங்கே OTP ஐ நிரப்பிய பிறகு, உங்கள் திரையில் செயல்முறை முடிந்த செய்தியைப் பெறுவீர்கள்.

  • இந்த செயல்முறை அனைத்தும் முடிந்தவுடன், உங்கள் ஆதார் சரிபார்க்கப்பட்டு, உங்கள் ரேஷன் கார்டுடன் உங்கள் ஆதார் இணைக்கப்படும்.

ரேஷன் கார்டுடன் ஆதார் அட்டையை(OFFLINE)இணைக்க ரேஷன் கார்டு மையத்தில் சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள் ஆதார் அட்டை நகல், ரேஷன் கார்டு நகல் மற்றும் ரேஷன் கார்டுதாரரின் பாஸ்போர்ட் அளவு புகைப்படம்.
இது தவிர, உங்கள் ஆதார் அட்டையின் பயோமெட்ரிக் தரவு சரிபார்ப்பும் ரேஷன் கார்டு மையத்தில் செய்யப்படலாம்.

மேலும் படிக்க...

SSC : மத்திய அரசு வேலை- கல்வித்தகுதி10-ம் வகுப்பு தேர்ச்சி!

தூக்கத்தைத் தொலைத்தவரா நீங்கள்? இந்த ஒரே பானம் போதும்!

English Summary: Relief for Ration Card Holders - Extension of Period!
Published on: 25 March 2022, 08:15 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now