மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 23 January, 2022 7:33 PM IST
The bitter evils of sweet sugar!

சர்க்கரையை அதிகம் விரும்புபவர்களால் அதை முற்றிலுமாக நிறுத்த முடியாது என்றால், அதை உணவில் இருந்து படிப்படியாகக் குறைக்க முயற்சி செய்யுங்கள். நிபுணர்களின் கூற்றுப்படி, சர்க்கரையின் அதிகப்படியான நுகர்வு மிகவும் தீங்கு விளைவிக்கும். அதிக அளவு கலோரிகள் பெரும்பாலான பழங்கள், பால், சில காய்கறிகள், சீஸ் மற்றும் சில தானியங்களில் இயற்கையாகவே சர்க்கரை இருக்கிறது.

பதப்படுத்தப்பட்டமற்றும் முன்கூட்டியே சமைத்து அடைக்கப்பட்டு விற்கப்படும் உணவுகளிலும் சர்க்கரை உள்ளது. ஐஸ்கிரீம், குக்கீஸ், மிட்டாய், சோடா, கெட்ச்அப், தயிர் மற்றும் ரொட்டி போன்றவற்றிலும் சர்க்கரை உள்ளது.

நோய் எதிர்ப்பு சக்தி குறையும் (Reduced Immunity)

உணவு அல்லது பானங்களுடன் சர்க்கரையைச் சேர்த்தால், அது நோய் எதிர்ப்புச் சக்தியைக் குறைக்கிறது. பலவீனமான நோய் எதிர்ப்பு சக்தி காரணமாக, நமது உடல் பலவீனமடைகிறது.

பழங்கள், தானியங்கள் (Fruits and Foods) அல்லது உணவுப் பொருட்களில் உள்ள இயற்கை சர்க்கரை பாதிப்பை ஏற்படுத்தாது என்பதோடு, இவை ஆற்றலை அளிக்கின்றன.

சர்க்கரையின் தீமைகள் (Evils of sugar)

ஒரு குறிப்பிட்ட அளவில் மட்டுமே சர்க்கரையை சாப்பிட்டால், அவை தீங்கு விளைவிப்பதில்லை, உணவில் இனிப்பை சேர்த்துக் கொள்வது அவசியம், ஆனால் அதிகப்படியான அளவு சர்க்கரை தீங்கு விளைவிக்கும். ஆனால் கேக், பேஸ்ட்ரிகள், இனிப்புகள், சர்க்கரை பானங்கள் போன்றவற்றை உட்கொள்வதை தவிர்க்க வேண்டும். வெள்ளை சர்க்கரையை உணவில் சேர்க்கும் போது, அது தீமையாகிறது.

பொதுவாக இயற்கையான சர்க்கரையை விட, செயற்கை சர்க்கரையில் அதிக சுவையூட்டப்பட்டிருப்பதால், அது கொண்டு தயாரிக்கப்பட்ட உணவுகளை உண்ணும் விருப்பம் அதிகரிக்கும்.

இது ஒரு போதை என்றே சொல்லலாம். இதனால், செயற்கையான சர்க்கரை அதிகப்படியாக நுகரப்படுகிறது. இது எடை அதிகரிப்பு, இதய நோய்கள், நீரிழிவு நோய் என ஆரோக்கித்திற்கான அபாயத்தை அதிகரிக்கிறது.

இது உங்கள் நோயெதிர்ப்பு செயல்பாட்டையும் பாதிக்கிறது. சர்க்கரையைச் சேர்த்து உட்கொள்வதால் மனதின் இயக்கமும் குறைகிறது. பற்களின் ஈறு நோய்களின் அபாயத்தையும் அதிகரிக்கிறது.

அதிக சர்க்கரை நுகர்வு, மன அழுத்தத்தை அதிகரிக்கும் விரைவில் வயதான தோற்றத்தை ஏற்படுத்தும்.

வயிற்று பிரச்சினைகள் (Stomach problems)

நீங்கள் சர்க்கரை உட்கொள்வதை முற்றிலுமாக நிறுத்த முடியாவிட்டால், அதைக் குறைக்கவும், ஏனெனில் அது நமது செரிமான அமைப்பில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

செரிமானத்தை மோசமாக்குவதுடன், வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் எந்த வகையான உணவின் சத்துக்களையும் உடல் கிரகிப்பதையும் தாமதமாக்குகிறது.

மேலும் படிக்க

வெங்காயத்தை பாதத்தில் வைத்தால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன?

சர்க்கரை நோயாளிகளுக்கு சிறந்த அருமருந்தாகும் இயற்கை பானம்!

English Summary: The bitter evils of sweet sugar!
Published on: 23 January 2022, 07:33 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now