- கோடைக் காலத்தில் உடல் வெப்பம் அதிகமாக இருக்கும். இந்த நேரத்தில் பித்தம் நிறைந்த, காரம், புளிப்பு, எண்ணெய் போன்ற உணவுகளை குறைத்துக்கொள்ள வேண்டும். இந்த உணவுகளால் பித்தமும், உடல் வெப்பமும் அதிகரிக்கும்.
- இதனால், மூட்டுவலி, அரிப்பு, சிறுநீர் கழிக்கும்போது எரிச்சல், முகத்தில் கட்டி, உடல் வலி போன்றவை ஏற்படும். கோடைக் காலத்தில், குளிர்ச்சி தரக்கூடிய உணவுகளான கேழ்வரகு, பச்சைப் பயறு, பாசிப் பருப்பு, நீர்க் காய்கள், கீரைகள், இளநீர், இஞ்சி மற்றும் பச்சை மிளகாய் சேர்க்காத நீர் மோர் சாப்பிடலாம்.
- குளிர் காலத்தில் செரிமான சக்தியின் ஆற்றல் அதிகமாக இருக்கும். பொங்கல், பூரி போன்ற எண்ணெய் நிறைந்த, செரிமானத்துக்கு நேரம் ஆகக்கூடிய உணவைச் சாப்பிட்டாலும் செரிக்கக் கூடிய ஆற்றல் உடலில் இருக்கும். நல்லெண்ணெய், பசு நெய் சேர்த்த உணவுகள் சாப்பிடலாம். இதனால் சரும வறட்சி இருக்காது. நீண்ட நேரத்துக்குப் பசிக்காத வகையில், நார்ச்சத்து நிறைந்த உணவுகளை சாப்பிடலாம்.