Health & Lifestyle

Tuesday, 23 November 2021 06:50 PM , by: R. Balakrishnan

Benefits of tamarind

சமையலில் முக்கிய பங்கு வகிக்கும் புளியின் பயன்கள் குறித்தும், அதன் மகத்துவம் குறித்தும் இங்கு காணலாம். புளிப்பு சுவையை தனதாக்கிய புளியில் எண்ணற்ற மருத்துவப் பயன்கள் உண்டு.

சத்துக்கள்

  • புளியம்பழத்தில் சதைப்பற்றில் டார் டாரிக் அமிலம் 8 சதவீதம் உள்ளது. சிட்ரிக் அமிலம் 4 சதவீதம் உள்ளது. அசிட்டிக் அமிலம், பொட்டாசியம், சர்க்கரை 4 சதவீதமும் உள்ளன.
  • கொட்டையில் கொழுப்புச்சத்தும், கார்போஹைட்ரேட்டும் 63 சதவீதம் உள்ளன.
  • நார்ச்சத்தில் பாஸ்பரஸ், நைட்ரஜன் முதலியன அடங்கியுள்ளன. பழத்தில் ஆர்சானிக் அமிலம் இருக்கிறது.

பயன்கள் (Uses)

  • உடலில் ஏற்படும் பித்த வெடிப்புகளுக்கு பழம்புளியை நீரில் கரைத்து பனை வெல்லம் சேர்த்து குடிக்க, பித்தமும், பித்தத்தடிப்பும் குணமாகும்.
  • இதன் இலையின் கொழுந்தும் உடலுக்கு குளிர்ச்சி கொடுக்கும் வல்லமை உள்ளது.
  • இந்த இலையை அரைத்து மூட்டுவாத வீக்கம் மீது பற்றுப்போட்டால் வீக்கம் குறைந்து வலியும் குறையும்.
  • விளாம்பழத்தைச் சர்க்கரையுடன் சேர்த்து சாப்பிடுவதுபோல புளியம்பழத்தையும் சர்க்கரையுடன் சேர்த்துச் சாப்பிடுவதால் உடல் நல்ல குளிர்ச்சி பெறும்.
  • இதன் தோலைப் பொடித்து தூளாக்கி பல் துலக்கி வந்தால் பல் நோய் நீங்கும்.

மேலும் படிக்க

வறுத்த பூண்டை சாப்பிட்டால் இந்த நோயே வராதாம்: எதுன்னு பாருங்கள்!

மன அழுத்தத்தை போக்கும் 6 சிறந்த பழங்கள்!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)