மா: பிஞ்சு- காய் உதிர்தலை தடுத்து மகசூல் பார்க்க சூப்பர் ஐடியா! சர்க்கரை வள்ளிக்கிழங்கில் மகசூலை பாதியாக குறைக்கும் கூன் வண்டு- கட்டுப்படுத்தும் முறை? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 1 March, 2021 6:21 PM IST
Credit : Samayam

பழுக்காத மாம்பழத்தை கொண்டு தயாரிக்கப்படும் ஜூஸில் ஏராளமான நன்மைகள் காணப்படுகிறது. இந்த மாம்பழ ஜூஸ் (Mango Juice) கண் பார்வை ஆரோக்கியம் முதல் ஊட்டச்சத்து பற்றாக்குறை வரை சரி செய்கிறது. கோடை காலத்தில் அனைவரும் விரும்பி சாப்பிடும் பழம் என்றால் ஒன்று தர்பூசணி (Watermelon), மற்றொன்று மாம்பழம் (Mango). ஏனெனில், இவையிரண்டுமே சீசன் வகை பழமாகும். அதிலும் மாம்பழம் என்பது இக்காலகட்டத்தில் அதிகளவில் விற்பனைக்கு வருகிறது. அதனால் தான் மக்களும் மாம்பழ ஜூஸை நாடுகின்றனர்.

மாங்காய் ஜூஸ்:

பழுக்காத மாங்காய் ஜூஸ் இயற்கையாகவே சுவையான சத்து நிறைந்த பானமாகும். இந்த மாம்பழ ஜூஸை பொருத்த வரை உங்க உடலுக்கு தேவையான அனைத்து வகையான ஊட்டச்சத்துக்களும் (Nutrients) காணப்படுகிறது. மாம்பழத்தில் விட்டமின் சி, பீட்டா கரோட்டீன், பொட்டாசியம் (Potassium), இரும்புச் சத்து என அனைத்து வகை ஊட்டச்சத்துக்களும் காணப்படுகிறது. இந்த மாம்பழ ஜூஸ் இந்தியாவைப் பொருத்த வரை மிகவும் புகழ் பெற்றது. இது உங்களுக்கு சிறந்த புளிப்பு இனிப்பு சுவையை கொடுக்க கூடியது. இந்த மாம்பழ ஜூஸை குடித்து வந்தால் மலச்சிக்கல் பிரச்சினைகள், இரத்த கோளாறுகள், சரும தரம் மேம்படுதல், கண் ஆரோக்கியம் (Healthy Eye) என பலவித நன்மைகளை அளிக்கிறது. இது மன அழுத்தம், நீர்ச்சத்துயின்மை மற்றும் வயிற்று போக்கு போன்ற பலவித பிரச்சினைகளை போக்கக்கூடும். இது நோயெதிர்ப்பு சக்தியை (Immunity) அதிகரிக்க ஆற்றலை அளிக்க கூடியது.

பழுக்காத பச்சை மாம்பழ ஜூஸ் செய்வது எப்படி?

பழுக்காத பச்சை மாம்பழ ஜூஸ் ஒரு சுகாதார பானமாகும். இந்த பழுக்காத மாம்பழ ஜூஸ் பார்ப்பதற்கு வெளிர் பச்சை அல்லது மஞ்சள் கலரில் காணப்படும். இதில் கூடுதல் சுவைக்காக உப்பு மற்றும் சர்க்கரை சேர்க்கப்படுகிறது. சில சமயங்களில் இன்னும் வாசனைக்காக சீரகப் பொடி சேர்க்கப்படுகிறது. இதில் புதினா இலைகளையும் சேர்த்து இந்த ஜூஸிற்கு கூடுதல் பச்சை நிறத்தை கொடுக்கின்றன.

​ஊட்டச்சத்து அளவுகள்

ஒரு கிளாஸ் பழுக்காத மாம்பழ ஜூஸில் 180 கலோரிகள் (Calories) உள்ளன. இதில் அதிகளவு கார்போஹைட்ரேட்டுகள், விட்டமின்கள் ஏ, பி1, பி2 மற்றும் சி போன்ற சத்துக்கள் உள்ளன. இதில் பொட்டாசியம், சோடியம், மக்னீசியம், இரும்புச் சத்து மற்றும் கால்சியம் (Calcium) போன்ற சத்துக்களும் காணப்படுகிறது. இதில் போலேட், பெக்டின், கோலைன் போன்ற ஊட்டச்சத்துக்களும் இதில் காணப்படுகிறது.

  • கலோரிகள் : 179
  • மொத்த கொழுப்பு 1 கிராம்
  • சோடியம்ன: 26 மி. கி
  • பொட்டாசியம் :235 மி. கி
  • மொத்த கார்போஹைட்ரேட் :46 கிராம்
  • புரோட்டீன் :1 கிராம்
  • விட்டமின் மற்றும் தாதுக்கள் :8%
  • கால்சியம் :0.05
  • விட்டமின் சி :23%
  • இரும்புச் சத்து :10%

பயன்கள்:

  • ​சீரண சக்தியை மேம்படுத்துகிறது
  • பழுக்காத மாம்பழ ஜூஸில் அதிகளவு நார்ச்சத்துக்கள் உள்ளன. எனவே இது இயற்கையாகவே செரிமானத்திற்கு ஏற்றது.
  • இதில் விட்டமின் பி இருப்பது உடலை சுத்தப்படுத்த உதவுகிறது.
  • இது இரைப்பைக் குடல் கோளாறுகளை சமாளிக்க உதவுகிறது.
  • இது வயிற்று போக்கை தடுக்கவும் உதவுகிறது.
  • சீரண சக்தியை (Digestion) மேம்படுத்துகிறது
  • நீரிழிவு நோயை எதிர்த்து போராட உதவுகிறது
  • பக்கவாதம் சரியாக உதவுகிறது.
  • நோய்களை எதிர்த்து போராடுகிறது
  • விட்டமின் சி இரத்த சம்பந்தமான நோய்களை குணப்படுத்த உதவுகிறது.
  • குடல் கோளாறுகளை மேம்படுத்துகிறது
  • புற்றுநோயை (Cancer) தடுக்க உதவுகிறது. இதில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்கள் பெருங்குடல் புற்றுநோய், வயிற்று புற்றுநோய், நுரையீரல் புற்றுநோய், புரோஸ்டேட் புற்றுநோய், லுகேமியா மற்றும் மார்பக புற்று நோய் என பலவற்றில் இருந்து சிகிச்சை அளிக்கிறது.
  • மனச்சோர்வை குறைக்கிறது
  • நம் கண்களுக்கு சிறந்த ஆரோக்கியத்தை தருகிறது

Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்

மேலும் படிக்க

குழந்தைகள் ஆரோக்கியமாக வளர ஐந்து சத்தான உணவுகள்!

அழகிய ரோஜா மலரின் அற்புத மருத்துவ குணங்கள்!

English Summary: The various benefits we get from drinking unripe mango juice!
Published on: 01 March 2021, 06:21 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now