Health & Lifestyle

Sunday, 01 May 2022 11:56 AM , by: R. Balakrishnan

This is the cure for heatstroke

கோடை காலத்துக்கு ஏற்ற பழங்களை, இயற்கை நமக்கு அளித்து இருக்கிறது. அதில் முக்கியமானது, மாம்பழம், பலாப்பழம் மற்றும் தர்பூசணி. இப்பழங்கள் நம் உடல் நலனுக்கு ஏற்றது. கோடையில் மட்டுமே கிடைக்கும் இப்பழங்களை தவறாது சாப்பிடுங்கள். இதன் மருத்துவ குணங்களை காண்போம் வாருங்கள்.

மாம்பழம் (Mango)

மாம்பழத்தில் பல வெரைட்டிகள் உள்ளன. இதில் சுவை மாறுபட்டாலும் சத்துக்கள் மாறுபடுவதில்லை. 100 கிராம் மாம்பழச்சதையில்,- 81 கிராம் நீர்ச்சத்து உள்ளது. கரோட்டின், வைட்டமின், கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு உள்ளிட்ட சத்துக்களும் அதிகம் உள்ளன. மாம்பழத்தைத் தொடர்ந்து உண்டு வந்தால், தோல் பளபளப்பாகும். தோல் நோய், அரிப்பு மாறும். தீராத தலைவலியை மாம்பழச்சாறு தீர்க்கும். கோடை மயக்கத்தை தீர்க்கும். மாம்பழத்தில் உள்ள நார்ச்சத்து ஜீரணத்தைக் கூட்டும்.பல்வலி, ஈறுவலி போன்றவற்றை மாம்பழம் குணப்படுத்தும். நோய்த்தடுப்பு சக்தியைக் கூட்டும். கண்ணில் நீர் வடிதல், மாலைக்கண் போன்றவற்றை குணப்படுத்தும்.

பலாப்பழம் (Jack Fruit)

எவ்வளவு சாப்பிட்டாலும் திகட்டாத கனி இது. அதுவும் பலாப்பழத்தை தேனில் கலந்து சாப்பிட்டால் வேற லெவல் டேஸ்ட். அப்படி சாப்பிட்டால் பல நோய்கள் தீரும். மூளை நரம்புகள் வலுப்பெறும். வாதநோய் மற்றும் மனநல பாதிப்புகள் கூட சரியாகும். பலாப்பழத்தில் வைட்டமின் 'ஏ' அதிகம் இருப்பதால் மூளைக்கும், உடலுக்கும் அதிக பலத்தை தருகிறது. நரம்புகள் உறுதியாகும். ரத்தத்தை விருத்தி செய்யும். தொற்றுக் கிருமிகளை அழிக்கும். ஆனால், சுவையாக இருக்கிறது என்பதற்காக அதிகமாக சாப்பிட கூடாது.

தர்பூசணி (Watermelon)

வெயில் காலத்தில் தர்பூசணி பழம் அதிகம் சாப்பிடுவதால், சிறுநீரகங்கள் சிறப்பாக செயல்படும். சிறுநீர் பைகளில் மூத்திர அடைப்பு, நீர் சுருக்கு போன்ற நோய்கள் ஏற்படுவதை தடுக்கும். சிறுநீரில் உள்ள நச்சுகளை வெளியேற்றும். இரத்த ஓட்டம் சீராகும். வெயில் காலங்களில் உடலின் நீர் வியர்வையாக வெளியேறி விடுவதால், ரத்தத்தில் நீர்சத்து குறைந்து, ரத்த ஓட்டம் வேகம் குறைகிறது. இப்படிப்பட்ட சமயங்களில் தர்பூசணி பழங்கள் சாப்பிடுவதால், ரத்தத்தில் நீர் சத்து சேர்ந்து, ரத்த ஓட்டம் சீராகி உடலுக்கு புத்துணர்ச்சியை தருகிறது. கோடையில் வெப்பம் அதிகரித்து, உடலில் இருக்கின்ற நீர் சத்துகள் வெளியேறி, உடல் வெப்பமடைகிறது. இதனால் சோர்வு உண்டாகும்.

இந்த சமயங்களில் தர்பூசணி பழங்கள் சாப்பிடுவதால் உடல் குளிர்ச்சி அடைந்து, உடற்சோர்வும் மலச்சிக்கலும் நீங்கும். சர்க்கரை நோய் இருப்பவர்கள், இந்த மூன்று பழங்களையும் அளவோடுதான் சாப்பிட வேண்டும்.

மேலும் படிக்க

முதுகுத் தண்டு பாதிப்பும், காரணங்களும்!

வீட்டின் வெப்பத்தை குறைக்க பசுமைச் சுவரை உருவாக்குவோம்!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)