Health & Lifestyle

Wednesday, 13 April 2022 06:35 AM , by: R. Balakrishnan

Tomato juice is the best food for breakfast!

வெயில் காலத்தில் நிறைய திரவ உணவு சாப்பிட்டால், உடலின் நீர்ச் சத்து குறையாமல் இருக்கும். அதற்காக தினமும் குடிக்கும் பழச்சாறில், சர்க்கரை சேர்த்தால், அது எந்த சத்தும் இல்லாத வெறும் கலோரி. அதிகப்படியான கலோரி கொழுப்பாக மாறும்.‌ சர்க்கரையே சேர்க்காத ஜூஸ் குடிப்பதே நல்லது. அதிலும், போதுமான ஊட்டச்சத்துக்கள் தரும் தக்காளி ஜூஸ் குடிக்கலாம்.

தக்காளி ஜூஸ் (Tomato Juice)

காலையில் மூன்று அல்லது நான்கு தக்காளி மட்டும் சாப்பிட்டால், உடல் எடை குறைவதோடு, தேவையான சத்துக்களும் கிடைக்கும். தக்காளியில், 'விட்டமின் இ, சி, ஏ, தையமின், நியாசின், மெக்னீசியம், பாஸ்பரஸ், தாமிரம்' ஆகிய நுண்ணுாட்டச் சத்துக்கள் உள்ளன.

லைக்கோபின் என்ற ஆன்டி ஆக்சிடென்ட் நிறைந்து உள்ளது. ரத்த அழுத்தத்தைக் கட்டுப்பாட்டிற்குள் வைக்கும். புதிய செல்கள் உருவாக்கத்திற்கு உதவும். இதய செயல்பாட்டை ஆரோக்கியமாக்கும்.

பொதுவாக, ஜூஸ் குடிப்பது மிகவும் ஆரோக்கியமாக ஒன்று. அதிலும் காய்கறிகளை ஜூஸ் போட்டு குடிப்பது என்பது மிக நல்லது. தினந்தோறும் காலையில் தண்ணீர் குடித்த பிறகு ஜூஸ் குடிப்பது நல்லது.

மேலும் படிக்க

டீக்கடைகளில் அருந்தும் தேநீர் தரமானதா?கண்டறியும் வழிமுறைகள்!

பலாப்பழம் சாப்பிட்ட பிறகு, எந்த உணவுகளை நாம் உண்ணக் கூடாது?

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)