Health & Lifestyle

Wednesday, 05 May 2021 02:59 PM , by: Sarita Shekar

sugarcane juice

கோடை காலம் தொடங்கிவிட்டது. நிறைய தண்ணீர் குடிக்க வேண்டிய நேரம் இது. இந்த நேரத்தில் அதிக பழரசங்களையும் உட்கொள்வது உடலுக்கு நன்மை பயக்கும்.

கரும்பு சாறு கோடை காலத்தில்,  நம் உடலுக்கு பல்வேறு நன்மைகளை அளிக்கின்றது. இது உடலுக்கு குளிர்ச்சியை அளிப்பது மட்டுமல்லாமல், குடிக்கவும் சுவையாக இருக்கும். . உடலில் உஷ்ணத்தையும், எரிச்சலையும் ஏற்படுத்தும் வெயில் காலத்தில் கரும்புச்சாறு அமிர்தத்தைப் போல நிவாரணம் அளிக்கின்றது என்று கூறினால் அது மிகையாகாது. 

கரும்பு சாற்றில் பொட்டாசியம், கால்சியம், மெக்னீசியம், இரும்பு மற்றும் துத்தநாகம் போன்ற ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இவை வயிற்றுக்கு மிகவும் நன்மை பயக்கும். இது வயிற்றுக்கு இதமான குளிர்ச்சியையும் மென்மையையும் தருகிறது.

கரும்புகளில் இயற்கையாகவே சுக்ரோஸ் நிறைந்துள்ளது. இது உடலில் ஆற்றலை நிரப்புகிறது. பெரும்பாலும், சூடு அதிகமாக இருக்கும் நாளில், வெப்பநிலை அதிகமாக இருப்பதன் காரணமாக, வியர்வை வெகுவாக வெளியேறி அது நீரிழப்பை உண்டாக்குகிறது. இந்த நேரத்தில், கரும்புச்சாற்றை உட்கொள்வது உங்களுக்கு அதிகப்படியான ஆற்றலை அளிப்பதோடு, உடலுக்குத் தேவையான உற்சாகத்தையும் சக்தியையும் தருகிறது.   

சிறுநீர் கழிக்கும்போது சிலருக்கு எரிச்சலும் வலியும் ஏற்படுவதுண்டு. கரும்புச்சாறு இந்த பிரச்சனைகளை தீர்க்க உதவும். மேலும், சிறுநீரக கல் (Kidney stones) உள்ளவர்களுக்கும் கரும்புச்சாறு நல்ல பயன்களை அளிக்கும்.

கரும்பு சாறு செரிமானத்திற்கு மிகவும் நல்லது என்று கருதப்படுகிறது. இந்த சாற்றில் இயற்கை பொட்டாசியம் மற்றும் நார்ச்சத்து உள்ளது. இது வயிற்றை லேசாக வைத்து செரிமானத்தை மேம்படுத்துகிறது. மலச்சிக்கலால் பாதிக்கப்பட்டவர்கள் கரும்புச் சாற்றை உட்கொண்டால் நல்ல நிவாரணம் கிடைக்கும். 

 

மேலும் படிக்க..

சிறுநீரக பிரச்சினை உள்ளவர்களுக்காக நச்சுன்னு 4 டிப்ஸ!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)