உணவின் சுவையை அதிகரிக்க கறிவேப்பிலை பயன்படுத்தப்படுகிறது. மக்கள் உணவில் வாசனை சேர்ப்பதற்காக கருவேப்பிலை பயன்படுத்துகிறார்கள். இது அதன் தனித்துவமான சுவை கொண்டது. கறிவேப்பிலை ஆரோக்கியத்திற்கு மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது. உடல் எடையை குறைப்பதில் இருந்து நீரிழிவு, பொடுகு போன்ற பல பிரச்சனைகளுக்கு இது பயனுள்ளதாக இருக்கும். மேலும் கறிவேப்பிலையின் நன்மைகள் மற்றும் பயன்பாட்டு முறையை தெரிந்துகொள்ளுங்கள்.
முடி உதிர்தலுக்கு
இதற்காக, நீங்கள் கூந்தலில் எந்த எண்ணெயைப் பயன்படுத்தினாலும், 1 கைப்பிடி கறிவேப்பிலையை அதனுடன் கலந்துகொள்ளலாம். எண்ணெய் மற்றும் கறிவேப்பிலை இரண்டின் நிறம் கருமையாகும்போது, எண்ணெயை குளிர்வித்து ஒரு கண்ணாடி கொள்கலனில் சேமித்துக்கொள்ளலாம். இந்த எண்ணெயை இரவில் உங்கள் தலைமுடியில் தடவி,பின்பு காலையில் ஷாம்பூ போட்டு அலசவும்.
பொடுகுக்காக
கறிவேப்பிலையை பொடுகு போவதற்கு பயன்படுத்தலாம். இதற்க்கு நீங்கள் கருவேப்பிலையை அரைத்து பேஸ்ட்டாக செய்து புளித்த தயிரில் கலந்து,அதனை முடியில் தடவி கொள்ளுங்கள். இதை வாரத்திற்கு 2 முதல் 3 முறை செய்யலாம்.
எடையை குறைக்க
இதற்காக, 0 முதல் 20 கறிவேப்பிலையை எடுத்து தண்ணீரில் கொதிக்க வைக்கவும். சில நிமிடங்களுக்குப் பிறகு தண்ணீரை வடிகட்டவும். அதில் ஒரு ஸ்பூன் தேன் மற்றும் எலுமிச்சை சாறு சேர்க்கவும்.இவ்வாறு உட்கொண்டால் எடை வேகமாக குறைய ஆரம்பிக்கும்.
நீரிழிவு நோய்க்கு
காலையில் வெறும் வயிற்றில் 8 முதல் 10 கறிவேப்பிலையை மென்று அல்லது அதன் சாற்றை எடுத்து குடிக்கவும். இவ்வாறு உட்கொள்வதால் நீரிழிவு நோய் குணமாகும். இது தவிர, பானம், அரிசி, சாலட், உணவு போன்றவற்றிலும் சேர்க்கலாம்.
மேலும் படிக்க...