Health & Lifestyle

Monday, 04 April 2022 08:07 PM , by: Elavarse Sivakumar

நாம் அன்றாடம் உண்ணும் உணவுகளில், குறிப்பிட்ட இந்த 5 இரசாயனங்கள் இடம்பெறும் பட்சத்தில், நமக்கு புற்றுநோய் அபாயத்தை அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது.

நாம் உண்ணும் உணவில் நமக்குத் தெரியாமலேயே சில இரசாயனங்கள் இடம்பெறுகின்றன. இவை நம்மை மீறி உடலுக்குள் சென்று, உள்ளே உட்கார்ந்துகொண்டு, தங்கள் வேலையைக் காட்டத் தொடங்கிவிடுகின்றன.
இவை எப்படி செல்கின்றன என யோசிக்கிறீர்களா? நாம் ரசித்து ருசித்து உண்ணும் உணவுப் பொருட்களில், சுவையை அதிகரிப்பதற்காக, இந்த இரசாயனங்கள் சேர்க்கப்படுகின்றன.

எனவே நாம் விழிப்புடன் இருந்தால், இந்தக் குறிப்பிட்ட இரசாயனங்கள் நம் உடலுக்குள் செல்லாமல் பார்த்துக்கொள்ள முடியும். அது எப்படி என்பதைப் பார்ப்போம்.

அக்ரிலாமைடு

அக்ரிலாமைடு என்பது காகிதம், சாயம் மற்றும் பிளாஸ்டிக் தயாரிக்க பயன்படும் ஒரு ரசாயனம். இது உருளைக்கிழங்கு சிப்ஸ், பிரஞ்சு பொரியல், குக்கீகள், டோஸ்ட் மற்றும் சில வகையான தானியங்களில் காணப்படுகிறது.
பல சுகாதார நிறுவனங்கள் இந்த இரசாயனத்தை மனிதர்களில் புற்றுநோயை உண்டாக்குவதாக விவரித்துள்ளன. அனைத்து நிறுவனங்களும் அக்ரிலாமைடு அதிகம் உள்ள உணவுகளைத் தவிர்க்க பரிந்துரைக்கின்றன,

சிவப்பு இறைச்சி

சிவப்பு இறைச்சியில் உள்ள ஹெட்டோரோசைக்ளிக் அமீன் புற்றுநோயை உண்டாக்கும் பண்புகளைக் கொண்டுள்ளது. இறைச்சியை அதிக வெப்பநிலையில் சமைக்கும் போது இந்த இரசாயனம் உருவாகிறது. ​​அதில் இருக்கும் அமினோ அமிலம், சர்க்கரை மற்றும் கிரியேட்டின், கிரியேட்டனின் ஆகியவை ஒன்றோடொன்று வினைபுரிந்து, டிஎன்ஏவை சேதப்படுத்தும்.

அஃப்லாடாக்சின்

WHO இன் படி, அஃப்லாடாக்சின் புற்றுநோயை உண்டாக்கும் மற்றும் கல்லீரலில் புற்றுநோயை உண்டாக்கும். இது பால், இறைச்சி மற்றும் முட்டை போன்ற பொருட்களிலும் காணப்படுகிறது. அஃப்லாடாக்சினைத் தவிர்ப்பதற்கான எளிதான வழி, இந்தத் தயாரிப்புகள் அனைத்தின் காலாவதித் தேதியைச் சரிபார்த்துவிட்டுச் சாப்பிடுவதுதான். இவற்றில் இறைச்சியை ஆன்லைனில் புக் செய்வதைக் கைவிட்டுவிட்டு, நம் கண் முன் அறுத்து விற்பனை செய்யும் பக்கத்துக் கடைக்காரரிடம் வாங்குவதே நல்லது.

இலவங்கப்பட்டை

இலவங்கப்பட்டையில் கூமரின் என்ற நச்சுத் தனிமம் உள்ளது. அதை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் புற்றுநோயை உண்டாக்கும்

ஹைட்ராசைன்கள்

ஹைட்ராசைன்கள் புற்றுநோயை உண்டாக்கும் என்பதோடு, நுரையீரல், இரத்த நாளங்கள் மற்றும் பெருங்குடல் உட்பட பல உறுப்புகளில் கட்டிகளை ஏற்படுத்தலாம். நோய் தாக்கிய மீன்களில் ஹைட்ராசைன்கள் இருக்கின்றன. எனவே பழைய மீன்களை சாப்பிடக்கூடாது.

மேலும் படிக்க...

கோடை வெயிலைக் கொளுத்திவிட- தினமும் 4 புதினா இலைகள்!

லட்சம் ரூபாயை எட்டிய பஞ்சு விலை- ஜவுளித்துறை முடங்கும் அபாயம்!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)