இந்தியாவின் பணக்கார விவசாயி: RFOI விருதினை வென்ற குஜராத் பெண்! விவசாயத்தில் மட்டும் 50 கோடி.. RFOI விருதினை வென்ற யுவராஜின் வெற்றிக் கதை! நல்ல மகசூல் தரும் கோ 10 கம்பு வீரிய ஒட்டு இரகத்தின் சாகுபடி தொழில்நுட்பம்! குறுவை பருவத்தில் 26 பயிர்களுக்கான பயிர் காப்பீடு- அமைச்சர் முக்கிய அறிவிப்பு! நம்மாழ்வரின் மாணவர்- விதைகளின் காதலன்: நம்பிக்கையூட்டும் சாலை அருண் கேள்விக்குறியான குறுவை சாகுபடி- டெல்டா விவசாயிகளுக்கு மானியத் திட்டத்தை வழங்கிட உத்தரவு! இலவச இயற்கை வேளாண் உற்பத்தியாளர் பயிற்சி- எங்கே? எப்போது? விவசாயிகளுக்கு பசுந்தாளுர விதைகள்- புதிய திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர்! Kisan Call Centre- ஒரே போன் காலில் விவசாய பிரச்சினைகளுக்கு தீர்வு!
Updated on: 19 December, 2021 4:58 PM IST
Credit : Boldsky Tamil

அனுதினமும் மாடிப்படிக்கட்டு ஏறுவதைப் பழக்கமாக்கிக்கொண்டால், அதுவே இதயத்திற்கான மிகச்சிறந்த உடற்பயிற்சி என்று சுகாதார வல்லுநர்கள் ஆலோசனை வழங்கியுள்ளனர். அதுமட்டுமல்லாமல், மன அழுத்தம் மற்றும் பதட்டத்தை போக்கவும் இது பயனுள்ளதாக இருக்கும்.

உடற்பயிற்சி (Exercise)

இயந்திரமயமான வாழ்க்கையில், சிறு வயது முதல் முதியவர்கள் வரை அனைவரையும் மாரடைப்புத் தவறாமல் பதம்பார்க்கிறது. இந்த மாரடைப்பில் இருந்து தப்பிக்க, சில உடற்பயிற்சிகளை மேற்கொள்வது உதவும்.

தற்போது அப்பார்மெண்டுகள், அலுவலகங்கள் என அனைத்திலும் லிஃப் வசதி உள்ளது. அவசர வாழ்க்கை காரணமாக பலர் படிக்கட்டுகளில் ஏறுவதை விட லிஃப்டை பயன்படுத்துகின்றனர். ஆனால் படிக்கட்டுகளில் ஏறுவதால் உடல் எடை வேகமாக குறைவதோடு மட்டுமல்ல, வேறு பல நன்மைகளும் கிடைக்கும்.

சிறந்த உடற்பயிற்சி (Excellent exercise)

படிக்கட்டுகளில் ஏறுவது உங்கள் இதயத்திற்கு மிகவும் நல்ல உடற்பயிற்சி என்று சுகாதார நிபுணர்கள் கூறுகிறார்கள். மன அழுத்தம் மற்றும் பதட்டத்தை போக்கவும் இது பயனுள்ளதாக இருக்கும்.

உடல் பருமனை வேகமாக குறைக்கவும் உதவுகிறது. படிக்கட்டுகளில் ஏறும் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் அதை விட்டுவிடாதீர்கள் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். காலையில் வீட்டிலிருந்து கிளம்பும் போதும், அலுவலகம் சென்றதும் லிப்டுக்குப் பதிலாக படிக்கட்டுகளைத் பயன்படுத்தவும்.

படிக்கட்டுப் பயன்கள் (Benefits of Stairs)

  • படிக்கட்டுகளில் ஏறுவதை வழக்கமாக்கிக் கொள்வது, இதயம் மிகவும் பாதுகாப்பாக இருக்கும்.

  • தினமும் 7 நிமிடம் படிக்கட்டுகளில் ஏறி இறங்கினால், மாரடைப்பு ஏற்படும் அபாயம் வெகுவாகக் குறையும் என்கிறது ஓர் ஆய்வு.

  • இது உயர் இரத்த அழுத்த அபாயத்தையும் நீக்குகிறது.

  • தொடர்ந்து படிக்கட்டுகளில் ஏறினால், விரைவாக உடல் எடையை குறைக்க உதவும்.

  • தினமும் படிக்கட்டுகளில் ஏறி இறங்குவதால், ஒருவரின் இறப்பு விகிதத்தை 33 சதவீதம் குறைக்கலாம் என்கிறது ஓர் ஆய்வு.

  • ஆரம்பத்தில், படிக்கட்டுகளில் ஏறும் போது சோர்வாக இருக்கலாம்.

  • மூச்சுத் திணறலும் ஏற்படலாம், ஆனால் அதனை தொடர்ந்து செய்து வந்தால், மூச்சு வாங்குதல், திணறுதல் போன்றவை இருக்கவே இருக்காது.

முன்னெச்சரிக்கை (Precaution)

  • மிதமான வேகத்தில் படிக்கட்டுகளில் ஏறுவதே நல்லது.

  • படிக்கட்டுகளில் ஏறும் போது முதுகு நேராக இருக்க வேண்டும்.

  • முதலில் 20 அல்லது 25 படிக்கட்டுகளில் 5 தடவை ஏறி இறங்கலாம்.

  • பிறகு ஏறக்கூடிய படிக்கட்டுகளின் எண்ணிக்கையை படிப்படியாக அதிகரிக்கலாம்.

  • கால்களில் பாதிப்பு ஏதும் ஏற்படுவதை தவிர்க்க பொருத்தமான காலணிகளை அணிந்துகொள்வது அவசியம்.

மேலும் படிக்க...

குளிர்காலத்தில் மீன் சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா?

வலிப்பு நோய்க்கு நிரந்தர தீர்வு: மருத்துவர் விளக்கம்!

English Summary: This is the best way to prevent a heart attack!
Published on: 19 December 2021, 04:52 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now