Health & Lifestyle

Saturday, 11 May 2019 10:44 AM

பச்சைப்பயறு, கொண்டைக்கடலை, வெந்தையம், எள்ளு, வேர்க்கடலை, முளைகளை நீங்க தங்களின் வீட்டிலேயே முளைக்கச்செய்து இயற்கையான, சத்தான, ஆரோக்கியம் அடங்கியுள்ள உணவாக உட்கொண்டால் எந்த வித நோய்  தொற்றும்  ஏற்படாது.

உடல் எடை , கொழுப்பு குறையும் 

தானிய முளைகள் உடல் எடையை குறைக்க உதவுகிறது, மற்றும் தசைகளை வலுவூட்டுகிறது. இதில் நார் சத்து அதிகம் உள்ளதால் மலச்சிக்கலில் இருந்து ஆறுதல் அளிக்கிறது. மேலும் ஜீரண கோளாறை சீராக்குகிறது. குறிப்பாக இதை உயர் இரத்த அழுத்தத்திற்கு மிக சிறந்ததாக கூறுகின்றன. இதனை உட்கொள்ளவதால் உடலில் கொழுப்பை குறைத்து கொழுப்பு தன்மையை சமமாக வைக்கிறது.

உடல் சோம்பலை விரட்டும்

சுண்டல்  முளை உடல் சோம்பல் மாற்று சோர்வை விரட்டுகிறது. இந்த முளையை நீங்கள் தினமும் சாப்பிட்டு வந்தால் நீங்கள் மிக விரைவில் உடலில் சோம்பல் நீங்கி சுறுசுறுப்பை உணர்வீர்கள். உடலில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்துகிறது, இதனால் இந்த முளை நீரிழிவு இருப்பவர்கள் சாப்பிட்டு வந்தால் சர்க்கரை அளவை குறைத்து சமமாக வைக்கிறது. மேலும் உடலில் இரும்பு சத்தை அதிகரித்து அடிக்கடி சோர்வு ஏற்படுவதை கட்டுப்படுத்துகிறது.

 

ஊட்டச்சத்து

இந்த முளைகளில் புரதம், வைட்டமின், கால்சியம், கனிமங்கள், நார்சத்துஅடங்கியுள்ளது.மேலும் இதில் இரும்பு சத்து உள்ளதால் உடலில் நோய்  எதிர்ப்பு தன்மையை அதிகரிக்கச் செய்கிறது. இந்த முளைகள் நாம் செய்யும் சாலட்டுகளில் சேர்க்கப்படுகிறது. இதனால் சாலட்டில் அதிக ஊட்டச்சத்து சேர்கிறது.

பிட்டான  உடல் 

இன்று இந்த தானிய முளைகளை கொண்டு இளைஞர்களிடம் அதிக வரவேற்பு காணப்படுகிறது காரணம் மெல்லிய அழகான உடல் எடை .முக்கியமாக பெண்கள் பிட்டான உடல்  அமைப்பை  விரும்புகின்றன. இந்த முளைகள் உடலில் கொழுப்பை கரைத்து  அழகான உடல் அமைப்பை மேம்படுத்த உதவிகிறது

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)