Health & Lifestyle

Monday, 27 September 2021 10:29 AM , by: Elavarse Sivakumar

Credit : Pixomatic

நாம் தினமும் குளிக்கும் நீரில் ஒரு கிண்ணம் பால் கலந்தால் போதும். சரும நோய்கள், சரும பிரச்சனைகள், சரும பாதுகாப்பிற்காக செய்யும் செலவுகள் அனைத்தும் மிச்சமாகும்.

உடல் ஆரோக்கியத்திற்கு (For physical health)

குளிப்பது உடலை சுத்தப்படுத்த மட்டுமல்ல, உடல் புத்துணர்ச்சி பெறவும் மிகவும் இன்றியமையாதது.குறிப்பாக அன்றாடக் குளியல், பல வித நோய்களை விரட்டுவதுடன், உடல் ஆரோக்கியத்திற்கும் அடித்தளம் அமைத்துக்கொடுக்கும்.

அந்த வகையில், பாலைப் பயன்படுத்துவது, உடலைப் பரிசுத்தமாக்கும்.
அதனால்தான், பண்டையக் காலத்தில் ராஜாக்கள், ராணிகள் பாலால் குளிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார்கள். அவ்வாறு பாலால் குளிப்பதன் மூலம் சரும நோய்கள், சரும பிரச்னைகளுக்குக் குட்பை சொல்வதுடன், சருமப் பாதுகாப்பிற்காக செய்யும் செலவுகள் அனைத்து மிச்சமாகும்.

பால்- தண்ணீர் குளியல் (Milk- water bath)

அதற்காக லிட்டர் கணக்கில் பாலில் குளிக்க வேண்டும் என்று அவசியமில்லை. ஒரு பக்கெட் குளிக்கும் நீரில் ஒரு கிண்ணம் பால் சேர்த்தால் போதும். இதனால் பார்லருக்கு செய்யும் செலவுகள், சரும பிரச்சனைகளுக்காக செய்யும் மருத்துவச் செலவுகள் அனைத்தும் மிச்சமாகும்.

நன்மைகள் (Benefits)

குளிக்கும் நீரில் ஒரு கிண்ணம் பால் அல்லது பால் பவுடரை கலக்க வேண்டும். இதற்காக, நீங்கள் சாதாரண பால் மட்டுமல்லாது, தேங்காய் பால், ஆடு பால், சோயா பால் போன்றவற்றையும் பயன்படுத்தலாம்.

பாலில் இருக்கும் புரதங்கள், கொழுப்புகள், வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் லாக்டிக் அமிலம் வறண்ட சருமத்த்திற்கு ஈரப்பதம் அளித்து இறந்த செல்களை நீக்க உதவுகின்றன. பால் குளியல், தோல் அரிப்பு, தோலழற்சி போன்ற தோல் நோய்களிலிருந்து நிவாரணம் அளிக்கும்.

தோல் வெடிப்பு (Skin rash)

குளியல் நீரில் பால் சேர்ப்பது சொரியாசிஸ் அறிகுறிகளைக் குறைக்கும். இந்த அறிகுறிகளில் அரிப்பு, தோல் வெடிப்பு போன்றவை அடங்கும். விஷச் செடி காரணமாக, தோல் அரிப்பு, தோல் சிவத்தல் அல்லது வீக்கத்தினால் அவதிப் பட்டால், பால் குளியல் மூலம் நிவாரணம் கிடைக்கும்.

புத்துணர்ச்சி

பாலில் உள்ள வைட்டமின் ஏ, வைட்டமின் டி, புரதம், கொழுப்பு, அமினோ அமிலங்கள் சூரிய ஒளியால் பாதிக்கப்பட்ட சருமம் புத்துணர்வு பெற உதவும்.
குடிக்கக்கூடாது. பால் கலந்த இந்த குளியல் தண்ணீரை ஒருபோதும் குடிக்க கூடாது.

ஒரு பக்கெட் தண்ணீரில் ஒரு கப் பால் பலவித அற்புதங்களைச் செய்வதால், இதனை நாம் அன்றாட வாழ்வில் சேர்த்துக்கொள்வோம்.

மேலும் படிக்க...

மைதா கெடுதல் விளைவிக்கும் என்று சொல்வது ஏன்?

மருத்துவக் குணங்கள் நிறைந்த ஓமத்தின் பயன்கள்!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)