தமிழகத்தில் கொரோனா நோய் தொற்றை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு கட்ட நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இந்நிலையில், விலக்குகள் இல்லா, ஊரடங்கு உத்தரவு அமல்படுத்த பேச்சு வார்த்தைகள், நடக்கிறது என தகவல்கள் வெளியாகி வருகிறது.
அந்த வகையில் தன்னார்வலர்கள், அமைப்புகள் என பலர் இணைந்து நோய்த்தொற்றை கட்டுப்படுத்துவதற்காக விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
கோவை மாவட்டத்தில் 92 சதவீதம் பேர் தடுப்பூசி செலுத்தியுள்ளனர் என்பது குறிப்பிடதக்கது. இந்நிலையில் 100 சதவீதம் தடுப்பூசி இலக்கை எட்டுவதற்காக பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், கோவையைச் சேர்ந்த தன்னார்வ அமைப்பினர் சாய்பாபா காலனி பகுதியில் உள்ள பிரியாணி கடையுடன் இணைந்து கடந்த 2 நாட்களாக சலுகை விலையில் பிரியாணி மற்றும் அசைவ உணவுகளை வழங்கினர்.
இதில் இரண்டு தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு 50 சதவீத சலுகை விலையில் பிரியாணி வழங்கப்பட்டது. அதன்படி 120 ரூபாய் பிரியாணி 60 ரூபாய்க்கும், சில்லி சிக்கன் 40 ரூபாய்க்கும், எம்.டி பிரியாணி 30 ரூபாய்க்கும், லெக் பீஸ் 30 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது குறிப்பிடதக்கது.
இங்கு 2 தவணை கொரோனா தடுப்பூசி செலுத்திய ஏராளமான பொதுமக்கள் தடுப்பூசி செலுத்தியதற்கான ஆதாரங்களை காண்பித்து சலுகை விலையில் பிரியாணி வாங்கி சென்றனர்.
மேலும் இதுகுறித்து கடையின் உரிமையாளர் கூறுகையில்:-
தமிழக அரசு எடுக்கும் நடவடிக்கைக்கு பொதுமக்கள் உறுதுணையாக இருக்க வேண்டியது அவசியம். தடுப்பூசி செலுத்தினால் மட்டுமே நோய் தொற்றில் இருந்து தற்காத்துக்கொள்ள முடியும். தடுப்பூசி செலுத்துவது குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவே, இந்த சலுகை விலையில் பிரியாணி விற்பனை செய்து வருகிறோம். கோவையில் 100 சதவீதம் பொதுமக்கள் தடுப்பூசி செலுத்தும் வரையில் அடுத்தடுத்து சலுகை விலை அறிவித்து விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளோம்.
என அவர் தெரிவித்தார்.
மேலும் படிக்க:
பொங்கல் பரிசு தொகுப்பு பெறுவதில் சிரமம் ஏற்பட்டால், தொடர்புக்கு...
உறைபனியில் இருந்து பயிர்களை காப்பாற்ற, இந்த பணியை செய்திடுங்கள்