Health & Lifestyle

Wednesday, 06 July 2022 12:41 PM , by: Deiva Bindhiya

Try This: A sweet recipe with healthy brown rice!

கருப்பு கவுனி அரிசியின் நன்மைகள் ஏறலாம் உள்ளன. இந்த அரிசி தற்போது மருத்துவ நிபுணர்களால் அதிகம் பரிந்துரைக்கப்படும் அரிசியாக உள்ளது. முன்பு இந்த அரிசிக் கொண்டு இனிப்பு பலகாரம் செய்வதுண்டு. அதுவும் குறிப்பாக கல்யாண வீடுகளில், பந்தியில் முதலில் இனிப்பு பரிமாறுவது வழக்கம், அதில் முதனமையாக இடம்பிடிப்பது இந்த கவுனி அரிசியின் இனிப்பு தான். இதை எப்படி செய்வது வாருங்கள் பார்ப்போம்.

கருப்பு கவுனி அரிசி ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நிறைந்ததாகும், இதில் அதிக ஃபைபர் சத்து உள்ளது, நீரழிவு நோயையும் தடுக்க வல்லது, உடல் பருமன் அபாயத்தைத் தடுக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இதில் புரதச்சத்திற்கு பஞ்சமில்லை, மேலும் இதயத்திற்கும் நல்லது. இவ்வாறு பல நன்மைகளை கொண்ட கவுனி அரிசியின் இனிப்பு எப்படி செய்வது என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:

கவுனி அரிசி 1 கப்
துறுவிய தேங்காய் 1/2 கப்
சர்க்கரை தேவைக்கேற்ப

மேலும் படிக்க: கருப்பு கவுனி அரிசியின் நம்பமுடியாத நன்மைகள்

  • கவுனி அரிசி பொதுவான அரிசியை விட சற்று வலுத்திருப்பதால், இந்த அரிசியை குறைந்தது ஆறிலிருந்து ஏழு மணி நேரம் உர வைக்க வேண்டும்.
  • உர வைத்த கவுனி அரிசியை ஒரு பங்குக்கு 3-3 1/2 பங்கு தண்ணீர் ஊற்றி குக்கரில் வைக்க வேண்டும். குறைந்தது எழுலிருந்து எட்டு விசில் குக்கரில் வைக்க வேண்டும். இதன் பின்னரும் அரிசி குளைந்த நிலைக்கு வரவில்லை என்றால், மீண்டும் இரண்டில் இருந்து 3 வீசிலுக்கு குக்கரில் வைக்கவும்.
  • நல்ல சூடாக குளைந்த கவுனி சாதத்தை நன்றாக பிரட்டிவிட்டு வேந்ததா என பார்க்கவும், அதன் பின்னர் தேவைக்கேற்ப சர்க்கரை துறுவிய தேங்காய் சேர்த்து, அதனுடன் நன்றாக கலந்துக்கொள்ளவும்.

மேலும் படிக்க: July Bank Holiday 2022: எத்தனை நாட்கள் தெரியுமா?

(குறிப்பு: சர்க்கரை மற்றும் துறுவிய தேங்காயை சூடாக இருக்கும் போதே கலந்துக்கொள்ளவும்)

  • பின்னர் சூடாக பரிமாறவும். ஆரோக்கியம் நிறைந்த கவுனி அரிசி இனிப்பு தயார்.

மேலும் படிக்க:

நோனி பழம்: என்ன பழம் இது? இது தலைமுடியை என்ன செய்யும்?

Try This: இன்று தில்லி தாபா ஸ்டைலில் முட்டை வறுவல்!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)