Health & Lifestyle

Saturday, 19 March 2022 06:44 PM , by: R. Balakrishnan

Benefits of Gooseberry

வைட்டமின் சி அதிகம் உள்ள உணவுப் பொருள் நெல்லிக்காய்தான். கொஞ்சம் அதிக புளிப்பு, கொஞ்சமான இனிப்பு, எஞ்சிய துவர்ப்பு, சற்றே கசப்பு என்றிருக்கும் நெல்லிக்கனி இன்று பரவலாக எல்லோரது வீட்டிலும் பழங்கள் காய்களுடன் நீக்கமற நிறைந்திருக்க தொடங்கியிருக்கிறது. எலுமிச்சையைத் தொடர்ந்து ராஜ கனி என்று அழைக்கப்படும் இந்த நெல்லிக்கனியின் பங்கு அளப்பரியது.

நெல்லிக்கனியின் பயன்கள் (Benefits of Gooseberry)

  • சர்க்கரையை கட்டுப்படுத்துகிறது.
  • உள் உறுப்புகளை பாதுகாக்கிறது.
  • புற்றுநோய் வராமல் தடுக்க வல்லது.
  • முதுமையை தள்ளிப் போடுகிறது.
  • தோல் சுருக்கங்களை நீக்கி புத்துணர்வோடு வைக்கிறது.
  • இரத்த சோகையை குணப்படுத்துகிறது.
  • உணவு செரியாமையை சரி செய்கிறது.
  • கல்லீரலின் நண்பன் நெல்லிக்கனி.
  • இதில் நார்ச்சத்து நிறைய இருப்பதால் உடல் எடையை குறைக்க உதவுகிறது.
  • நம் உடலின் நோய் எதிர்ப்புத் திறனை அதிகரிப்பதன் வாயிலாக சிறிய நோய்த் தொற்றுகளைக் கூட நெருங்க விடாமல் உடலுக்கு அரணாக விளங்குகிறது நெல்லிக்கனி.
  • நெல்லியில் 100 கிராமில் சுமார் 100 மி.லி. அளவு காலிக் அமிலம் இருக்கிறது. கொலஸ்ட்ரால் இல்லை. மாவுச்சத்தும் குறைவாக உள்ளது.
  • டிரை கிளிசரைட்ஸ் அளவைக் குறைப்பதில் சிறந்து விளங்குவதும். அதிக அளவில் ஆன்டி ஆக்ஸிடன்ட் இருப்பதும் இதன் சிறப்பு
  • 100 கிராம் நெல்லியில் 470 மி.லி. வைட்டமின் சி உள்ளதால் மிகச் சிறந்த ஆன்டி-ஆக்ஸிடென்டாகச் செயல்படுகிறது.
  • நெல்லிக்கனியில் உள்ள மூலப் பொருட்கள் கல்லீரலில் உருவாகின்ற சைக்டோ குரோம்களின் அளவினைக் குறைத்து கல்லீரல் புற்றுநோய் உருவாவதை தடுக்கிறது.
  • தினமும் 1 அல்லது 2 நெல்லிக்கனி உண்ண நம் உடல் இதமாகி ஆரோக்யத்தை மேம்படுத்துகிறது

மேலும் படிக்க

இரட்டை கரு முட்டைகள் விற்பனை: யாருக்கெல்லாம் நல்லது!

கோடையில் பலன் தரும் பழ வகைகள்: அவசியம் அறிய வேண்டும்!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)