உணவே முக்கியம்
நாம் இந்த வாழ்வை வாழ்வதற்கு மிக முக்கிய காரணம் உணவு தான். உணவு இல்லையென்றால் நமது உடலுக்கு ஆற்றல் கிடைக்காது. அதுவும் சாப்பிட கூடிய உணவு மிக ஆரோக்கியம் கொண்டதாக இருக்க வேண்டும். காலை நேரத்தில் ஆரோக்கியமான சில முக்கிய உணவுகளை சாப்பிட்டாலே சத்துக்கள் உடலில் அதிகம் சேருமாம்.
பப்பாளி
காலை நேரத்தில் நீங்கள் பப்பாளியை உங்கள் உணவில் சேர்த்து கொண்டால் ஏராளமான நன்மைகள் நடக்குமாம். குறிப்பாக முக அழகு கூடுதல், செரிமான பிரச்சினை, அழுக்குகள் வெளியேற்றம் ஆகிய நன்மைகள் உடலுக்கு நடக்கும். அதுவும் இதன் மீது எலுமிச்சை சாறு சேர்த்து சாப்பிட்டால் அதிக பயன்கள் கிடைக்கும்.
சியா விதைகள்
பார்ப்பதற்கு மிக சிறியதாக உள்ள இந்த விதைகள் தான், உங்களின் முக அழகிற்கு பெரிதும் உதவுகின்றன. இதில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் அதிகம் இருப்பதால் முகத்தை மிக மென்மையாகவும், பொலிவாகவும், எந்த வித பிரச்சினைகளும் முகத்தில் ஏற்படாதவாறு பார்த்து கொள்ளும். அத்துடன் நகங்களையும் உடையாமல் பார்த்து கொள்ளும்.
முட்டை
சிறந்த மற்றும் மிக எளிமையான உணவு இந்த முட்டை தான். உங்களின் காலை உணவில் முட்டையை சேர்த்து கொண்டால் பல்வேறு நலன்கள் கிடைக்கும். முட்டை நமது ஆரோக்கியத்தை சீராக வைப்பதோடு, உடல் பருமன், முக அழகு போன்ற பல பிரச்சினைகளுக்கு தீர்வு தரும்.
அகாய் பெரி
கால்சியம், வைட்டமின் எ, இரும்பு சத்து, பாஸ்பரஸ் போன்ற பலவித ஊட்டச்சத்துக்கள் அதிகம் உள்ள இந்த அகாய் பெரி எண்ணற்ற பலன்களை தரவல்லது. நீங்கள் தினமும் காலை உணவில் இந்த பெரிய சேர்த்து சாப்பிட்டு வந்தால் நீண்ட நாட்கள் இளமையாக இருக்கலாம். ஏனெனில், இதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் செல்கள் சிதைவடையாமல் தடுத்து நற்பயன்களை தரும்.
கிரீன் டீ
நீங்கள் அதிக இளமையுடன் இருக்க இந்த எளிய டீ உங்களுக்கு உதவும். தினமும் காலையில் எழுந்ததும் காபி, அல்லது வெறும் டீ குடிப்பதை தவிர்த்து கிரீன் டீ குடித்து வந்தாலே உடல் ஆரோக்கியம் மற்றும் முக ஆரோக்கியம் இரு மடங்காக அதிகரிக்கும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். மேற்சொன்ன உணவுகளை காலை வேளையில் சாப்பிட்டு வந்தாலே முக அழகு இரட்டிப்பாக கூடும்.