Health & Lifestyle

Friday, 31 December 2021 06:47 PM , by: R. Balakrishnan

Vaccine and Mask is best for protection

ஒமைக்ரான் பரவலை கட்டுப்படுத்த அறிவியல் முறைப்படி ஊரடங்கு போட வேண்டும் என்றும், இரவுநேர ஊரடங்கு பயனளிக்காது, முகக்கவசம், தடுப்பூசியே நம்மை காக்கப் போகிறது எனவும் உலக சுகாதார அமைப்பின் (WHO) தலைமை விஞ்ஞானி சவுமியா சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி சவுமியா சுவாமிநாதன் கூறியதாவது: 90 சதவீத மக்கள் முழு நேரமும் முகக்கவசம் அணிந்திருந்தால், கோவிட் பரவலை வெகுவாக குறைக்கலாம். அதில் நாம் கவனம் செலுத்த வேண்டும். உலக நாடுகள் ஒமைக்ரான் பரவலுக்கு எதிராக கட்டுப்பாடுகள் விதிக்கும் போது அறிவியல் முறைப்படி விதிக்க வேண்டும். பொருளாதாரமும் நலிவடையாமல் பாதுகாக்க வேண்டும். நாம் கவனமாக இருக்க வேண்டும். அதே நேரத்தில் பயப்பட கூடாது.

பூஸ்டர் டோஸ் (Booster Dose)

ஒவ்வொரு நாடுகளும் தங்களுக்கான தனிப்பட்ட தரவுகளை உருவாக்க வேண்டும். ஒமைக்ரான் வருகிறது என்றால் அவர் எத்தனை டோஸ் போட்டுள்ளார், கடைசி டோஸ் எப்போது போட்டார் என்று ஆராய வேண்டும். அதற்கு ஏற்றபடி பூஸ்டர் விதிகளை கொண்டு வர வேண்டும். நாம் முதலில் வயதானவர்களை, உடல் நோய் கொண்டார்களை காக்க வேண்டும்; அவர்களுக்கு பூஸ்டர் (Booster) வழங்க வேண்டும். அதே சமயம் எல்லோருக்கும் பூஸ்டர் தேவையா என்பது தொடர்பான ஆய்வு முடிவுகளும் நம்மிடம் இல்லை.

முகக் கவசம் (Face Mask)

பள்ளிகளில் கட்டுப்பாடுகள் கொண்டு வருவது பற்றி யோசிக்கலாம். தியேட்டர், மால் போன்ற இடங்களில்தான் அதிகம் கொரோனா பரவுகிறது. இங்குதான் கட்டுப்பாடுகளை கொண்டு வர வேண்டும். மற்றபடி இரவுநேர ஊரடங்கு எல்லாம் பயன் அளிக்காது. இதற்கு பின் எந்த விதமான அறிவியலும் இல்லை. அறிவியல் முறைப்படிதான் ஊரடங்கு போட வேண்டும். முகக்கவசம் அணிவதும், தடுப்பூசி செலுத்திக்கொள்வதும் மட்டுமே நம்மை காக்க போகிறது. அதுதான் முக்கியம்.

மேலும் படிக்க

வந்துவிட்டது கொரோனா வைரஸிற்கான 2 புதிய தடுப்பு மருந்துகள்!

டெல்டா - ஒமைக்ரான் இணைந்து கொரோனா சுனாமி: WHO எச்சரிக்கை!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)