உருளைக்கிழங்கு ஒரு அருமையான கிழங்கு. எந்த வகை உணவாக இருந்தாலும், வறுவல், பொரியல், கறி, பிரியாணி, பிரட், இனிப்பு என்று எல்லா வகை உணவுகளிலும் உருளைக் கிழங்கை சேர்ப்பதால் அதன் சுவை நிச்சயமாக அதிகரிக்கும் என்பது உண்மை.
ஆனால் உருளைக்கிழங்கை வாங்கியவுடன் உட்கொள்வதால் மட்டுமே இதன் சுவை அதிகமாக இருக்கும். ஆனால் உண்மையில் மற்ற காய்கறிகளைப் போல் இதனையும் நீண்ட நாட்கள் வைத்திருந்து பயன்படுத்த முடியும்.
உருளைக்கிழங்கு
நல்ல தரமான உருளைக் கிழங்கு பல வாரங்கள் கெடாமல் இருக்கும். கடையில் அல்லது சந்தையில் இருந்து உருளைக்கிழங்கை வாங்கும்போது, நிறமாற்றம் இல்லாத, உறுதியான, சுருக்கம் எதுவும் இல்லாத உருளைக் கிழங்கை பார்த்து வாங்க வேண்டும். எந்த ஒரு வெட்டும் சேதமும் இல்லாத காயாக இருக்க வேண்டும். வீட்டில் வளர்க்கப்பட்ட உருளைக் கிழங்கையும் நல்ல முறையில் பாதுகாத்து வைக்க வேண்டும். அழுகிய உருளைக்கிழங்கு துர்நாற்றத்தை ஏற்படுத்துவதோடு மற்ற கிழங்கையும் அழுகச் செய்யும். உருளைக் கிழங்கை கெடாமல் பாதுகாக்க சில வழிமுறைகள் கொடுக்கப்பட்டுள்ளன.
உலர்ந்த இடம்
குளிர்ச்சியான, உலர்ந்த இடங்களில் உருளைக் கிழங்கை வைத்துக் கொள்ளுங்கள். காற்றோட்டம் மிகுந்த குளிர்ச்சியான இடத்தில் உருளைக்கிழங்கை வைப்பது முதல் படியாகும். அதிக வெளிச்சம் படும் இடங்களில் இதனை வைக்கக் கூடாது. அதிக வெளிச்சம் உள்ள இடங்களில் உருளைக் கிழங்கை வைப்பதால் அதன் தோல் பகுதியில் பச்சை நிறம் உண்டாகிறது. இதற்குக் காரணம் உருளைக்கிழங்கில் உள்ள சொலனின் என்னும் ரசாயனம் ஆகும். இது கசப்பு தன்மையை உண்டாக்குகிறது. இப்படி பச்சை நிறம் உண்டான கிழங்கை அதிகம் எடுத்துக் கொள்வதால் பல உடல் பாதிப்புகள் உண்டாகிறது.
மற்ற பொருள்கள் சமையலறை உபகரணங்கள் சுற்றி உருளைக்கிழங்கு வைப்பதை தவிர்க்கவும். அதாவது சமையலறை சின்க் அல்லது சமையலறை உபகரணங்களை சுற்றி இருக்கும் இடங்களில் உருளைக்கிழங்கை வைப்பதால் அவை அழுகும் நிலை உண்டாகலாம். இந்த இடங்கில் அதிக வெப்பம் இருப்பதால் உருளைக்கிழங்கு அழுகலாம். அதே நேரம், உருளைக்கிழங்கை பிரிட்ஜில் வைப்பதால் அதன் சுவை மாறி விடும். குளிர்சாதன பெட்டியின் அதிக பட்ச குளிர்ச்சி, உருளைக்கிழங்கின் ஸ்டார்ச்சை சர்க்கரையாக மாற்றம் செய்து விடுகிறது.
கழுவக்கூடாது
உருளைக்கிழங்கை சேமித்து வைப்பதற்கு முன் கழுவ வேண்டாம்: உருளைக்கிழங்கை வாங்கியவுடன் கழுவி வைப்பதால் அவை அழுகும் நிலை உண்டாகலாம். அவற்றில் உள்ள ஈரப்பதம் காரணமாக விரைந்து கெட்டு விடும்/ உருளைக்கிழங்கில் ஈரப்பதம் அதிகரிப்பதால் அதன் இருப்பு நாள் குறைகிறது. சமைக்கும் முன்பு உருளைக்கிழங்கை எடுத்துக் கழுவிக் கொள்ளலாம்.
அழுகிய கிழங்கு
அழுகிய உருளைக்கிழங்கை உடனடியாக வீசி விடுங்கள். முளை விடுதல், பச்சை நிறம் உண்டாதல், அழுகுதல் போன்றவை உருளைக்கிழங்கில் பொதுவாக ஏற்படக் கூடியவை ஆகும். அவை அழுகும் நிலையில் உள்ளனவா என்பதை அடிக்கடி பரிசோதனை செய்ய வேண்டும். ஏதேனும் ஒரு உருளைக் கிழங்கு அழுகி விட்டால் உடனடியாக அதனை குப்பையில் வீசி விடுங்கள். இல்லையேல் மற்றவையும் கெட்டு விடும்.
திறந்தவெளியில்
நறுக்கிய உருளைக்கிழங்கை திறந்தவெளியில் வைக்க வேண்டாம்: நறுக்கிய உருளைக்கிழங்கை திறந்த படி நீண்ட நேரம் வெளியில் வைக்க வேண்டாம். காற்றின் வெளிப்பாட்டால் அவை நிறம் மாறி பழுப்பு நிறமாக மாறக் கூடும். தோல் நீக்கிய அல்லது பாதி நறுக்கிய உருளைக்கிழங்கை பாதுகாப்பாக வைத்திட அவற்றை நீரில் போட்டு வைக்கவும். சமைக்கும் நேரத்தில் மட்டும் வெளியில் எடுக்கவும்.