கொரோனா தொற்று படிப்படியாக அதிகரித்து நாள்தோறும் புதிய உச்சம் தொட்டு வரும் நிலையில், கூடவே நம்மை எப்போதும் வாட்டி வதைக்கும் கோடை வெயிலும் பல இடங்களில் படிப்படியாக அதிகரித்து வருகிறது. மே மதம் துவங்கும் முன்பே நாட்டின் பல பகுதிகளில் கத்திரி வெயில் போல சூரிய வெப்பம் கொதிக்கிறது. கோடை காலத்தில் நீரிழப்பு, உடல் எரிச்சல் மற்றும் குடல் தொடர்பான பல பிரச்சனைகள் ஏற்படும் என்பதால், இந்த சீசனுக்கு ஏற்றார் போல நம்முடைய உணவு முறைகளை மாற்றி அமைத்து கொள்வது அவசியமாகிறது.
கோடையில் ஏற்படும் உடல்நலப் பிரச்சனைகளை தடுக்க சத்தான உணவுகளை சாப்பிடுமாறு சுகாதார நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர். ஆரோக்கியமான குடல் உடலில் ஒரு சமநிலையை நிலைநிறுத்தவும், நோய் எதிர்ப்பு சக்தியை (Immunity) வலுப்படுத்தவும் நமக்கு உதவுகிறது. எனவே கோடையில் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமாக இருக்க உதவும் வெள்ளை வெங்காயத்தை (White Onion) அன்றாடம் உணவில் அடிக்கடி சேர்த்துக் கொள்ளுமாறும் நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.
பொதுவாக நாம் சாம்பார் வெங்காயம் மற்றும் பெரிய வெங்காயத்தை மட்டுமே சமையல்களில் பயன்படுத்தி வருகிறோம். ஆனால் பல நன்மைகள் நிறைந்த வெள்ளை வெங்காயத்தின் பயன்பாடு தெரிந்திருந்தும் அவற்றை நாம் அதிகம் பயன்படுத்துவது கிடையாது.
நன்மைகள் :
- வெள்ளை வெங்காயம், குடல் பாக்டீரியா பன்முகத்தன்மையை மேம்படுத்த உதவுகிறது.
- இது ஒரு ப்ரிபயாடிக்காக செயல்படுகிறது. மேலும் நம் வயிற்றுக்கு நல்லது செய்யும் ஸ்டார்ச் (Starch) தன்மை இதில் உள்ளது. இவை வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்த உதவுகின்றன.
- செரிமான கோளாறு மற்றும் நச்சுத்தன்மை மற்றும் வீக்கம் உள்ளிட்ட பல சுகாதார பிரச்சனைகளைத் . தடுக்கிறது.
- வெள்ளை வெங்காயத்தில் உள்ள செலினியம், நோய் எதிர்ப்பு சக்தியை நிர்வகிக்க கூடிய சிறந்த ஒன்றாக கருதப்படுகிறது.
- இதயம் தொடர்பான பிரச்சனைக்கு சிறந்த மருந்தாக வெள்ளை வெங்காயம் இருக்கிறது.
- இரத்த அழுத்தத்தை (Blood Pressure) கட்டுப்படுத்தி இதய ஆரோக்கியத்தை வெள்ளை வெங்காயம் மேம்படுத்துகிறது.
- எப்போதும் உணவில் வெள்ளை வெங்காயத்தை சேர்த்து சாப்பிட்டு வருவது இரத்தம் உறைதல் தொடர்பான பிரச்சனையில் இருந்து காக்கிறது.
- வெள்ளை வெங்காயத்தை நெய்யில் வதக்கி சாப்பிட்டு வந்தால் நரம்பு தளர்ச்சி, அடிக்கடி மயக்கம் வருவது, தொடர் உடல் சோர்வு உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வாக அமையும்.
- வெள்ளை வெங்காயத்தில் இயற்கையாக இருக்கும் சில வேதிப்பொருட்கள் (Chemicals) நம் மனநிலையை மகிழ்ச்சியானதாக மாற்றக்கூடிய தன்மை உடையது. எனவே தினமும் வெள்ளை வெங்காயத்தை சாப்பிடும் சாப்பாட்டில் சேர்த்துக் கொள்வது அதிக நன்மைகளை தரும்.
- முக்கியமாக கொதிக்கும் வெயில் காலத்தில் வெள்ளை வெங்காயத்தை உணவில் சேர்த்து கொள்வது உடலை குளிர்விக்கவும், இரவு நேர வியர்வையை தவிர்க்கவும் உதவுகிறது.
உணவில் சேர்த்துக் கொள்ளும் முறைகள்:
- ரொட்டி, சப்ஜி அல்லது பாக்ரியுடன் சேர்த்து வெள்ளை வெங்காயத்தை சாலட்டாக சாப்பிடலாம்.
- வெள்ளை வெங்காயத்தை உரித்து (நொறுக்கவோ அல்லது நறுக்கவோ கூடாது) இரவில் கிச்ச்டி செய்யும் போது அதை முழுவதுமாக பயன்படுத்தவும்.
- வெங்காயம் சேர்க்க வாய்ப்புள்ள உங்கள் அன்றாட உணவு அனைத்திலும், சில வெள்ளை வெங்காயங்களை சேர்த்துக் கொள்ளுங்கள். ஆரோக்கியமாக இருங்கள்.
மேலும் படிக்க
இனிமே ஆரஞ்சுப் பழத்தோலை தூக்கிப் போடாதிங்க! ஏராளமான நன்மைகள்!