வேளாண் பட்ஜெட்: ஊக்கத்தொகை உட்பட 50 பரிந்துரைகளை வழங்கிய தமிழ்நாடு இயற்கை வேளாண்மை கூட்டமைப்பினர்! வேளாண் பட்ஜெட்: ஊக்கத்தொகை உட்பட 50 பரிந்துரைகளை வழங்கிய தமிழ்நாடு இயற்கை வேளாண்மை கூட்டமைப்பினர்! உலகளவில் 2 % வரை சரிவு கண்ட உணவுப் பொருட்களின் விலை: FAO ரிப்போர்ட் உலகளவில் 2 % வரை சரிவு கண்ட உணவுப் பொருட்களின் விலை: FAO ரிப்போர்ட் cattle feed Azolla: அசோலா வளர்ப்புக்கு ஏற்ற சூழ்நிலைகள் என்ன? cattle feed Azolla: அசோலா வளர்ப்புக்கு ஏற்ற சூழ்நிலைகள் என்ன? குறுவை பருவத்தில் 26 பயிர்களுக்கான பயிர் காப்பீடு- அமைச்சர் முக்கிய அறிவிப்பு! குறுவை பருவத்தில் 26 பயிர்களுக்கான பயிர் காப்பீடு- அமைச்சர் முக்கிய அறிவிப்பு! நம்மாழ்வரின் மாணவர்- விதைகளின் காதலன்: நம்பிக்கையூட்டும் சாலை அருண் நம்மாழ்வரின் மாணவர்- விதைகளின் காதலன்: நம்பிக்கையூட்டும் சாலை அருண் கேள்விக்குறியான குறுவை சாகுபடி- டெல்டா விவசாயிகளுக்கு மானியத் திட்டத்தை வழங்கிட உத்தரவு! இலவச இயற்கை வேளாண் உற்பத்தியாளர் பயிற்சி- எங்கே? எப்போது? விவசாயிகளுக்கு பசுந்தாளுர விதைகள்- புதிய திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர்! Kisan Call Centre- ஒரே போன் காலில் விவசாய பிரச்சினைகளுக்கு தீர்வு!
Updated on: 27 April, 2022 9:52 AM IST
Spicy curry powder to protect the liver!

சமையலுக்குப் பயன்படுத்திவிட்டுத் தூக்கி எறியப்படும் கறிவேப்பிலையில், நம் ஆரோக்கியத்திற்குத் தேவையான பல நன்மைகள் உள்ளன. அவற்றைக் கண்டறிந்து, அன்றாட உணவில் சேர்த்துக்கொண்டால், கவலையில்லா வாழ்வு உங்களுக்கும் சாத்தியமே.

அந்த வரிசையில், கறிவேப்பிலை இலைகளையோ அல்லது அந்த இலையின் பொடியையோ அதிகம் சாப்பிட்டு வர இரத்த சோகை நீங்கி சிவப்பு இரத்த அணுக்கள் விருத்தி உண்டாகும்.

கறிவேப்பிலையை உணவில் சேர்க்கும்போது, சாப்பிடும் எண்ணம் பெரும்பாலும் வருவதில்லை. ஏனெனில், விலை மலிவாகக் கிடைப்பதால், இதனை யாரும் மதிப்பதே இல்லை. எனவே கறிவேப்பிலையைச் சாப்பிட, அதனைக்கொண்டு ஒரு பொடி செய்து, இட்லியுடன் சேர்த்துச் சாப்பிட்டு வர, நீண்ட கால, கல்லீரல் பிரச்னைகள் தீரும்.

கறிவேப்பிலை பொடி இட்லி

தேவையான பொருட்கள் :

மினி இட்லி - 20

நெய் - ஒன்றரை டேபிள்ஸ்பூன்

அரைக்க:

கறிவேப்பிலை - 2 கப்
கடலைப்பருப்பு - 2 டேபிள்ஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 4
உளுந்தம் பருப்பு - 1 டேபிள்ஸ்பூன்
சீரகம்                 - 1 டேபிள்ஸ்பூன்
மிளகு                  - 1 டேபிள்ஸ்பூன்
பெருங்காயத்தூள் - 1 டேபிள்ஸ்பூன்
உப்பு                    - தேவையான அளவு
கடுகு                   - அரை டேபிள்ஸ்பூன்

தாளிக்க 

கடுகு - சிறிதளவு,
உளுந்தம் பருப்பு - சிறிதளவு,
காய்ந்த மிளகாய் - 2

செய்முறை 

அரைக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை வாணலியில் எண்ணெய் விடாமல் சிவக்க வறுத்து ஆறியதும் மிக்சியில் போட்டு கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும். இப்போது கறிவேப்பிலை பொடி ரெடி.

மற்றொரு கடாயை அடுப்பில் வைத்து சூடானதும் ஒரு டீஸ்பூன் நெய் ஊற்றி உருகியதும் கடுகு, உளுந்தம் பருப்பு, காய்ந்த மிளகாய் சேர்த்து தாளித்த பின்னர் மினி இட்லி, கறிவேப்பிலை பொடி சேர்த்து மீதம் இருக்கும் நெய்யை சிறிது சிறிதாக ஊற்றி இறக்கி பரிமாறவும். சூப்பரான சத்தான கறிவேப்பிலை பொடி இட்லி ரெடி.

மேலும் படிக்க...

மனஅழுத்தத்தைக் குறைத்து, ஆயுளை அதிகரிக்கும் Brisk Walk!

உடல் பருமனைக் குறைக்க உதவும் மாம்பழம்- இத்தனை நன்மைகளா?

 

English Summary: Spicy curry powder to protect the liver!
Published on: 26 April 2022, 07:22 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now