மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 19 May, 2022 10:37 PM IST

கோடை வெயில் பல மாநிலங்களை வறண்டுபோகச் செய்துள்ளது. ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், குஜராத், மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் வெப்பம் உச்சத்தை அடைந்துள்ளது. இதன் காரணமாக மக்கள் வீடுகளிலேயே முடங்கும் சூழல் உருவாகியுள்ளது.

தமிழகத்தைப் பொருத்தவரை, பல மாவட்டங்கள் வெப்பநிலையில் சதம் அடித்துள்ளன. இந்நிலையில் தாகம் தீர்க்கும் தண்ணீரையும் நாம் அளவுக்கு அதிகமாகக் குடிப்பது ஆபத்து என நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். வெயிலின் தாக்கத்தால் குழந்தைகள் மற்றும் முதியவர்கள் ஏன் மிகவும் பாதிக்கப்படுகிறார்கள். இதனைக் கருத்தில்கொண்டு வெப்பநிலை குறையும் வரை வீட்டிற்குள் உடற்பயிற்சி செய்ய மக்களை வலியுறுத்தியுள்ளனர்.

தற்காப்பது எப்படி? (How to defend?)

பகலில் வெளியே செல்வோர் வெப்பநிலை காரணமாக சோர்வாக காணப்படுவார்கள். அதே சமயம், அதிக வெப்பநிலை பக்கவாதத்திற்கும் வழிவகுக்கும். உடல் 40 டிகிரி செல்சியஸ் மேலான சூட்டை உணரும் போது உறுப்புகள் பாதிக்கப்படும். நரம்பியல் செயலிழப்புகள் ஏற்படுகின்றன. மயக்கம், சொறி ஏற்படுவது உண்டு

நீரிழப்பு (Dehydration)

நீங்கள் வெயில் நேரத்தில் வெளியே செல்கிறீர்கள் என்றால், உடலில் நீரிழப்பு ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். நீரேற்றத்தை தண்ணீரின் வடிவிலோ அல்லது ஷிகன்ஜி போன்ற எலக்ட்ரோலைட்டுகள் பானங்கள் வழியாகவும் ஏற்றலாம். எனவே, நீங்கள் எவ்வளவு தண்ணீர் குடிக்கிறீர்கள் என்பதை கண்காணிக்க வேண்டும். அதேபோல், நீரிழப்பு ஏற்பட்டால், சிறுநீர் வெளியேற்றும் அளவு குறைவதையும் காண முடியும்.

தவிர்க்க வேண்டியவை (Things to avoid)

இதுதவிர, வெப்பம் அதிகமாக இருக்கும் சமயத்தில், டார்க் கலர் ஆடை, இறுக்கமான ஆடை, சின்தடிக் ஆடைகள் அணிவதை தவிர்க்க வேண்டும். அச்சமயத்தில், லைட் கலர் மற்றும் வெளிர் நிற, பருத்தி ஆடைகள் சிறந்த சாய்ஸ் ஆகும். தலையில் தொப்பி அல்லது துணி வைத்து மறைத்துகொள்வது உதவிப்புரியும். பெரும்பாலும், அதிக வெப்பநிலை இருக்கும் சமயத்தில், வெளியே செல்லாமல் வீட்டுலே இருப்பது நல்லது. 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் மற்றும் 65 வயதுக்கு மேற்பட்டவர்கள் வெப்பமான நேரங்களில் வெளியே செல்வதைத் தவிர்க்க வேண்டும். அளவுக்கு மீறி தண்ணீர் குடித்தால் ஆபத்து தான். தண்ணீர் உட்கொள்ளும் அளவு ஒரு நபரின் ஆரோக்கியத்தைப் பொறுத்தது.

சிறுநீரக பாதிப்பு

உதாரணமாக, இளைஞர் ஒருவர் 2.5 முதல் 3 லிட்டர் வரை தண்ணீர் குடிக்க வேண்டும். வெயிலுக்குள் வெளியே சென்றால், கூடுதலாக அரை அல்லது 1 லிட்டர் தண்ணீர் குடிக்கலாம். ஒருவேளை அதிகமாக தண்ணீர் குடித்துவிட்டால், தண்ணீரை வெளியேற்றும் சீறுநிரகத்தின் செயல்பாடுகிளில் சிக்கல் ஏற்படும். அதிகப்படியான நீர் எலக்ட்ரோலைட் சமநிலையின்மைக்கும் வழிவகுக்கும்.

அவர்கள் சிறுநீரகம் அல்லது இதய பிரச்சினையில் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிகமாக தண்ணீர் குடிக்கையில், கால்கள், வயிறு மற்றும் மார்பில் திரவம் குவிந்து, சுவாசிப்பதில் சிரமத்திற்கு வழிவகுக்கும்.இத்தகைய பிரச்சினை இருப்பவர்கள், நாள் முழுவதும் 1 முதல் 1.5 லிட்டர் வரை மட்டுமே தண்ணீர் குடிக்க வேண்டும். திரவக் கட்டுப்பாடு பாதிப்பு உள்ளவர்கள், எவ்வளவு தண்ணீர் குடிக்கலாம் என்பதை அறிய மருத்துவரைத் தொடர்பு கொள்ள வேண்டும்.

எலக்ட்ரோலைட்

மக்கள் வெயிலில் இருக்கும்போது எலக்ட்ரோலைட் நிறைந்த திரவத்தை குடிப்பது சிறந்தது ஆகும். ஆராக்கியமான நபர் இரண்டு அல்லது மூன்று கிளாஸ் ஷிகன்ஜி குடிப்பது தப்பு கிடையாது. ஒருவேளை வேறு பிரச்சினை இருந்தால், குடிப்பதை செக் செய்வது அவசியமாகும். எடுத்துக்காட்டாக, நீரிழிவு நோயாளிகள் ORS கரைசல்களைத் தவிர்க்க வேண்டும், ஏனெனில் அதில் சர்க்கரை கண்டனட் அதிகமாகும். இதய நோய்கள், நீரிழிவு நோய், தைராய்டு போன்ற இணைநோய் இருப்பவர்கள் சூரிய ஒளியின் தாக்கத்தை அதிகமாக உணர வாய்ப்புள்ளது.

உடற்பயிற்சி

உடற்பயிற்சி செய்வது ஒரு பிரச்சனையல்ல. வெயிலுக்குள் செய்வதை தவிர்க்க வேண்டும். மக்கள் நடைபயிற்சி அல்லது ஜாகிங் செல்ல விரும்பினால், அதை அதிகாலை 5-6 மணிக்குள் அல்லது மாலை 7 மணிக்குப் பிறகு செய்ய வேண்டும்.காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை வெப்பம் அதிகமாக இருக்கும் போது மக்கள் எந்தவிதமான உடல் செயல்பாடுகளையும் செய்யக்கூடாது.

மக்கள் வீட்டிற்குள் உடற்பயிற்சி செய்ய முடியுமானால், தாராளமா செய்யலாம். தேவைப்பட்டால் உடற்பயிற்சி கூடத்திற்கும் செல்லாலாம். அதை வெளிப்புற உடற்பயிற்சியை காட்டிலும் சிறந்தது ஆகும்.

மேலும் படிக்க...

முழு முட்டை Vs வெள்ளைக்கரு – எது ஆரோக்கியமானது?

நீரிழிவு நோயை தடுக்கும் பழைய சோறு - யாரும் அறிந்திராத உண்மை!

English Summary: Thirst quenching water - Drinking too much can be dangerous!
Published on: 18 May 2022, 07:16 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now