Health & Lifestyle

Wednesday, 06 April 2022 02:07 PM , by: Elavarse Sivakumar

கோடை காலம் என்றவுடன் அதன் உக்கிரமும் நம் நினைவுக்கு வராமல் இருக்காது. அதிலும் தற்போது இந்தியாவில் முன் எப்போதும் இல்லாத அளவில் கோடை வெயில் வாட்டி வறுத்து எடுத்து வருகிறது. அவ்வாறு கொளுத்தும் கோடையைத் தகிக்கத் தயிர் பெரிதும் கைகொடுக்கும். இருப்பினும், கோடைகாலத்தில் சரியான நேரத்தில் தயிர் சாப்பிட்டால், சில நோய்களை விரட்டும் அற்புத மருந்தாகவும் அது செயல்படும்.

தயிர் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் என்பது அனைவருக்கும் தெரியும். கோடை காலத்தில், மற்ற உணவுகளைவிட தயிர் சாப்பிடுவது உங்கள் உடலுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். தயிரில் கால்சியம், புரதம் மற்றும் வைட்டமின்கள் ஏராளமாக உள்ளன. லாக்டோஸ், இரும்பு மற்றும் பாஸ்பரஸ் ஆகியவை இதில் அதிகம். ஆனால் இதனை சரியான நேரத்தில் சாப்பிட வேண்டியது அவசியம்.

மருத்துவ நன்மைகள்


இதய ஆரோக்கியம்


தயிர் கொலஸ்ட்ரால் உருவாவதைத் தடுக்கிறது மற்றும் உயர் இரத்த அழுத்தம் ஏற்படாமல் தடுப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. தயிரை உணவில் தொடர்ந்து சேர்த்துக் கொள்வதன் மூலம் அதிக கொலஸ்ட்ரால் அளவு மற்றும் உயர் இரத்த அழுத்தம் ஏற்படும் அபாயத்தைக் குறைக்கலாம். அதனால் உங்கள் இதய ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

எடை குறைக்க

இது உடல் எடையை குறைக்கும் சிறந்த உணவுகளில் ஒன்றாக கருதப்படுகிறது. ஏனெனில் இது நம் உடலில் கார்டிசோல் மற்றும் ஸ்டீராய்டு ஹார்மோன்களின் அதிகரிப்பைத் தடுக்கிறது. இதன் மூலம் உடல் பருமன் அதிகரிக்கும் அபாயத்தை கட்டுப்படுத்தப்படுகிறது.

தொற்று நீங்க

தயிர் சாப்பிடுவது உண்மையில் பெண்களுக்கு யோனி ஈஸ்ட் சமநிலையை மீட்டெடுக்க உதவுகிறது. ஏனெனில் தயிரில் லாக்டோபாகிலஸ் பாக்டீரியா உள்ளது. இது யோனித் தொற்றுகளைத் தடுப்பதில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

நோய் எதிர்ப்பு சக்தி

தயிர் ஒரு சிறந்த புரோபயாடிக் உணவு என்பதால், நமது குடலுக்கு சிறந்ததாக கருதப்படுகிறது. தயிரில் உள்ள பண்புகள் நோயை உண்டாக்கும் கிருமிகளை எதிர்த்துப் போராடும் சக்தி கொண்டவை. இது கிருமிகளைக் கொல்லவும், நோய் எதிர்ப்புச் சக்தியை ஆரோக்கியமாக வைத்திருக்கவும் உதவுகிறது.

எலும்புகளை பலப்படுத்தும்

தயிரில் கால்சியம் மட்டுமின்றி, பாஸ்பரஸும் அதிகம் இருப்பதால், இந்த இரண்டு சத்துக்களும் நமது எலும்புகள் மற்றும் பற்களுக்கு மிகவும் நன்மை பயக்கும். அதுமட்டுமின்றி, கீல்வாதத்தைத் தடுக்கவும் தயிர் உதவுகிறது.

தயிர் குளிர்ச்சி தரும் தன்மை கொண்டது. எனவே, இரவில் தயிர் சாப்பிட்டால் சளி, உடல் பருமன், தோல் தொடர்பான பிரச்சனைகள் ஏற்படும். எனவே, இரவில் தயிர் சாப்பிடுவதைத் தவிர்க்கவும். தயிர் எப்பொழுதும் காலை உணவுடன் சாப்பிட வேண்டும். பகலில் தயிர் சாப்பிடுவதால், உடலின் செரிமான அமைப்பு சீராக இருக்கும்.

தகவல்

டாக்டர் ரஞ்சனா சிங்

உணவு நிபுணர்

மேலும் படிக்க...

புற்றுநோய், சுகர் என பல நோய்க்குத் தீர்வு வேண்டுமா? இந்த ஒரு இலையே போதும்!

விமான நிலையத்தில் விற்பனை மையம் அமைக்க சூப்பர் வாய்ப்பு!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)