Health & Lifestyle

Monday, 26 July 2021 07:44 PM , by: R. Balakrishnan

Credit : Dinamalar

சருமத்தை இளமையாகவும், மினுமினுப்பாகவும், பளிச் நிறத்துடனும் வைத்திருக்க சில உணவுகள் அவசியம் தேவை. அந்த உணவுகள் பற்றி இங்கு காண்போம்.

ஆப்பிள்: சிவப்பு நிற ஆப்பிளில் (Apple) தான் அதிக ஆன்ட்டி ஆக்ஸிடெண்டுகள் உள்ளன. ஆப்பிளில் இருக்கும் வைட்டமின் சி மற்றும் பாலி பீனால்கள் நம் சருமத்தை உறுதியாக வைக்கின்றன. சருமத்தில் ஐந்து மடங்கு அதிகமான ஆன்ட்டி ஆக்ஸிடெண்டுகள் இருப்பது குறிப்பிடத்தக்க செய்தியாகும்.

மாதுளை: இதில் பாலிபீனால்கள் அதிகம் உள்ளன. மேலும் இதில் வைட்டமின் சி (Vitamin C) மற்றும் பொட்டாசியமும் அதிகம் உள்ளது. வயதாகும்போது சருமமும் லேசாக சுருக்கம் பெற்று முதுமைத்தோற்றம் தருமே, அந்த மாற்றத்தை இவை தடுக்கின்றன.

எலுமிச்சை: வடுக்கள், முகப்பருக்கள், கரும்புள்ளிகளின் தோற்றத்தைத் தடுக்கும் இயற்கை மருந்தாக உதவுகிறது. இதில் வைட்டமின் சி அதிகம் உள்ளது. நம் சரும செல்களில் இருக்கும் கொலாஜென்கள் என்ற புரோட்டீன்கள் (Proteins) தான் சருமம் சுருங்குவதைத் தடுத்து, இளமையான தோற்றத்தைத் தருகின்றன. இளமைத் தோற்றத்துக்காக கடைகளில் விற்கப்படும் காஸ்ட்லி க்ரீம்களிலும், இதற்காகப் போடப்படும் இன்ஜெக்‌ஷன்களிலும் கொலாஜென்தான் இருக்கிறது. எலுமிச்சைப்பழம் இந்த கொலாஜென்கள் இயற்கையாக உருவாக உதவி புரிகிறது.

நெல்லிக்காய்: இதைப் பச்சையாகவும், ஜூஸ் போட்டும் சாப்பிடலாம். நெல்லிக்காயில் வைட்டமின் ஏ நிறைந்துள்ளது. சருமத்தை இளமையாக வைத்திருக்க உதவும் கொலாஜென்கள் இயற்கையாக உருவாக இதுவும் உதவுகிறது.

பசலைக்கீரை: சருமத்தில் இருக்கும் நச்சுப்பொருட்களை அகற்றும் நல்ல மருந்தாக செயல்படுவதால், சருமம் சுத்தமாகவும், பொலிவாகவும் காட்சி தர உதவுகிறது.

பூசணி விதை: இதில் துத்தநாகம் நிறைந்திருக்கிறது. சருமத்தில் புதிய செல்கள் உருவாக்கம் பெற இதுதான் முக்கியத்தேவை. சருமத்தில் நிறைய எண்ணெய் வடிவதைக் கட்டுப்படுத்துவதுடன், நல்ல நிறத்தையும் கொடுக்கிறது.

கேரட்: இதில் உள்ள பீட்டா கரோட்டின் பளீர் நிறத்தைத் தருவதோடு, முதுமையின் சுருக்கங்கள் விழாமல் தடுக்கிறது.

மேலும் படிக்க

பால் குடிப்பதால் சர்க்கரை நோய் வருவதில்லை! ஆய்வில் தகவல்!

ஆரோக்கிய நொறுக்குத்தீனியாக உடல்நலம் காக்கும் தாமரை விதை!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)