Health & Lifestyle

Friday, 25 June 2021 07:47 AM , by: Elavarse Sivakumar

Credit : Dailythanthi

கொரோனா வைரஸ் டெல்டா மற்றும் டெல்டா பிளஸ் என உருமாறி உலக மக்களை அதிர்ச்சியில் அழ்த்தி வருகிறது. மக்களுக்கு மட்டுமல்ல, விஞ்ஞானிகளுக்கும் பெரும் சவாலையும், நெருக்கடியையும் இந்த வைரஸ் ஏற்படுத்தி வருகிறது.

2 ஆண்டுகளாக (For 2 years)

முதியவர்கள், இளைஞர்கள் எனப் பாகுபாடு இன்றி அற்ப ஆயுளில் அள்ளிச் செல்லும் இந்தக் கொரோனா வைரஸ், கடந்த 2 ஆண்டுகளாக உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது.

சூப்பர் தடுப்பூசி (Super vaccine)

இந்நிலையில் எல்லா வகை கொரோனா வைரஸ்களில் இருந்தும் பாதுகாப்பு அளிக்கும் புதிய சூப்பர் தடுப்பூசி ஒன்றை விஞ்ஞானிகள் கண்டறிந்து உள்ளனர்.

விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு (Discovery by scientists)

அமெரிக்காவின் வடக்கு கரோலினாவில் உள்ள மருத்துவப் பல்கலைக்கழகத்தை சேர்ந்த விஞ்ஞானிகள், சூப்பர் வேக்சின் என்று குறிப்பிடப்படும் ஹைபிரிட் தடுப்பு மருந்தை உருவாக்கியுள்ளனர்.

பரிசோதனை (Experiment)

கொரோனா வைரசின் ஆபத்தான அமைப்பான ஸ்பைக் புரதத்தின் பல்வேறு வகைகளுக்கு எதிராக, ஆன்ட்டிபாடிகளை இந்த தடுப்பு மருந்து உருவாக்குவது, எலிகள் மீதான பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

நுரையீரல் பாதிப்பையும் தடுக்கும் (Preventing lung damage as well)

நோய்த்தொற்று ஏற்படாமல் தடுப்பதோடு, நுரையீரல் பாதிப்பு ஏற்படுவதையும் தடுப்பதாக ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த ஆண்டு (Next year)

கொரோனா நோய்த்தொற்றை உருவாக்கும் கொரோனா வைரஸ்கள் மட்டுமின்றி, விலங்குகளில் இருந்து மனிதர்களுக்கு பரவக்கூடிய வாய்ப்பு உள்ள பிற கொரோனா வைரஸ்களுக்கு எதிராகவும் தடுப்பாற்றலை ஏற்படுத்தும் வகையில், தடுப்பு மருந்து வடிவமைக்கப்பட்டுள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.இந்த தடுப்பு மருந்து அடுத்த ஆண்டில் மனிதர்களுக்கு செலுத்தி பரிசோதிக்கப்பட உள்ளது.

மேலும் படிக்க...

7.3 கோடிக்கும் அதிகமானோருக்கு Covid தடுப்பூசி!

குறைந்து வரும் கொரோனா பாதிப்பு : தமிழகத்தில் 244 நாட்களுக்கு பின் 600க்கு கீழ் குறைந்தது!!

டெல்டா பிளஸ் வகை கொரோனாவின் அச்சுறுத்தல்.மூன்று மாநிலங்களுக்கு எச்சரிக்கை!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)