உப்பிட்டவரை உள்ளளவும் நினை என்பார்கள். உண்மையில் அவர்களை மட்டுமல்ல, உப்பையும் நம் உயிருள்ளவரை நினைக்கவேண்டும். ஏனெனில் மனித உடலைக் காக்கும் மகத்தான பணியை சாதாரண உப்பு செய்கிறது.
உப்பின் உன்னதம்
அதேநேரத்தில் உணவுப்பொருட்களில் உப்பின் அளவு அதிகாரித்தாலே, உப்பு சேர்க்காவிட்டாலோ, அதனை சாப்பிட முடியாது. இதேமாதிரிதான் நம் உடலிலும். உப்பு அதிகரித்தாலே, குறைந்தாலோ நோய் ஏற்படும்.
சரி, உப்பானது சுவைக்காக மட்டும் தான் பயன்படுத்தப்படுகிறதா? விளக்கம் இதோ உங்களுக்காக!
சமையலில் பயன்படுத்தப்படும் சாதாரண உப்பின் வேதியியல் வாய்பாடு ‘NaCl’ (சோடியம் குளோரைடு) ஆகும். கரிப்பு சுவை கொண்ட இந்த உப்பு நீரில் எளிதில் கரையும் இயல்பு உடையது.
உப்பின் மருத்துவப் பயன்கள் (Medical Benefits of Salt)
உடலில் உப்பின் சமநிலை(Salt balance in the body)
நமது உடலானது, எண்ணற்ற செல்களால் கட்டமைக்கப்பட்டுள்ளது. சவ்வினால் சூழப்பட்டிருக்கும் ஒவ்வொரு செல்லும் (Cell), டி.என்.ஏ (DNA), செல் உறுப்புகள், வேதிபொருட்கள் (சோடியம் மூலக்கூறுகள்) மற்றும் நீர் ஆகியவற்றைத் தன்னுள்ளே கொண்டுள்ளது.
எனவே செல்லின் சீரான செயல்பாட்டிற்கு உப்பு அவசியமாகிறது. ஒருவேளை செல்லினுள், உப்பின் அளவு (தேவையை விட) அதிகமானாலோ அல்லது குறைந்தாலோ, செல்லிற்கு பாதிப்பினை ஏற்படுத்தும்.
அதாவது செல்லிற்குள், சோடியம் அயன்கள் (Sodium Irons) குறைந்தால், நீரழிவு ஏற்பட்டு, இரத்த அழுத்தம் குறையும் அபாயம் உண்டு.அதேநேரத்தில் அதிகப்படியான உப்பு காரணமாக, செல் வீக்கம் அடைந்து பின் அச்செல் வெடிக்கும் வாய்ப்பும் உண்டு. எனவே, உடலில் (செல்லினுள்) உப்பின் அளவு சரிவிகித்தில் இருப்பது மிக மிக அவசியம்.
உடல் செயல்பட(Physical activity)
உடல் செயல்பாட்டிற்கு உப்பு உதவுவதற்கு, அதன் மின்கடத்தும் திறனே காரணம். ஏனெனில், உப்பு ஒரு மின்பகுளி ஆகும். அதாவது, உப்பை நீரில் கரைக்க, அது சோடியம் (நேர்மின்) அயனாகவும், குளோரைடு (எதிர்மின்) அயனாகவும் பிரிகை அடையும். இவை மின்சாரத்தை கடத்தும் இயல்பு உடையவை.
நமது உடலில் உள்ள உள் உறுப்புகள், பெரும்பாலும் ஒன்றுக்கொன்று மின்சமிங்ஞை மூலமாகவே தொடர்பு கொள்கின்றன. இம்மின்சமிங்ஞைகளை உருவாக்க, சோடியம் அயன்கள் அத்தியாவசியமாக விளங்குகின்றன.
உடலின் ஆரோக்கியத்திற்கு(For the health of the body)
உப்பானது உடல் செயல்பாட்டிற்கு உதவுவதோடு, உடலின் ஆரோக்கியத்தை காப்பதிலும் பங்கு கொள்கிறது. சத்துப் பொருட்களை உறிஞ்சி உடல் முழுவதும் கடத்துவதிலும், இரத்த அழுத்தத்தை சீராக வைப்பதிலும், உடலின் திரவ நிலையை சீராக வைப்பதிலும், தசைகளின் சீரான இயக்கத்திற்கும் உப்பானது உதவுவதாக கண்டறியப்பட்டுள்ளது.
போதுமான அளவு உப்பினால், சிறப்பான தூக்கம், ஆரோக்கியமான உடல் எடை, சீரான ஹார்மோன் சமநிலையும் கிடைப்பதாக ஆய்வில் கண்டறியப் பட்டுள்ளது.
உணவின் சுவையை கூட்ட (To increase the taste )
உணவில் சேர்க்கப்படும் உப்பானது கரிப்பு சுவையுடன், உணவின் சுவையை கூட்டும் தன்மை பெற்றிருப்பக கண்டறியப்பட்டுள்ளது.
அதேசமயத்தில், விரும்பத்தகாத சுவையை அது குறைப்பதாகவும், ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது. குறிப்பாக, கசப்பு அல்லது அதீத புளிப்பு சுவை கொண்ட பண்டத்துடன் உப்பினை சேர்க்கும் பொழுது, கசப்பு அல்லது புளிப்பு தன்மை குறைவதுடன், அப்பண்டத்தின் சுவை அதிகரிப்பதும் காண முடிகிறது.
உணவு பதப்படுத்தியாக (Food processor)
உப்பு ஒரு சிறந்த உணவு பதப்படுத்தியாகும். அதாவது, உணவினை நீண்ட நாள் கெடாமல் பாதுகாக்கும் தன்மை கொண்டது. அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் ஊறுகாய், மோர் மிளகாய் உள்ளிட்ட உணவு பொருட்கள் இதற்கு சிறந்த சான்றுதானே. தீங்கற்ற தன்மை, விலை மலிவு உள்ளிட்ட காரணங்களால், தொன்று தொட்டு, உப்பானது பதப்படுத்தியாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.
தகவல்
அக்ரி.சு சந்திரசேகரன்
வேளாண் ஆலோசகர்
அருப்புக்கோட்டை
மேலும் படிக்க...
மகசூலை அதிகரிக்க, எளிய முறையில் எலிகளை பிடிக்கும் தொழில்நுட்பம்!
Amla benefits: குளிர்கால சிக்கல்களிலிருந்து உங்களை காக்கும் "நெல்லிக்கனி"- இயற்கையின் வரப்பிரசாதம்!!