Health & Lifestyle

Sunday, 23 January 2022 07:14 PM , by: R. Balakrishnan

Benefits of Palmyra tuber

இயற்கையோடு இயைந்து வாழ்ந்தால், ஆரோக்கியத்திற்கு என்றென்றும் சிக்கலே எழாது என்பதற்கு உதாரணமாக இருக்கும் உணவுப் பொருட்களில் ஒன்று பனங்கிழங்கு. பூமியின் கற்பக விருட்சம் என்று சொல்லப்படும் பனையில் இருந்து கிடைக்கும் ஒவ்வொருப் பொருளும் மனிதர்களுக்கு நன்மைத் தருபவை. பனை மரத்தின் அனைத்துப் பொருட்களுக்கும் மருத்துவ குணங்கள் உண்டு என்பது அதிசயமான விஷயம்்.

பொதுவாக மண்ணுக்கு அடியில் இருந்து எடுக்கப்படும் கிழங்கு வகைகளை, நீரிழிவு நோயாளிகள் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும் என்று சொல்வார்கள். ஆனால், பனங்கிழங்குக்கு மட்டும் இந்த அறிவுரையில் இருந்து விலக்கு உண்டு. ஏனெனில், பனங்கிழங்கில் உள்ள குறிப்பிட்ட வகை வேதிப்பொருட்கள், உடலின் இன்சுலின் உற்பத்தியை ஊக்குவிக்கிறது. எனவே, பனங்கிழங்கால் நீரிழிவு நோயாளிகளுக்கு எந்தவித ஆபத்தும் இல்லை.

பனங்கிழங்கின் பயன்கள் (Benefits of Palmyra tuber)

  • பனங்கிழங்கில் இரும்புச் சத்து அதிகமாக இருப்பதால், ரத்த விருத்திக்காக (Health Benefits) பனங்கிழங்கு பரிந்துரைக்கப்படுகிறது. தொடர்ந்து பனங்கிழங்கை உணவில் சேர்த்து வந்தால், ரத்தசோகை நோய் உள்ளவர்களுக்கு பிரச்சனைகள் தீரும். நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும்.
  • பனங்கிழக்கில் அதிக அளவிலான நார்ச்சத்து (Fibre Benefits) இருப்பதால், மலச்சிக்கல்களை தூர விரட்டி, வயிற்றை சுத்தமாக வைத்துக் கொள்ளும்.
  • பனங்கிழங்கில் பாதமைப் போன்ற உயர்சத்துக்கள் உள்ளன. அதனால்தான், பணககாரனுக்கு பாதாம், பசித்தவனுக்கு பனங்கிழங்கு என்ற சொலவடை உண்டு.
  • உடல் மெலிந்தவர்களுக்கு, சுலபமாக எடையை ஏற்றுவதற்கும் பனங்கிழங்கு சிறந்தது என்பதால், உடல் பருமனானவர்கள் அளவுடன் தான் பனையின் கிழங்கை சாப்பிட வேண்டும்
  • அதேபோல, ப‌னங்கிழங்கு உடலுக்கு குளுமையைத் தரக்கூடியது என்பதால், குளிர்ச்சியான உடல் உடையவர்கள் பனங்கிழங்கை அதிகம் பயன்படுத்த வேண்டாம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
  • பனங்கிழங்கூ சாப்பிட்டால் சிலருக்கு வாயுத்தொல்லை அதிகமாகலாம். எனவே, பனங்கிழங்குடன் பூண்டு சேர்த்து சமைத்து சாப்பிடலாம்.
  • ஆரோக்கியமான உடலைப் பெற, பனங்கிழங்கை சமைக்கும்போது, அதில் மிளகு சேர்த்துக் கொள்ள வேண்டும். இல்லாவிட்ட்டால், உடல் பித்தம் அதிகரிக்கும்.

மேலும் படிக்க

ஆரோக்கியத்தை அள்ளித்தரும் ஆப்பிளை எப்பொழுது சாப்பிட வேண்டும்!

சர்க்கரை நோயாளிகளுக்கு சிறந்த அருமருந்தாகும் இயற்கை பானம்!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)