மா: பிஞ்சு- காய் உதிர்தலை தடுத்து மகசூல் பார்க்க சூப்பர் ஐடியா! சர்க்கரை வள்ளிக்கிழங்கில் மகசூலை பாதியாக குறைக்கும் கூன் வண்டு- கட்டுப்படுத்தும் முறை? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 18 August, 2021 10:52 AM IST
hair growth with rice washed water

அரிசி கழுவிய நீர் அதாவது களனி தண்ணீர் ஆற்றல் அளவை அதிகரிக்கிறது மற்றும் தாவரங்கள் வேகமாக வளர உதவும் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் அரிசி கழுவிய நீரின் சில அழகு சார்ந்த நன்மைகள் பற்றி நமக்கு தெரியாது. ஆம், அரிசி நீரை உடலுக்கும், ஆரோக்கியமான கூந்தலுக்கும் பயன்படுத்தலாம்.

உண்மையில், சீனா, ஜப்பான் மற்றும் தென்கிழக்கு ஆசியா போன்ற நாடுகளில், அரிசி நீர் காலங்காலமாக அழகுப் பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது. அரிசி நீரால் முடி வளர்ச்சியையும் அதன் மற்ற நன்மைகளை கொண்டு நம் தோல் மற்றும் உடலுக்கும் நன்மைகளை அதிகரிக்க முடியுமா என்று பார்ப்போம்.

அதிசய தண்ணீர்: முடி வளர்ச்சிக்கு அரிசி நீர்

இந்த அதிசய தண்ணீரின் பின்னணியில் உள்ள அறிவியல் அதன் கலவை ஆகும். அரிசி நீர் நிறைய வைட்டமின்கள் மற்றும் தாதுக்களால் ஆனது. வரலாற்று ரீதியாக, ஆரோக்கியமான முடி வளர்ச்சியை ஊக்குவிக்க அனைத்து பாலின மக்களும் இதைப் பயன்படுத்துகின்றனர். இது களனி தண்ணீர் என்று கூறப்பட்டுள்ளது:

  • முடியை மென்மையாக்குகிறது,
  • முடி வேகமாக வளர உதவுகிறது,
  • முடியை வலிமையாக்குகிறது,
  • மற்றும் முடி உதிர்தலை தடுக்கிறது.

இந்த நன்மைகள் அறிவியலால் ஆதரிக்கப்படுகின்றனவா? ஆய்வுகள் ஆம் என்று கூறுகின்றன. ஒரு ஜப்பானிய ஆய்வு, அரிசி நீரில் இருக்கும் இனோசிட்டால் கூறு எப்படி தோல் மற்றும் கூந்தலுக்கு பெரும் நன்மைகளை அளிக்கிறது என்பதை வெளிப்படுத்துகிறது. சிறந்த முடிவுகளுக்கு அரிசி நீரை எவ்வாறு தயாரிப்பது மற்றும் பயன்படுத்துவது என்பதை இப்போது பார்ப்போம்.

முடிக்கு அரிசி நீரை எப்படி தயாரிப்பது?

  1. செயல்முறை மிகவும் எளிது. நீங்கள் செய்ய வேண்டியது இந்த வழிமுறைகளைப் பின்பற்றுவது:
  2. ஒரு கை அரிசியை எடுத்து சுத்தம் செய்யவும்.
  3. ஒரே இரவு முழுவதும் அரிசியை 2-3 கப் தண்ணீர் தண்ணீர் ஊற்றி ஊறவைக்கவும்.
  4. மேலும் நீங்கள் அரிசியை கழுவி அரிசியை தனியாகவும் அந்த தண்ணீரை தனியாகவும் எடுத்துக்கொள்ளுங்கள்.
  5. நீங்கள் அரிசி நீரை அதிக நேரம் பயன்படுத்த விரும்பினால் குளிரூட்டவும் செய்யலாம்

அரிசி நீரை எப்படி பயன்படுத்துவது?

அரிசி நீரை சரியாகப் பயன்படுத்துவது எப்படி என்பதை கற்றுக்கொள்வது மிகவும் முக்கியம், ஏனெனில் உங்கள் தலைமுடியில் நீண்ட நேரம் பயன்படுத்தினால் அது மெல்லிய மற்றும் உலர்ந்த கூந்தலை ஏற்படுத்தும். அரிசி நீரைப் பயன்படுத்துவதற்கான சரியான வழி பின்வருமாறு:

உங்கள் தலைமுடியை ஷாம்பு போட்டு, கண்டிஷனிங் செய்து தண்ணீரில் நன்கு கழுவவும்

ஈரமான கூந்தலுக்கு மேல் அரிசி நீரை பயன்படுத்தவும்.

உங்கள் முடியின் வேர்களை நீர் சென்றடைகிறதா என்று உறுதி செய்யவும். இதற்காக, முதலில் வேர்களில் அரிசி நீரைப் பயன்படுத்தவும்.

உங்கள் தலைமுடியில் 5-10 நிமிடங்களுக்கு ஊற வையுங்கள், பின்னர் தண்ணீரில் நன்கு சுத்தம் செய்துகொள்ளுங்கள்.

உங்கள் உடலுக்கும்  அரிசி கழுவிய நீரை பயன்படுத்தலாம். உங்களது தோலை இறுக்கமாக. இடுப்பு வலி கால் வலி போன்ற பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வு தரும்.

அரிசி நீர் ஆரோக்கிய நன்மைகளை நிரூபித்துள்ளது மற்றும் முடி மற்றும் தோலில் அதன் முடிவுகள் பல ஆண்டுகளாக முயற்சி செய்யப்பட்டு சோதிக்கப்பட்டன. அரிசி நீரைப் பயன்படுத்தும் போது, விரைவான முடிவுகளுக்கு மேலே கொடுக்கப்பட்டுள்ள சரியான செய்முறையைப் பின்பற்றுவதை உறுதி செய்து கொள்ளுங்கள்.

மேலும் படிக்க...

சுடு தண்ணீர் குடிப்பதால் உடலில் என்ன நடக்கிறது?

English Summary: The secret of hair growth with rice washed water !!! Can this be done?
Published on: 18 August 2021, 10:47 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now