தீபாவளி பண்டிகைக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், அதனை உற்சாகமாகக் கொண்டாட ஏதுவாக, ஒப்பந்த தூய்மை பணியாளர்களுக்கு தீபாவளி சிறப்பு போனஸாக ரூ.5,000 வழங்குவது குறித்து தமிழக அரசு பரிசீலித்து வருகிறது.
ரத்தான சலுகைகள்
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக அரசுக்கு கூடுதலான செலவினம் ஏற்பட்டு பெரும் நிதி நெருக்கடி நிலை உருவானது. அதனால் இதனை சரி செய்யும் விதமாக அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்டு வந்த பல்வேறு சலுகைகள் ரத்து செய்யப்பட்டது.
தொடரும் சலுகைகள்
இதையடுத்து கொரோனா பரவல் குறைய தொடங்கியதை தொடர்ந்து அரசு ஊழியர்களுக்கு படிப்படியாக சலுகைகள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு, தற்செயல் விடுப்பு உள்ளிட்ட சலுகைகள் வழங்கப்பட்டன.இதையடுத்து பண்டிகை தினத்தை முன்னிட்டு மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்களுக்கு போனஸ் தொகையானது வழங்கப்படுவது வழக்கமாகும். அந்த வகையில் வருகிற 24ம் தேதி அன்று தீபாவளி பண்டிகையானது தமிழக மக்களால் கோலாகலமாக கொண்டாடப்பட இருக்கிறது.
தித்திக்கும் தீபாவளி
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அனைத்து ஊழியர்களுக்கும் போனஸ் தொகை வழங்குவது குறித்த அறிவிப்புகளை அந்தந்த மாநில மற்றும் மத்திய அரசுகள் வெளியிட்டு வருகின்றன.இதே போல் தமிழகத்தில் ஒப்பந்த தூய்மை பணியாளர்களும் தங்களுக்கு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு போனஸ் தொகையை வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.
மேலும் இது தொடர்பாக ஒப்பந்த பணியாளர் சங்கத்தினர் கோவை மாநகராட்சி துணை மேயரிடம் மனு ஒன்றை கொடுத்துள்ளனர்.
இந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, கோவை மாநகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் தூய்மை பணியாளர்களுக்கு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு போனஸ் தொகை வழங்கிட வேண்டும் எனவும் கடந்த ஆண்டை விட கூடுதலாக வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
அதன்படி கடந்த ஆண்டை விட போனஸ் தொகையாக ரூ.5,000 வழங்க வேண்டும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஊழியர்களின் இந்த கோரிக்கையை நிறைவேற்றுவது குறித்து தமிழக அரசு பரிசீலித்து வருகிறது.
மேலும் படிக்க...
செரிமானத்தை மேம்படுத்த இந்த உணவுகள் போதும்!
ஹோட்டல் நிகழ்ச்சியில் இளம் பெண்களுக்கு பானம் இலவசம் - வித்தியாசமான விளம்பரம்!