உடல் ஆரோக்கியத்தில் அக்கறை கொண்டவர்கள் நிச்சயம் தயிரை மோராக்கிக் குடிப்பதையேப் பழக்கமாகக் கொண்டிருப்பர். ஏனெனில், தயிரைப் பெருக்கி நீராக்கிப் பருகுவதுதான், நாம் உண்மையான ஆரோக்கியத்தைப் பெறுவதற்கான வழிமுறை. அதிலும் கோடை வெயில் தொடங்கிவிட்ட நிலையில், அன்றாடம் மோர் பருகுவதே நல்லது.
ஆனால் சாதாரணமாக மோரைப் பருகாமால், சிலப் பொருட்களைச் சேர்ந்த மசாலா மோராக மாற்றிப் பருகினால், பயன்கள் நீங்கள் வியக்கும் அளவுக்கு இருக்கும். ஏன் தொப்பையைக் கூடக் கரைக்க உதவுகிறது இந்த மசாலா மோர்.
10 நாட்களுக்கு இந்த மோரை தொடர்ந்து பருகி வந்தால் தொப்பை குறைய தொடங்கும். ஏனெனில், இந்த அற்புத மோர் உடலில் தேங்கியிருக்கும் கெட்டக் கழிவுகளை வெளியேற்றி, உடலின் நீர்ச்சத்து அதிகரிக்க உதவுகிறது.
காலையில் நாம் பருகும் ஒரு டம்ளர் மோர் நம்முடைய உடலில் பல நல்ல வேலைகளைச் செய்கிறது.
மசாலா மோர் (Spicy Butter milk)
உடலுக்கு பல்வேறு அற்புத நன்மைகளை தரும் மசாலா மோர் தயார் செய்ய துவங்கும் முன், அவற்றுக்கான பொடியை முதலில் தயார் செய்து கொள்ள வேண்டும்.
தேவையான பொருட்கள்
வெந்தயம் – 1 ஸ்பூன்
சீரகம் – 1 ஸ்பூன்
மிளகு – 1/2 ஸ்பூன்
கருவேப்பிலை – 1/2 கைப்பிடி அளவு
மசாலா செய்முறை
-
அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் மேலே வழங்கப்பட்டுள்ள பொருட்களை ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து நன்றாக வறுத்துக்கொள்ளவும்.
-
இந்த பொருட்களை வறுக்க ஒரு நிமிட இடைவெளி போதும்.
-
இறுதியாக கருவேப்பிலையை வறுக்கும் போது, அவை மொறுமொறுவென வரும் வரை நன்றாக கடாயில் வறுத்து கொள்ளவும்.
-
இந்த பொருட்கள் எல்லாம் நன்றாக ஆறிய பின்னர், அவற்றை மிக்சியில் இட்டு, அதனுடன் 1/2 டீ ஸ்பூன் பெருங்காயத்தூள் சேர்த்து அரைத்துக்கொள்ளவும்.
மசாலா மோர் செய்முறை
தயிர் – 4 டேபிள் ஸ்பூன்!
இஞ்சி – ஒரு அங்குலம்
கொத்தமல்லித்தழை – சிறிதளவு
தண்ணீர் – 1/2 கப்
செய்முறை
-
ஒரு மிக்சி எடுத்து அதில் மேலேக் கொடுக்கப்பட்டுள்ளப் பொருட்களை ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து அரைக்கவும்.
-
இவற்றை அரைக்கும்போது தயிரில் உள்ள வெண்ணெய் பிரிந்து மேலே மிதந்து வரத்தொடங்கும். அப்போது ஒரு ஸ்பூன் எடுத்து மிதக்கும் வெண்ணெயை நீக்கி விடவும்.
-
இந்த மோரை வடிகட்டிய பின்னர், 1 1/2கப் அளவு தண்ணீரை ஊற்றி, தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.
-
தொடர்ந்து, முன்னர் அரைத்து வைத்துள்ள மசாலா மோர் பொடி 1/2 ஸ்பூன் அளவு எடுத்து, அவற்றை நன்றாக கலந்து 2 டம்ளரில் ஊற்றி பரிமாறினால் உடல் எடையை குறைக்க உதவும் மோர் ரெடி.
மேலும் படிக்க...