இந்தியாவின் பணக்கார விவசாயி: RFOI விருதினை வென்ற குஜராத் பெண்! விவசாயத்தில் மட்டும் 50 கோடி.. RFOI விருதினை வென்ற யுவராஜின் வெற்றிக் கதை! நல்ல மகசூல் தரும் கோ 10 கம்பு வீரிய ஒட்டு இரகத்தின் சாகுபடி தொழில்நுட்பம்! குறுவை பருவத்தில் 26 பயிர்களுக்கான பயிர் காப்பீடு- அமைச்சர் முக்கிய அறிவிப்பு! நம்மாழ்வரின் மாணவர்- விதைகளின் காதலன்: நம்பிக்கையூட்டும் சாலை அருண் கேள்விக்குறியான குறுவை சாகுபடி- டெல்டா விவசாயிகளுக்கு மானியத் திட்டத்தை வழங்கிட உத்தரவு! இலவச இயற்கை வேளாண் உற்பத்தியாளர் பயிற்சி- எங்கே? எப்போது? விவசாயிகளுக்கு பசுந்தாளுர விதைகள்- புதிய திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர்! Kisan Call Centre- ஒரே போன் காலில் விவசாய பிரச்சினைகளுக்கு தீர்வு!
Updated on: 8 August, 2022 11:58 AM IST

காலையில் தூங்கி எழுந்தவுடன் முதல் வேலையாக குளிர்ந்த நீரில் குளிப்பபது, அந்த நாள் முழுக்க நமது மூளையைச் சுறுசுறுப்பாக செயல்பட வைக்கிறது. அதுமட்டுமல்ல, நமது மெட்டபாலிசத்தைத் தூண்டி, மன அமைதியையும் தருகிறது.

உடல் நலம்

இரவு தூங்கி காலை எழுந்ததும் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பழக்கம் இருக்கும், சிலருக்கு காலையில் சூடாக காபி குடிப்பது, சிலருக்கு உடற்பயிற்சி செய்வது, சிலருக்கு ஏதேனும் ஆரோக்கிய பானம் அருந்துவது என்று எதையாவது ஒன்றை முதல் வேலையாக வைத்திருப்பார்கள். ஆனால் இவை அனைத்தையும் விட உங்களது உடலை மிகவும் சுறுசுறுப்பாகவும், உடலுக்கு நல்லதையும் தருவது எதுவென்றால் காலை நேரத்தில் குளிர்ந்த நீரில் குளிப்பது தான்.

பிடிக்காத ஒன்று

காலையிலேயே குளிர்ந்த நீரில் குளிப்பது என்பது பெரும்பாலான நபர்களுக்கு பிடிக்காத ஒன்று. ஆனால் அவ்வாறு, குளிர்ந்த நீரில் குளிப்பது நமக்கு பலவித நன்மைகளைச் செய்கிறது என்பதுதான் உண்மை. காலை வேளையில் சூடாக காபி அருந்துவது எப்படி உங்களை சுறுசுறுப்பாக செயல்பட வைக்கிறது என்று நினைக்கிறீர்களோ அதேபோல தான் காலை நேர குளியலும், குளிர்ந்த நீரில் நீராடுவது உங்களது மூளையை விழிப்பாக இருக்க செய்கிறது.

சீரான ரத்த ஓட்டம்

குறிப்பாக குளிர் காலங்களில் காலை நேரத்தில் கொஞ்சம் வெதுவெதுப்பான நீரில் குளிப்பதை தான் பலரும் விரும்புவார்கள். ஆனால் குளிர்காலத்திலும், பச்சத் தண்ணியில் குளிப்பது, நம் உடலில் நோய் எதிர்ப்புச்சக்தியை உண்டு பண்ணுகிறது. அதுமட்டுமல்லாமல், ரத்த ஓட்டத்தை சீராக்குகிறது என நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.

முழு ஆற்றல்

மேலும் குளிர்ந்த நீரில் குளிப்பதால் காலையில் நீங்கள் முழு ஆற்றலுடன் சுறுசுறுப்பாக செயல்படலாம், உடற்பயிற்சிகளில் இருந்து விரைவாக மீட்கவும், இரத்த ஓட்டத்தை மேம்படுத்தவும், வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கவும், உடலை சுத்திகரிக்கவும் உதவுகிறது.

மனநலம் இதுதவிர, மனநிலை மற்றும் மன உறுதியை மேம்படுத்த, நாள்பட்ட வலியைக் குறைக்கவும், மன அழுத்தத்தின் அளவைக் குறைக்கவும் உதவுகிறது.

மேலும் படிக்க...

சைக்கிள் எஸ்ஐ-ஒன்றல்ல, இரண்டல்ல, 22 ஆண்டுகள்!

பிரஷர் அதிகமானால் ஒரு கப் தயிர் போதும்!

English Summary: The bright benefits of green water bath in the morning!
Published on: 08 August 2022, 11:57 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now