Health & Lifestyle

Wednesday, 25 May 2022 11:33 AM , by: R. Balakrishnan

Coconut water

பெண்களுக்கு மாதவிலக்கின்போது ஏற்படும் அடிவயிற்று வலிக்கு இளநீர் சிறந்த மருந்து.
பேதி, சீதபேதி, ரத்த பேதி ஆகும்போது பிற உணவுகளை தவிர்த்துவிட்டு உடனடியாக இளநீர் பருகிவர, உடல் அசதி, மயக்கம் வராது.

  • சிறுநீரகக்கல், சிறுநீர்க்குழாய் பாதிப்பு போன்ற கோளாறுகள் வந்துவிட்டால் அருமருந்தே இளநீர்தான்.
  • டைபாய்டு, மலேரியா, மஞ்சள் காமாலை, அம்மை நோய்கள் போன்றவற்றால் பாதிக்கப்படும்போது இளநீரை தாராளமாக குடிக்க வேண்டும்.
  • இளநீர், வயிறு மற்றும் குடல் தொடர்பான பிரச்சனைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும்.
  • வயிற்றுப் பொருமல், உப்புசம், குமட்டல், பசியின்மை ஆகியவற்றைச் சரிபடுத்தும்.
  • அடிக்கடி வாந்தி, பேதியால் பாதிக்கப்படும் நபர்கள், இளநீரைச் சாப்பிட்டால் இழந்த நீர்ச்சத்துக்களை உடனே பெறலாம்.
  • சருமத்தின் ஈரப்பதத்தை நீண்ட நேரத்துக்கு தக்கவைத்து, சருமத்தைப் பாதுகாக்கும்.
  • இளநீரை பருகினால் வயிறு நிறைந்து போகும். இதனால் அதிகமாக தேவையில்லாத உணவுகளை சாப்பிட முடியாமல் உடல் எடை குறைய உதவுகிறது.
  • இளநீரில் சர்க்கரை நோயாளிகளுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் இருப்பதனாலும், இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைக்க உதவுவதாலும், சர்க்கரை நோயாளிகள் இளநீர் பருகுவது நல்லது.
  • இளநீரில் ஆன்டி-பாக்டீரியல் மற்றும் நோய்எதிர்ப்பு சக்தி அடங்கியிருப்பதால், வைரஸ் தாக்குதலுக்கு நல்ல மருந்தாக அமைகிறது.
  • இளநீரில் சுண்ணாம்புச்சத்து நிறைந்திருப்பதால் எலும்புகளின் வளர்ச்சிக்கும், உறுதிக்கும் உதவுகிறது.

மேலும் படிக்க

இளமையை அதிகரிக்கும் மாம்பழம்.!

கொசுத் தொல்லையா? இயற்கை வழிகளை பயன்படுத்தி கொசுவை விரட்டுங்கள்!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)