பந்து மற்றும் அரவை கொப்பரைக்கான கொள்முதல்: தரம் எப்படி இருக்க வேண்டும்? நெல்-வாழை மற்றும் பயறு வகை பயிர்களுக்கான காப்பீடு- விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு நல்ல மகசூல் தரும் கோ 10 கம்பு வீரிய ஒட்டு இரகத்தின் சாகுபடி தொழில்நுட்பம்! குறுவை பருவத்தில் 26 பயிர்களுக்கான பயிர் காப்பீடு- அமைச்சர் முக்கிய அறிவிப்பு! நம்மாழ்வரின் மாணவர்- விதைகளின் காதலன்: நம்பிக்கையூட்டும் சாலை அருண் கேள்விக்குறியான குறுவை சாகுபடி- டெல்டா விவசாயிகளுக்கு மானியத் திட்டத்தை வழங்கிட உத்தரவு! இலவச இயற்கை வேளாண் உற்பத்தியாளர் பயிற்சி- எங்கே? எப்போது? விவசாயிகளுக்கு பசுந்தாளுர விதைகள்- புதிய திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர்! Kisan Call Centre- ஒரே போன் காலில் விவசாய பிரச்சினைகளுக்கு தீர்வு!
Updated on: 2 February, 2021 6:29 AM IST
Credit: Nsj exports

பல்வேறு நோய்களுக்கு மருந்தாக விளங்கும் வேப்பமரம் (Neem Tree) கோயில்களில் அதிகம் காணப்படுகிறது. இம்மரங்களில் இருந்து வெளியாகும் சஞ்சீவிக் காற்றுக்கு நுண்கிருமிகளைக் கொல்லக்கூடிய ஆற்றல் உண்டு என்பார்கள். இதன் காரணமாக தான் பலரும் வேப்ப மரத்தின் அடியில் ஓய்வுகொள்ள விரும்புகின்றர். மேலும், இம்மரத்தடியில் அமரும் போது மனமும் அமைதி பெறுகிறது.

வேப்பமரத்தின் குச்சி, பட்டை, இலை, பூ, பழம், கொட்டை என அனைத்திலும் அதிகபடியான மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன. இதன் காரணமாக தான் ஆயுர்வேதத்திலும், சித்த மருத்துவத்திலும் தவிர்க்க முடியாத மருந்தாக வேம்பு இருந்து வருகிறது.

வேம்பினை நாம் பல்வேறு முறைகளில் பயன்படுத்துவதன் மூலம் அதிக பயன்கள் (medicinal benefits of neem) பெறலாம். வேப்பிலை சாறு, விழுது, கஷாயம், பொடி என நோயின் தன்மைக்கு ஏற்றவாரு நாம் பயன் படுத்தலாம். வேம்புக்கொண்டு நாட்டு மருந்துகளை வீட்டிலேயே தயாரிக்கும் முறைகள் குறித்து இங்கு காணலாம்

வேம்பின் மருத்துவ பயன்கள் (Medicinal benefits on Neem)

  • காலில் பித்த வெடிப்பு உள்ளவர்கள் வேப்பிலையுடன் மஞ்சளைச் சேர்த்து மைபோல் அரைத்து, அதைனை வெடிப்பின் மேல் நன்றாகத் தடவி மறுநாள் காலையில் தேய்த்துக் கழுவிவிட வேண்டும். இப்படியாக செய்து வந்தால் பித்த வெடிப்புகள் (Neem Cures Cracked heels) மறையும்.

  • நகச்சுத்தி ஏற்பட்டால் எலுமிச்சம் பழத்தில் துளையிட்டு அதை விரலில் சொருகிக் கொண்டால் குணமாகிவிடும். இருப்பினும், இந்த நோய் வந்ததும் வேப்பிலையை மைபோல் அரைத்து அதனுடன் மஞ்சள் சேர்த்து, அதை நோய் கண்ட இடத்தில் வைத்துக் கட்டி வந்தால் விரைவில் குணமாகும்.

  • வேப்பிலையுடன் வேலிப்பருத்தி இலை, மஞ்சள் சேர்த்து மைபோல அரைத்து கட்டியைச் சுற்றிலும் பற்றுப்போட்டு வந்தால் கட்டி உடைந்துவிடும். வெந்நீர், வடிகஞ்சி, நெருப்புச்சுட்ட (Neem Heals Wounds) புண்ணுக்கும் இத்தகைய பற்று போடலாம்.

