மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 9 August, 2022 11:04 AM IST

உடலைக் குறைக்க விரும்புபவர்கள் முதல், உடல்நலத்தில் அக்கறை செலுத்துபவர்கள் வரை, அனைவருமே காலையில் எலுமிச்சை ஜூஸைக் குடிப்பதைப் பழக்கமாகக் கொண்டிருப்பார்கள். அப்படி, தினமும் எலுமிச்சை சாறு பருகுவதில் தவறில்லை. எலுமிச்சை சாறை அதிகமாக ருசிப்பது நன்மை அளிக்காது.

எலுமிச்சை சாறு கலந்த பானம், செரிமானத்திற்கு உதவும். சருமத்திற்கு நன்மை அளிப்பதுடன், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும் என்று நம்பப்படுகிறது. ஆனால், அந்த எலுமிச்சைச் சாறை அதிகமாக ருசிப்பது நன்மை அளிக்காது.

தலைவலி

சிட்ரஸ் பழங்கள் பெரும்பாலும் ஒற்றைத் தலைவலி மற்றும் தலைவலியைத் தூண்டும். எலுமிச்சையில் டைரமைன் என்ற இயற்கையான மோனோ அமைன் உற்பத்தி செய்யப்படுகிறது. இது அடிக்கடி தலைவலியை உண்டாக்கும். எனவே, தொடர்ந்து தலைவலியை அனுபவிப்பவராக இருந்தால், எலுமிச்சை சாறு உட்கொள்வதை குறைக்க வேண்டும்.

பற்சிதைவு

உண்மையில், எலுமிச்சை நீரை அதிகமாக பருகினால் பக்க விளைவுகள் ஏற்படும். எலுமிச்சை, அதிக அமிலத்தன்மை கொண்ட சிட்ரஸ் பழ வகையை சேர்ந்தது. ஒரு நபர் எலுமிச்சை சாறை அதிகமாகவோ, அடிக்கடியோ உட்கொண்டால் அதிலுக்கும் அமிலத்தன்மை காரணமாக பல் சிதைவை சந்திக்க நேரிடும்.பற்களில் எலுமிச்சை சாறு நேரடியாக வெளிப்படுவதை தவிர்க்க ஸ்ட்ரா பயன்படுத்தலாம்.

நோய்க்கிருமிகள்

எலுமிச்சையின் தோல் பகுதிகள் தீங்கு விளைவிக்கும் நோய் கிருமிகளுக்குப் புகலிடம் அளிக்கின்றன. உணவங்களில் பெரும்பாலும் எலுமிச்சை பானங்களுடன் எலுமிச்சை துண்டுகளும் பரிமாறப்படுகின்றன. எலுமிச்சையின் தோலில் ஆபத்தான நோய்களை உண்டாக்கும் நுண்ணுயிரிகள் இருப்பதாக பல்வேறு ஆய்வுகள் நிரூபித்துள்ளன. எனவே எலுமிச்சை பழத்தை சாறு பிழிந்து சாப்பிடுவதுதான் நல்லது.

வாய்ப்புண்

சிட்ரஸ் பழங்கள் வாய் புண்களை ஏற்படுத்துவதாக அறியப்படுகிறது. எனவே வாய் பகுதியில் வெடிப்பு, கொப்புளங்கள், புண்கள் இருந்தால் அவை ஆறும் வரை எலுமிச்சை சாறு பருகாமல் இருப்பது நல்லது.

வயிற்று உபாதை

சிட்ரஸ் பழங்களை அதிகமாக உட்கொள்பவர்கள் பெரும்பாலும் இரைப்பை குடல் பிரச்சினைகள், நெஞ்செரிச்சல், குமட்டல் மற்றும் வாந்தி போன்றவற்றால் பாதிக்கப்படுகின்றனர்.

எவ்வளவு உகந்தது?

தினமும் எலுமிச்சை சாறு பருகுவதில் தவறில்லை. எத்தனை பழங்கள் பயன்படுத்துகிறோம் என்பது முக்கியம். தினமும் இரண்டு எலுமிச்சை பழங்கள் பயன்படுத்தலாம். அதுபோல் ஒன்று அல்லது இரண்டு டம்ளர் எலுமிச்சை ஜூஸ் உட்கொள்ளலாம்.

மேலும் படிக்க...

சைக்கிள் எஸ்ஐ-ஒன்றல்ல, இரண்டல்ல, 22 ஆண்டுகள்!

பிரஷர் அதிகமானால் ஒரு கப் தயிர் போதும்!

English Summary: Side effects of lemon juice!
Published on: 09 August 2022, 11:04 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now