உப்பு, புளி, காரம் இவை மூன்றையும் அளவோடு உணவில் சேர்த்துக்கொள்வது ஆரோக்கியத்திற்கு நல்லது. ஆனால், இவற்றைக் குறைத்துக்கொண்டோ, அல்லது இல்லாமல் சமைத்துச் சாப்பிடுவது என்பதோ சற்றுக் கடினமானதுதான்.
உடலுக்கு உகந்தது (Ideal for the body)
ஏனெனில், இவை மூன்றிலும் நம் உடலுக்குத் தேவையான பல விஷயங்கள் உள்ளன. குறிப்பாகப், புளியை எடுத்துக்கொண்டால், இந்தியாவில் நீண்ட காலமாக உணவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இது ரசம், சாம்பார், சட்னி வகைகள், சாஸ் மற்றும் சில நேரங்களில் இனிப்புகளைச் செய்வதிலும் சேர்த்துக் கொள்ளப்படுகிறது.
உணவின் சுவைக்கு அஸ்திவாரம் அமைப்பதில், புளியின் பங்கு இன்றியமையாதது எனலாம். புளிக்குழம்பு, புளிசாதம் இவற்றை நினைக்கும்போதே, நாக்கில் உமிழ்நீர் சுரக்கும்.
அதேநேரத்தில் நம் ஆரோக்கியத்திற்கும் மிகவும் பயனுள்ளதாகக் கருதப்படுவதால்தான், புளி ஆயுர்வேதத்தில் ஒரு மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது.
செரிமாணம் (Digestion)
நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிப்பது முதல் செரிமானத்தை நன்றாக வைத்திருத்தல் மற்றும் இதயத்தை நோய்களிலிருந்து காப்பது என புளி பலவிதப் பணிகளைச் செய்கிறது.
வைட்டமின்கள் சி, ஈ மற்றும் பி தவிர, கால்சியம், இரும்பு, பாஸ்பரஸ், பொட்டாசியம் மற்றும் ஃபைபர் ஆகியவையும் புளியில் ஏராளமாக உள்ளன.
மேலும், ஆன்டி-ஆக்ஸிடன்ட்களும் இதில் உள்ளன.
அழகுக்கு (For beauty)
புளியில் ஆல்பா-ஹைட்ராக்ஸி அமிலங்கள் நிறைந்துள்ளன. எனவே முகத்தில் புள்ளிகளோ வடுக்களோ இருந்தால், புளியைப் பயன்படுத்துவது நல்லது. எனவே சருமத்தை உள்ளே இருந்து சுத்தப்படுத்தப் புளி உதவுகிறது. புளியைச் சாப்பிடுவது முகத்தில் பளபளப்பை ஏற்படுத்துவதோடு கூந்தலையும் பிரகாசிக்கச் செய்யும்.
எடைக் குறைப்புக்கு (For weight loss)
புளி சாப்பிடுவது எடையைக் குறைக்க உதவுகிறது. இதில் உள்ள ஃபிளாவனாய்டுகள்,பாலிபினால்கள் மற்றும் ஹைட்ராக்சிசிட்ரிக் அமிலம் ஆகியவை பசியைக் குறைக்க உதவுகிறது. புளி நார்ச்சத்து நிறைந்தது என்றபோதிலும், அதில் கொழுப்பும் இருப்பதில்லை.
மலச்சிக்கல் (Constipation)
டார்டாரிக் அமிலம், மாலிக் அமிலம் மற்றும் பொட்டாசியம் ஆகியவை உள்ளதால், மலச்சிக்கலை போக்கவும் பயன்படுகிறது. புளியில் அதிக அளவில் உள்ள வைட்டமின் சி, உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க உதவுகிறது. மேலும் வைரஸ் தொற்றுகளையும் உடலில் இருந்து விலக்கி வைக்கிறது.
இதய ஆரோக்கியம் (Heart health)
புளி இதயத்திற்கு மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது. புளி சக்திவாய்ந்த ஆக்ஸிடெண்ட் என்பதால், ஃப்ரீ ரேடிகல்களின் தீங்குகளில் இருந்து, இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும்.
சர்க்கரையைக் குறைக்கும் (Reduce sugar)
புளி விதை சாறு இயற்கையில் அழற்சி எதிர்ப்புச் சக்தி கொண்டதாக இருப்பதால், இரத்தத்தில் சர்க்கரை அளவை சீராக வைக்கவும் நீரிழிவு நோயாளிகளுக்கு கணைய திசு சேதத்தை தடுக்கவும் பயன்படுகிறது. புளியில் காணப்படும் ஆல்ஃபா-அமிலேஸ் என்ற நொதி இரத்தத்தில் சர்க்கரை அளவைக் குறைக்க உதவுகிறது.
மேலும் படிக்க...
தங்கச்சங்கிலியைத் தலை முடியாக மாற்றியப் பாடகர்!
வீட்டில் இருந்தே மாதம் ரூ.60,000 சம்பாதிக்கலாம்- SBI யின் அரிய வாய்ப்பு!