கருகருவென காடு போல முடி வளர வேண்டுமா? பார்ப்பதற்கு அடர்த்தியாக இருக்க வேண்டுமா? புதிய முடிகளின் வளர்ச்சி சீக்கிரம் இருக்க வேண்டும்? அதே சமயம் இயற்கையான பொருட்களை தெடி அலையும் கஷ்டமும் இருக்கக்கூடாதா? கடையில் பவுடராக வாங்கி இன்ஸ்டன்டாக கலந்து கஷ்டமே இல்லாமல், தலையில் பேக் போட வேண்டும் என்றால் இந்த குறிப்பு உங்களுக்கானது. பதிவை படித்து, பயனடையுங்கள்.
இந்த ஹேர் பேக் தயார் செய்ய நமக்கு தேவையான மூன்று பொடிகள் என்னென்ன வாருங்கள் தெரிந்துக்கொள்ளலாம். நெல்லிக்காய் பொடி – 2 ஸ்பூன், சடாமாஞ்சில் பொடி – 2 ஸ்பூன், செம்பருத்தி பூ பொடி – 2 ஸ்பூன், இந்த மூன்றுமே நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் பொருட்களாகும். எனவே தேடி அலைய வேண்டியதில்லை.
நிறையப் பேருக்கு சடாமாஞ்சில் பொடி என்றால் என்னவென்று தெரியாமல் இருக்க வாய்ப்புள்ளது. சடாமாஞ்சில் என்பது ஒரு தாவர வகையைச் சேர்ந்தது, மேலும் இது ஒரு மூலிகை செடியாகும். இதன் வேர் மிகவும் கருப்பாக இருக்கும், மேலும் இதன் காரணமாகதான், இதனை பயன்படுத்தவதால் தலைமுடிக்கு கருமை பலன் கிடைக்கும். மற்ற பொருட்கள் ஆரோக்கியத்திற்கு பயன்படுத்தப்பட்டால், இந்த சடாமாஞ்சில் பொடி, கருமை நிறத்திற்காக பயன்படுத்துகின்றோம்.
இந்த மூன்று பொடியையும் தேங்காய் பால் ஊற்றி பேக் போல தயார் செய்து கொள்ளுங்கள். பேக் ரொம்பவும் கெட்டியாக இருக்கக் கூடாது என்பதை கவனத்தில் கொள்ளுங்கள். கொஞ்சம் தளதளவென லிக்விடாக இருந்தால் தலையில் அப்ளை செய்வதற்கு சுலபமாகவும் வசதியாகவும் இருக்கும் என்பதால், அவ்வாறு செய்துக்கொள்வது நல்லது. ஒரு சிறிய பௌலில் 3 பொடியையும் மேல் சொன்ன அளவுகளில் போட்டு விட்டு, தேவையான அளவு திக்கான தேங்காய் பாலை ஊற்றி கரைத்து இதோடு, 1 டேபிள் ஸ்பூன் விளக்கெண்ணெய் ஊற்றி கலந்தால் ஹேர் பேக் தயாராகிவிடும்.
விளக்கெண்ணெய், செம்பருத்தி, நெல்லிக்காய் என இதில் இருப்பவை அனைத்தும், தலைமுடிக்கு நன்மைபயக்கும் பொருட்களாகும்.
மேலும் படிக்க:
கூகுள் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு: மென்பொறியாளர்களே அலர்ட்!
2700 கோடி செலவில் அரிசி விநியோகம்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்!