- ஊட்டச் சத்து நிறைந்த, திட உணவு உட்கொள்ள பல்வேறு உணவு வகைகளைத் தேர்வு செய்தல்.
- கர்ப்பகாலம் மற்றும் தாய்ப்பால் கொடுக்கும் காலங்களில் கூடுதல் நீரும் உணவும், அதிக கவனமும் தேவை.
- பிறந்த குழந்தைக்கு 4-6 மாதத்திற்கு தாய்ப்பால் கொடுப்பது மிகவும் அவசியம். இரண்டு ஆண்டுகள் வரை தாய்ப்பால் கொடுக்கலாம்.
- குழந்தைக்கு திட உணவுகளை 4-6 மாதத்தில் இருந்து துவங்க வேண்டும்.
- குழந்தைகளும், விடலைப் பருவத்தினரும் நல்ல உடல் நலனைப் பெறவும் நோய் எதிர்ப்புசக்திக்கும் , போதுமான அளவு ஊட்ட உணவு உட்கொள்ள வேண்டும்.
- கீரைகள், காய்கறிகள் மற்றும் பழங்களை அதிக அளவில் உண்வில் சேர்த்துக் கொள்ளவேண்டும்.
- சமையல் எண்ணெய்கள் மற்றும் வனஸ்பதி / நெய் / வெண்ணெய் ஆகியவற்றைக் குறைவாகப் பயன்படுத்தவும்.
- உடல் பருமன் மற்றும் அதிக எடையைத் தவிர்க்க அதிகமாக உணவு உட்கொள்ளக் கூடாது. உடல் பயிற்சி செய்து உடல் எடையைப் பராமரிக்கவும்.
- மிதமான அளவு உப்பு சேர்த்துக் கொள்ளவும்.
- சுத்தமான, பாதுகாப்பான உணவை உட்கொள்ளவும்.
- சுகாதாரமான உணவுப் பழக்க வழக்கங்களையும் சமையல் முறைகளையும் பின்பற்ற வேண்டும்.
- அதிகமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். மிதமான அளவு பானங்கள் குடிக்கவும்.
- பதப்படுத்தப்பட்ட, டின்னில் அடைத்த உணவுபொருட்களை கவனமாக உட்கொள்ளவும். குறைவான அளவு சக்கரையை சேர்க்கவும்.
- வயதானவர்கள், தங்களை சுறுசுறுப்பாகவும், ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்வது அவசியம்.
ஊட்டம் நிறைந்த திட உணவை, பல்வேறு உணவு பொருட்கள் மூலம் தேர்வு செய்ய வேண்டும்
- நல்ல முறையில் நிலையான வாழ்வு வாழ ஊட்டச்சத்து அடிப்படைத் தேவை.
- பலவகை உணவுமுறை, வாழ்கைக்கு மட்டுமின்றி, ஊட்டச்சத்திற்கும், உடல் நலத்திற்கும் அவசியம்.
- அனைத்து உணவு வகைகளில் இருந்து தயார் செய்யப்படும் திட உணவில், தேவையான அளவு ஊட்டச்சத்து கிடைக்கிறது.
- அதிக அளவு ஊட்டச்சத்து நிறைந்த தானியங்கள், கீரைகள், கிழங்கு சிறுதானியங்கள் மற்றும் பயறுவகைகளில் அதிகமாக உட்கொள்ளவும் அதிகமான அளவு ஊட்டச்சத்து கிடைக்கிறது.
- நல்ல தரமான புரதம் மற்றும் கால்சியம் (சுண்ணாம்புச் சத்து) நிறைந்த பாலை, கைக்குழந்தைகள், குழந்தைகள் மற்றும் பெண்களுக்கான திட்ட உணவில் கண்டிப்பாக சேர்த்துக் கொள்ள வேண்டும்.
- எண்ணெய் மற்றும் முந்திரி பருப்புகளில் அதிக அளவு சக்தி உள்ளது.
- முட்டை, மாமிச மீன், முட்டை, இறைச்சி உணவுகள் மற்றும் மீன் போன்ற திட உணவின் தரத்தை உயர்த்துகின்றன. எனினும் சைவ உணவு உண்பவர்கள் தானியங்கள், பயறுகள், கீரைகள், கிழங்கு மற்றும் பால் பொருட்களில் இருந்து கிடைக்கும் அனைத்து வகை ஊட்டச்சத்துகளையும் பெறலாம்.
- காய்கறிகள் மற்றும் பழங்களில் வைட்டமின் மற்றும் தாது உப்புசத்துளும் உள்ளன.
- வயது, உடல்நிலை, வேலை ஆகியவற்றிற்கேற்ப உணவைத் தேர்வு செய்யவும்.
- தானியங்கள், பயறுகள் மற்றும் கீரைகள் ஆகியவற்றைக் கலந்து உண்ணவும். சக்தி பற்றாக்குறையை ஈடுசெய்ய, வெல்லம் / சக்கரை அல்லது சமையல் எண்ணெய் சேர்க்கவும்.
- அதிக அளவு, பச்சைக் காய்கறிகள் மற்றும் பழங்கள் சேர்க்கவும்.
- கர்ப்பிணி பெண்கள், தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் குழந்தைகளுக்கான திட்ட உணவில், பால், முட்டை மற்றும் மாமிச உணவுகளை சேர்க்கவும்.
- வயது முதிர்ந்தோர்க்கு குறைந்த அளவு கொழுப்புள்ள புரதம் நிறைந்த, மீன், பயறுகள் மற்றும் குறைந்த கொழுப்புள்ள பால் ஆகியவற்றைச் சேர்க்கவும்
- நல்ல சுகாதார உணவு பழக்க வழக்கங்களையும் முறையான உடற் பயிற்சியையும் பின்பற்றவும்.
English Summary: Selection of nutrient rich foods
Published on: 16 November 2018, 04:55 IST