ஒற்றைக் காலில் குறைந்தபட்சம், 10 வினாடிகள் நிற்கத் திணறும் 50 வயதினருக்கு, 10 ஆண்டுகளுக்குள் மரணம் ஏற்படும் ஆபத்து உள்ளதாக ஆய்வொன்றில் தெரிய வந்துள்ளது. பிரிட்டனைச் சேர்ந்த, 'ஸ்போர்ட்ஸ் மெடிசன்' என்ற பத்திரிகை உடல் நலம் சார்ந்த ஆய்வுக் கட்டுரையை வெளியிட்டுள்ளது.
ஒற்றைக்காலில் நிற்பது (Standing on one leg)
அதில் கூறப்பட்டுள்ளதாவது: பிரேசிலில், 50 வயதினரின் உடல் திடகாத்திரம் குறித்து, 1,702 பேரிடம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதை, பிரேசில், அமெரிக்கா, பின்லாந்து, ஆஸ்திரேலியா, பிரிட்டனைச் சேர்ந்த அறிஞர்கள் மேற்கொண்டனர். இதில் பங்கேற்றவர்களிடம், கைகளை மேலே துாக்கி, ஒரு காலை மடக்கி இடது கால்முட்டியில் வைத்து, 10 வினாடிகள் நிற்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டது. மூன்று முறை அவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது.
இதில் ஐந்தில் ஒருவர் நிற்க முடியாமல் போனது தெரிய வந்தது. இத்தகையோர் கால் வலுவின்றி வழுக்கி விழும் அபாயம் உள்ளது. வலுவற்ற கால்கள் காரணமாக அவர்கள் அடுத்த, 10 ஆண்டுகளில் தடுக்கி விழுந்து உயிரிழக்கும் அபாயம் உள்ளது. தினமும் ஒற்றைக் காலில் நிற்கும் பயிற்சி செய்வோரின் கால்கள் வலுவாக இருக்கும் என்பதால், அவர்கள் சுலபமாக கீழே விழுந்து மரணம் அடைய அதிக வாய்ப்பில்லை.
உலகளவில் ஆண்டுக்கு, 6.80 லட்சம் பேர் கால் வலுவின்றி வழுக்கி விழுந்து மரணம் அடைகின்றனர் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க