  • குழந்தைகளுக்கு வேப்பங்கொழுந்து உறை மருந்து கொடுத்து வந்தால் பிற்காலத்தில் எந்த வியாதியும் வராமல் தற்காத்துக்கொள்ள முடியும், ஆனால் குழந்தைகளுக்கு பயன்படுத்துவதற்கு முன் மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது நல்லது.

Credit: Nsj exports
  • வேப்பம் பழத்தில் (Neem Fruit) செய்யும் சர்பத்தை சாப்பிட்டால் பித்தம் தணியும், ரத்தம் சுத்தமடையும். தோல் சம்பந்தப்பட்ட நோயுள்ளவர்கள் தொடர்ந்து சாப்பிட்டுவந்தால், சொறி, சிரங்குகளை உற்பத்திச் செய்யும் நுண்கிருமிகள் அழியும்.

  • வேப்பிலையை தண்ணீரில் கொதிக்க வைத்து, பின் ஆறிய தண்ணீரை கொண்டு முகம் மற்றும் கை, கால்கள் கழுவி வந்தால் சரும (Neem Cures skin Allergies) பிரச்சனைகள் அனைத்தும் குணமாகும்.

  • வேப்பம் விதையுடன் வெல்லம் சேர்த்து காலை மற்றும் மாலை என ஒரு மண்டலம் சாப்பிட்டு வந்தால் உள் மூலம், வெளி மூலம் தீரும்.

  • மாதம் ஒரு முறை வேப்பிலையை சாப்பிட்டால் வயிற்றில் உள்ள பூச்சிகள் (Neem kills Germs in stomach) வெளியேறும். வாந்தி, மயக்கம் போன்றவை குணமாகும்.

  • வேப்பம் பூவை நிழலில் உலர்த்தி சம்பிராணியுடன் சேர்த்து தூபம் போட்டால் காற்றில் உள்ள கிருமிகளை அழித்து விடும். அதே போன்று இலைகளை உலர்த்தி தூபம் போட்டால் கொசு போன்றவை வீட்டிற்குள் வராது.

  • வேம்பு நோய் எதிர்ப்பு மண்டலத்தை (Neems gives Immunity) வலுப்படுத்த உதவுகிறது. வேம்பில் இருந்து பெறப்படும் வேப்ப எண்ணெயில் லிம்போசைட்கள் மற்றும் மோனோசைட்டுகளின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. வேப்ப எண்ணெயில் அடிக்கடி உணவில் சேர்த்து வர உடலில் நோய் எதிர்ப்பு சத்தி அதிகரிக்கும் மேலும், மாதம் ஒருமுறை வேப்பம் பூ ரசம், துவையல் போன்றவை செய்து சாப்பிடலாம்

  • அனைத்து சரும பராமரிப்பிலும் வேம்பு முக்கிய பங்கு வகிக்கிறது. வேம்பு மற்றும் மஞ்சள் அரைத்து பூசி சிறிது நேரம் கழித்து முகம் கழிவினால் முகம் பொலிவு பெறும். முகத்தில் தோன்றும் பருக்கள் போன்றவற்றிற்கு எதிராக நன்கு செயல் படும். இதே போல் வேப்ப எண்ணெய் உங்கள் தலைமுடியை பாதுகாக்க பல வழிகளில் உதவுகிறது.

  • வேப்ப மரக் குச்சிகளைக் கொண்டு பல் துலக்கினால் அது பற்களின் ஈறுகளை வலுப்படுத்தும் என்று ஆய்வுகள் கூறுகின்றன. அதேபோல காலையில் எழுந்ததும் பிரஷ் செய்யும் முன் வேப்ப எண்ணெய்யை கொண்டு வாய் கழுவிவிட்டு பிரஷ் செய்தால் பல் உறுதிபடும்.

  • வேப்ப எண்ணெயுடன் தூய தேங்காய் எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெயை 1:4 என்ற விகிதத்தில் கலந்து உடலில் தேய்த்து கொண்டு உறங்கினால் கொசுக்கடி மற்றும் பூச்சி கடிகளிலிருந்து இருந்து தப்பிக்கலாம்.

image credit: Hindustan Times

மேலும் படிக்க..

மூலிகைகளின் அரசி துளசியின் மருத்துவ குணங்கள் தெரியுமா உங்களுக்கு!

ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த உதவும் சூப்பர் உணவுகள்

English Summary: The herb which helps to treat all your diseases internally and externally is Neem
Published on: 23 July 2020, 06:35 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now