நாம் தின்தோறும் உண்ணும் உணவுகளிலேயே அத்தனைச் சத்துக்களும் நிறைந்துள்ளன. உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதும், மோசமடையச் செய்வதும் நமது உணவு பழக்கங்கள் தான் என்று சொன்னால் சரியல்ல.
நாம் அடிக்கடி பயன்படுத்தும் ஒரு காய் முட்டைகோஸ். உணவாக இதை சாப்பிட்டாலும், இதன் நன்மைகள் ஏராளம் என்பது அனைவருக்கும் தெரியாத ஒன்று. இதை தவிர அதை எப்படி சாப்பிட்டால் என்ன நன்மை என்பதும் யாருக்கும் தெரியாது. முட்டைகோஸ் ஜூஸ் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி தெரிந்துக் கொள்வோம்.
எடை குறைக்க உதவும்.
அதிக எடையுள்ளவர்கள், தங்கள் உடல் எடையைக் குறைக்க முட்டை கோஸ் ஜூஸ் எடுத்துக்கொள்ளலாம். இது நமது உள் உறுப்புகளில் இருக்கும் டாக்ஸின்களை அழிக்க வல்லமை கொண்டது. குறைவான கலோரியே இதில் அடங்கியதால் கொழுப்பும் சேராது. இதன் உதவியுடன் எளிதில் உடல் எடையை குறைக்க முடியும்.
அல்சர் அல்லது வயிற்று புண்
நேரத்திற்கு சரியாக சாப்பிடாமல் இருப்பது, காலை உணவு தவிர்ப்பது, அதிக காரமுள்ள உணவுகளை சாப்பிடுவது, போன்ற பல காரணங்களால் அல்சர் ஏற்படுகிறது. இதனால் ஏற்படும் தீவிரமான வயிற்றுவலியை போக்க முட்டைகோஸ் ஜூஸ் உதவக்கூடியது. முட்டைகோஸ் ஜூஸில் இருக்கும் விட்டமின் சி வயிற்றில் ஏற்படக்கூடிய அல்சரை விரைவில் குணப்படுத்தும்.
புற்றுநோய்
ஒரு நோய் பற்றிய பயத்தை விட, அதனால் ஏற்படும் பின் விளைவுகள் மற்றும் சிகிச்சை முறைகளை நினைத்து தான் பலருக்கு பயமே வருகிறது. இன்று புற்றுநோய் என்பது பொதுவாக அறியப்படுகிற நோயாக மாறிவிட்டது. முட்டைகோஸ் ஜூஸில் உள்ள சல்ஃப்போரபேன் மற்றும் ஐசோசியனேட் ஆகிய சத்துக்கள் உடலில் புற்றுநோய் செல்கள் வளராமல் தடுக்கிறது.
காட்ராக்ட்
முதியோர்களுக்கு ஏற்படக்கூடிய கண் புரை நோய் ஏற்படாமல் தவிர்க்க முட்டைகோஸ் பெரும் அளவில் உதவியாக இருக்கக்கூடும். முட்டை கோஸ் ஜூஸ் குடிப்பது நல்லது.
சருமப் பிரச்சனைகள்
சருமத்தில் ஏற்படக்கூடிய பருக்கள்,மரு போன்றவற்றால் முகத்தின் பொலிவு இழந்து போகின்றன. ஏராளமான ஆண்ட்டி ஆக்ஸிடண்ட் நிறைந்த முட்டைகோஸ் ஜூசை தொடர்ந்து குடித்தால் சருமம் ஆரோக்யமாக இருக்கும் மேலும் சருமத்தை பராமரிக்க உதவும்.
நோய் எதிர்ப்பு சக்தி
முட்டைகோஸ் ஜூஸில் இருக்கும் ஹிஸ்டிடின் என்ற சத்து, உங்கள் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்யும்.
மூளை செயல்பாடுகள்
மூளை கொடுக்கும் சிக்னல் மூலமாக தான் அனைத்து செயல்பாடுகளும் நடைபெறுகிறது. முட்டைகோஸின் ஜூஸில் இருக்கும் விட்டமின் கே மற்றும் ஆந்தோசியானின்ஸ்,மூளையின் செயல்பாட்டை சீராக்குகிறது மற்றும் பராமரிக்கிறது..
வயதானவர்களுக்கு ஏற்படும் அல்சைமர் பிரச்சனை வராமல் தவிர்க்க, முட்டைகோஸ் ஜூஸ் உதவியாக இருக்கும். முட்டைகோஸ் ஜூஸில் விட்டமின் சி, பீட்டா கரோட்டீன் போன்ற இன்னும் பல சத்துக்கள் நிறைந்துள்ளன. எனவே முட்டைகோஸ் ஜூஸ் பல்வேறு நோய்கள் ஏற்படாமல் பாதுக்காக்கிறது.
மேலும் படிக்க:
ஹார்ட் அட்டாக்கிற்கு வழிவகுக்கும் கொரோனா வைரஸ்- மக்களே உஷார்!