குழந்தைகள் சிலர் பல திருக்குறளை அசால்டாக சொல்வார்கள். உலக நாடுகளின் தலைநகரங்களின் பெயர்கள், கடினமான கணக்குகளை தீர்த்தல் மேலும் பல தகவல்களை விரல் நுனியில் வைத்திருப்பார்கள். வயதை விடவும் அதிவேகத்துடன் அறிவாக செயல்படும் குழந்தைகளின் ஐக்யூ லெவல் தான் இதற்கு முக்கிய காரணமாகும்.
குழந்தைகளை இப்படி அறிவாளியாக வளர்க்க விரும்புவது பெற்றோர்களின் ஆசையாகும். ஆனால் அனைத்து குழந்தைகளுக்கும் ஒரே அளவிலான ஐக்யூ இருப்பதில்லை. இருப்பினும், ஒரு குழந்தை வளரும் போது ஒரு சில பயற்சிகளை வழங்கினால் அவர்களின் ஐக்யூ நாளடைவில் அதிகரிக்க வாய்ப்புள்ளது. குழந்தைகளின் ஐக்யூவை அதிகரிக்கும் சில பயிற்சிகளை இங்கு காண்போம்.
விளையாட்டு (Sports)
நன்றாக படிப்பவர்களை மட்டுமல்ல, நன்றாக விளையாட தெரிந்தவர்களுக்கும், கல்லூரி மற்றும் அலுவலங்களில் சிறப்பு இடம் அளிக்கப்படும். மூளையின் செயல்பாட்டை இயற்கையாகவே அதிகரிக்கிறது விளையாட்டு. இது, உடலில் எண்டோர்பின்களை வெளியிடுவதால், மூளையின் செயல்பாடு மற்றும் திறனை அதிகரிக்கிறது என பல ஆய்வுகள் தெரிவிக்கிறது. குழந்தைகளுக்கு அவர்களுக்கு பிடித்த ஒரு விளையாட்டை கற்க மற்றும் பயிற்சி பெற பழக்கினால், அவர்களின் ஐக்யூவை அதிகரிக்க வைக்கும்.
கணிதம் (Mathematics)
சிறு வயதிலிருந்தே கணக்கு போட கற்றுக் கொடுக்க வேண்டும். எளிமையான கணக்குகள் குழந்தைகளின் ஞாபகத் திறனை அதிகரிக்கும் படி கேட்டு கொண்டே இருக்க வேண்டும்.
இசைக்கருவிகள் (Musical instruments)
இசைக்கருவிகளை கற்கும் பொழுது, மூளை முழுவதுமாக செயல்படும். குழந்தைகள் ஒரு இசைக்கருவியை கற்று கொள்ளச் செய்யும் போது, சிறு சிறு நுணுக்கங்கள் பற்றிய புரிதல் தானாகவே வரும். இதனால் அவர்களின் மூளை எந்த விஷயத்தையும் பகுத்தறிய முற்படும்.
புதிர்கள் (Quiz)
மூளையை உபயோகித்து விளையாடப்படும் புதிர் விளையாட்டுகள், கிராஸ் வேர்டு பசல் ஆகியவற்றை தினசரி 10 நிமிடங்கள் விளையாட ஒதுக்க பழக்குங்கள். இந்த விளையாட்டில் வரும் புதிர்களை தீர்ப்பது அவர்கள் மூளையை புதுப்புது விஷயங்களை எப்படி கையாள்வது என குறித்து யோசிக்க வைக்கும். மேலும் அவர்களின் சமாளிக்கும் திறனையும் அதிகரிக்கும்.
மூச்சுப்பயிற்சி (Breathing)
தினசரி மூச்சுப் பயிற்சி செய்வதால் உடலின் செயல்பாடு சீராக இருக்கும். மனதை ஒருநிலைப்படுத்த தியானம் உதவும். இவையிரண்டும், குழந்தைகளை ஒரு முகப்படுத்த செய்யும். குழந்தைகள் 10 நிமிடங்கள் தியானம் செய்யும் போது, மூளையின் செயல் திறன் அதிகரிக்கும் என ஆய்வு முடிவுகள் கூறுகின்றன. ஆகவே அதிகாலையிலும், உறங்குவதற்கு முன்பாகவும் தியானம், மூச்சுப் பயிற்சிகளை மேற்கொள்ள குழந்தைகளை பழக்கப்படுத்துங்கள்.
மேலும் படிக்க