15வது பிரிக்ஸ் கூட்டத்தில் நிலையான விவசாயத்திற்கான உறுதிப்பாட்டை இந்தியா மீண்டும் உறுதிப்படுத்துகிறது 15வது பிரிக்ஸ் கூட்டத்தில் நிலையான விவசாயத்திற்கான உறுதிப்பாட்டை இந்தியா மீண்டும் உறுதிப்படுத்துகிறது International Carrot Day 2025: இன்று ஏன் 'சர்வதேச கேரட் தினம்' கொண்டாடப்படுகிறது? International Carrot Day 2025: இன்று ஏன் 'சர்வதேச கேரட் தினம்' கொண்டாடப்படுகிறது? மேட்டூர் அணை நீருக்காக காத்திருக்கும் தஞ்சாவூர் மாவட்ட விவசாயிகள் மேட்டூர் அணை நீருக்காக காத்திருக்கும் தஞ்சாவூர் மாவட்ட விவசாயிகள் மறுபடியும் பசுமை வழி சாலையா! கொந்தளிக்கும் கோவை விவசாயிகள் மறுபடியும் பசுமை வழி சாலையா! கொந்தளிக்கும் கோவை விவசாயிகள் இரண்டு மாவட்ட விவசாயிகளுக்கு அரசு வெளியிட்ட குட் நியூஸ் இரண்டு மாவட்ட விவசாயிகளுக்கு அரசு வெளியிட்ட குட் நியூஸ் தமிழக வேளாண் பட்ஜெட்டில் மா விவசாயம் புறக்கணிப்பு: கிருஷ்ணகிரி மாவட்ட விவசாயிகள் வேதனை ஏழு புதிய விதை சுத்திகரிப்பு நிலையங்கள் : வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு ராஜஸ்தான் பெண் விவசாயி, இயற்கை பயிர்களை பயிரிட்டு, சுற்றுச்சூழலுக்கு உகந்த விவசாயத்தை ஊக்குவிப்பதன் மூலம் ஆண்டுதோறும் ரூ.50 லட்சம் சம்பாதிக்கிறார். சாமந்தி மற்றும் கிளாடியோலஸ் சாகுபடி மூலம் ஆண்டுதோறும் சுமார் ரூ.18 லட்சம் சம்பாதிக்கும் சத்தீஸ்கர் விவசாயி
Updated on: 31 January, 2019 6:31 PM IST

தினமும் காலை வேளையை சுறுசுறுப்பாக தொடங்க வைக்கும் ஒரு முக்கிய பானம் டீ என்னும் தேநீர். இதன் சுவை நாவை வருடும் போது உண்டாகும் ஆனந்தம் டீ பிரியர்களுக்கு மட்டுமே தெரியும். ஆகவே இத்தகைய தேநீர் பிரியர்களுக்கு இந்த பதிவு சற்று பாதிப்பை உண்டாக்கும். ஆனாலும் தொடர்ந்து படித்து உண்மையை அறிந்து கொள்ளுங்கள். பழங்காலம் முதல் டீ பருகுவதால் உண்டாகும் நன்மைகள் பற்றி பல தகவல்கள் நமக்கு கிடைத்துள்ளன. தேநீர் தயாரிக்கும் விதத்தில் அதன் நன்மைகள் நமக்கு கிடைக்கின்றன.
தேநீர் சுவை கிராம்பு, இஞ்சி, துளசி இலைகள், தேயிலை ஆகியவற்றை நீரில் கொதிக்க வைத்து தேன் சேர்த்து பருகுவது ஒரு பாரம்பரிய தேநீரின் சுவையை கொடுக்கும். இதுவே சிறந்த தேநீர் தயாரிக்கும் சரியான வழிமுறையுமாகும். செரிமான மண்டலத்தின் சிறப்பான செயலாற்றல், சளி, இருமல், காய்ச்சல் போன்றவற்றை போக்க உதவுவது போன்றவற்றில் ஒரு சிறந்த தேநீர் சிறப்பாக செயல் புரிகிறது.

தேநீர் தயாரிப்பு

  கடந்த சில காலமாக, இந்த தேநீர் தயாரிப்பு முறையில் மாற்றம் உண்டாக்கி அதில் சுவையை அதிகரிக்க பால் சேர்த்து பருகி வருகின்றனர் இந்திய பாரம்பரிய மக்கள். இதனால் இதன் சுவை உலகமெங்கும் பரவி தேநீர் பிரியர்கள் எண்ணிக்கையை உயர்த்தியுள்ளது. முன்னர் கூறிய தயாரிப்பு முறை ஒரு மருத்துவ கலவையாக இருந்த நேரத்தில், பால் சேர்த்து தயாரிக்கும் இந்த முறை ஒரு மாற்றத்தை உண்டாக்கியுள்ளது.

நன்மைகள்

 ஒரு கப் தேநீர், பதட்டத்தைப் போக்க உதவுகிறது, வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது, இரத்த அழுத்தம், நீரிழிவு, கொலஸ்ட்ரால் போன்றவற்றை கட்டுப்படுத்த உதவுகிறது என்று கூறுகிறது ஆயுர்வேதம்.

தீமைகள்

உணவு வழிகாட்டி குழுவின் அமைப்பாளரான டாக்டர் டி. ரகுநாத் ராவ், தேநீர் மற்றும் காபி ஆகியவற்றை குறைந்த பட்சம் சாப்பிடுவதற்கு ஒரு மணி நேரம் முன்னும் பின்னும் பருகுவதை தவிர்க்க வேண்டும் என்று கூறுகிறார். தேநீர் மற்றும் காபியில் உள்ள டானின் என்னும் ரசாயனம், இரும்பு உறிஞ்சுதலைத் தடுக்கிறது.

பால் சேர்த்த டீ

 குறிப்பாக இவற்றில் பால் சேர்க்கப்படுவதால், சாப்பிட்ட பின் நன்மையை விட அதிக தீங்கை உண்டாக்குகிறது. குறிப்பாக செரிமானத்தில் அதிக பாதிப்பை உண்டாக்குகிறது. மேலும் மிதமான அளவிற்கு மேல் இவற்றைப் பருகுவதால் உங்கள் குடல் பகுதியில் செயல்பாடுகளை தடை செய்து, தீவிர அசிடிட்டி மற்றும் வீக்கத்தை உண்டாக்குகிறது. இதனால் பெருங்குடல் மற்றும் செரிமான பாதையின் ஆரோக்கியம் பாதிக்கிறது. ஆகவே தேநீர் பிரியர்கள் சாப்பிடுவதற்கு முன்னும் பின்னும் தேநீர் பருகுவதை நிறுத்திக் கொள்வது ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும்.

English Summary: Tea - merits and demerits
Published on: 31 January 2019, 06:22 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now