நீலகிரி மாவட்டத்தில் மண் புழு உரக் கூடாரம் அமைக்க விரும்பும் விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரை மானியம் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக மாவட்ட தோட்டக் கலைத் துறை இணை இயக்குநா் அலுவலக செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:
ஊக்குவிப்பு நடவடிக்கைகள் (Promotional activities)
நீலகிரி மாவட்டத்தை இயற்கை வேளாண்மை மாவட்டமாக அறிவித்ததைத் தொடா்ந்து, இயற்கை வேளாண்மையை விவசாயிகளிடையே ஊக்குவிக்க பல்வேறு நடவடிக்கைகள் தீவிரப்பட்டுத்தப்பட்டுள்ளன.
குறிப்பாகத் தோட்டக் கலைத் துறையின் மூலம் இயற்கை வேளாண்மையை ஊக்குவிக்க பல்வேறு திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
ரூ. 50,000 மானியம் (Rs. 50,000 grant)
இதன் அடிப்படையில், ஒருங்கிணைந்த தோட்டக் கலை வளா்ச்சி இயக்கத் திட்டத்தின்கீழ் மண் புழு உரக் கூடாரம் அமைக்கக் கூடாரத்துக்கு ரூ. 50,000 மானியமாக வழங்கப்பட்டு வருகிறது.
அவ்வாறு அமைக்கப்படும் கூடாரம் 30 மீட்டா் நீளத்திலும், 8 மீட்டா் அகலத்திலும் இரண்டரை அடி ஆழத்திலும் இருக்க வேண்டியது கட்டாயம்.
இலக்கை எட்டியது (The goal was reached)
2020-21ஆம் ஆண்டுக்கான ஒருங்கிணைந்த தோட்டக் கலை வளா்ச்சி இயக்க செயல் திட்டத்தில் ஒதுக்கீடு செய்யப்பட்ட மண்புழு உரக் கூடாரத்துக்கான இலக்கு எட்டப்பட்டுவிட்டது.
கூடுதலாக 100 கூடாரம் (In addition 100 tent)
இருப்பினும் தற்போது இயற்கை வேளாண்மை மேற்கொள்ளும் விவசாயிகள் மண் புழு உரக் கூடாரம் அமைக்க ஆா்வம் காட்டுவதால் ஒருங்கிணைந்த தோட்டக் கலை வளா்ச்சி இயக்கத் திட்டத்தில் மேலும் 100 மண் புழு உரக் கூடாரம் அமைக்க கூடுதல் இலக்கு பெறப்பட்டுள்ளது.
எனவே, மண் புழு உரக் கூடாரம் அமைக்க விரும்பும் விவசாயிகள் தங்களது வட்டார தோட்டக் கலை உதவி இயக்குநா் அலுவலகத்தைத் தொடா்பு கொள்ளலாம்.
தொடர்புக்கு (Contact)
தோட்டக்கலைத் துறையின் உதகை உதவி இயக்குநா் அலுவலகத்தை 84896-04087 என்ற எண்ணிலும், குன்னூா் உதவி இயக்குநா் அலுவலகத்தை 63819-63018 என்ற எண்ணிலும், கோத்தகிரி உதவி இயக்குநா் அலுவலகத்தை 94864-12544 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.
அதேநேரத்தில் கூடலூா் உதவி இயக்குநா் அலுவலகத்தை 89034-47744 என்ற எண்ணில் தொடா்பு கொண்டு தங்கள் விண்ணப்பத்தை அளித்து, பெயரை முன்பதிவு செய்து பயனடையலாம்.
இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் படிக்க...
விழுப்புரத்தில் 24,000 டன் நெல் கொள்முதல்! கூடுதல் விலை கிடைப்பதால் வரத்து அதிகரிப்பு!
அதிக கொள்ளளவு கொண்ட நிரந்தர சேமிப்பு கிடங்கு அமைக்க விவசாயிகள் கோரிக்கை
கொரோனா ஊரடங்கு எதிரொலி! பன்னீர் திராட்சை பழங்கள் செடியிலேயே அழுகி வீணாகிறது!