Health & Lifestyle

Friday, 01 April 2022 12:16 PM , by: Elavarse Sivakumar

கோடை காலம் என்றவுடனேயே வெயிலும், அதனால் ஏற்படும் வியர்வையுமே நம் நினைவுக்கு வரும். நம் அனைவருக்கும் மனஅளவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்துவது இந்த வியர்வை. வழிந்தோடும் வியர்வையும், அத்துடன் உருவாகும் துர்நாற்றமும், நம்மைப் பார்க்கும்போது, மற்றவர்களை முகம் சுழிக்க வைக்கும். நம் அருகில் வருவதற்கே விரும்பமாட்டார்கள்.

இவ்வாறு பாதிக்கப்பட்டு, வேதனைப்படுவரா நீங்கள்? அப்படியானால் இந்த தகவல் உங்களுக்குத்தான். கோடை காலத்தில் உணவுப் பழக்கத்தில் சில மாற்றங்களை மேற்கொண்டாலே போதுமானது. வியர்வையைக் குறைக்கவும், உடல் துர்நாற்றத்தை கட்டுப்படுத்தவும் உதவும் சில உணவுப் பொருட்கள் உள்ளன.

தப்பிக்கும் வழிகள்

தண்ணீர்

போதுமான அளவு தண்ணீர் பருகுவது உடலை குளிர்ச்சியாக வைத்திருக்கவும், அதிகப்படியான வியர்வை காரணமாக ஏற்படும் நீரிழப்புகளில் இருந்து பாதுகாக்கவும் உதவும்.

நார்ச்சத்து உணவுகள்

ஓட்ஸ், முழு தானியங்கள் போன்ற நார்ச்சத்து நிறைந்த உணவுகள் செரிமானத்தை மேம்படுத்த உதவுகின்றன. உடலின் வெப்பநிலையை கட்டுக்குள் வைத்திருக்கவும், வியர்வையைக் குறைக்கவும் செரிமானம் உதவும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

ஆலிவ் எண்ணெய்

சமையலுக்கு ஆலிவ் எண்ணெய்யை பயன்படுத்துவது வளர்சிதை மாற்றத்தையும், செரிமானத்தையும் அதிகரிக்க உதவும். ஆலிவ் ஆயிலில் ஆன்டி-ஆக்சிடன்ட்கள் அதிகம் இருப்பதால், அது உடலில் வெப்பநிலை அதிகரிப்பதை தடுக்கும். வியர்வையையும் கட்டுப்படுத்தும்.


பழங்கள்

ஆப்பிள், திராட்சை, தர்பூசணி, அன்னாசி மற்றும் ஆரஞ்சு போன்ற அதிக நீர் உள்ளடக்கம் கொண்ட பழங்கள் வியர்வை அளவை குறைக்க உதவும். மேலும் ஆரஞ்சு, எலுமிச்சை, அன்னாசி போன்ற சிட்ரஸ் பழங்களில் உள்ள இயற்கையான வாசனை உடலால் உறிஞ்சப்பட்டு, சருமத்திற்கு புதிய வாசனையை ஏற்படுத்தும்.

காய்கறிகள்

செலரி, வெள்ளரி, கீரை, சிவப்பு முட்டைக்கோஸ் போன்ற காய்கறிகளை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். இவற்றுள் நீர்ச்சத்து அதிகம் உள்ளடங்கி இருக்கும். வியர்வை அளவைக் கட்டுப்படுத்தவும் இவை உதவும்.

கிரீன் டீ

கோடை காலத்தில் கிரீன் டீ பருகுவது எதிர்மறையாக தோன்றலாம். ஆனால் கிரீன் டீயில் ஆன்டி ஆக்சிடன்ட் பண்புகள் நிறைந்துள்ளன. நரம்பு மண்டலத்தை குளிர்ச்சியாகவும், வியர்வையை கட்டுக்குள் வைத்திருக்கவும் அவை உதவும்.

மேலும் படிக்க...

தினமும் 3 டம்ளர் பால் மட்டும்- அதிகரித்தால் இத்தனைச் சிக்கல்கள்!

ஐஸ் வாட்டர் குடித்தால் இதயத் துடிப்பு குறையும்- நிபுணர்கள் எச்சரிக்கை!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)