கோடைகாலத்தில், நாம் கண் திறக்கும் இடங்களில் எல்லாம் தர்பூசணிகளைக் காணலாம்! கோடை காலத்திற்கு உகந்தப் பழம் என்றால் நமக்கு முதலில் கண்ணுக்கு தெரிவது தர்பூசணி என்றே கூறலாம், அதிக நீர் உள்ளடக்கம் கொண்ட தர்பூசணிகள், பெரும் தாகத்தை கூட தணித்துவிடும். தர்பூசணிகள் சுவையாகவும் புத்துணர்ச்சியுடனும் மட்டுமல்ல, ஆரோக்கியமாகவும் இருக்கின்றன! அவற்றில் அதிக அளவு வைட்டமின் ஏ, சி மற்றும் பி 6 மற்றும் பொட்டாசியம் அடங்கியுள்ளன.
சிட்ரூலைன் மற்றும் லைகோபீன் போன்ற தாவர இரசாயனங்களும் அவற்றில் உள்ளன. தர்பூசணிகளில் உள்ள இந்த இரசாயனங்கள் நம் ஆரோக்கியத்திற்கு நல்லது. ஆனால் எல்லாவற்றையும் போலவே அதாவது அளவிற்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பதை போல, தர்பூசணி அதிகமாக உட்கொள்வது உங்கள் உடலுக்கு சிக்கல்களை உருவாக்கும்.
1. குடல் தொந்தரவு
தர்பூசணிகளில் லைகோபீன் நிறைந்துள்ளது. எனவே, தர்பூசணியை அதிக அளவில் உட்கொள்ள வேண்டாம். இது குமட்டல், வீக்கம், வயிற்றுப்போக்கு, வாந்தி, அஜீரணம் மற்றும் வாயுவுக்கு வழிவகுக்கும். இந்த அறிகுறிகள் வயதானவர்களிடையே மோசமாக இருக்கலாம், ஏனெனில் செரிமான அமைப்பு வயதுக்கு ஏற்ப பலவீனமடைகிறது.
2. இருதய கோளாறுகள்
தர்பூசணிகளில் அதிக அளவு பொட்டாசியம் உள்ளது. பொட்டாசியம் செறிவூட்டப்பட்ட உணவை அதிக அளவில் உட்கொள்வது இருதய பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும். சில நோய்கள் அதாவது பலவீனமான இதயத் துடிப்பு, ஒழுங்கற்ற இதயத் துடிப்பு, இதயத் தடுப்பு போன்றவை ஏற்படுகிறது. இது மோட்டார் கட்டுப்பாடு மற்றும் உடலின் நரம்பு மண்டலத்தையும் பாதிக்கலாம்.
3. நீரிழிவு நோயாளிகளுக்கு நல்லதல்ல
ஒரு நபர் இன்சுலின் எதிர்ப்பு சக்தியாக இருக்கும்போது, இரத்தத்தில் சர்க்கரை அளவு இரத்தத்தில் தொடர்ந்து இருக்கும். இது உடலின் உயிரணுக்களுக்குள் நுழையாது. உயிரணுக்களில் குளுக்கோஸின் பற்றாக்குறை இருக்கும்போது, அதிக அளவு இன்சுலின் சுரக்கப்படுகிறது. இரத்தம் மற்றும் சர்க்கரை இரண்டும் இரத்தத்தில் இருக்கின்றன, இது உடலில் உள்ள ட்ரைகிளிசரைடு அளவை பாதிக்கும். இயற்கையான சர்க்கரையுடன் நிறைந்த தர்பூசணி உடலின் சர்க்கரை அளவை அதிகரிக்கும். அதனால்தான் நீரிழிவு நோயாளிகள் தர்பூசணி உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும்.
4. இரத்த அழுத்தம்
தர்பூசணியின் அதிகப்படியான நுகர்வு உடலின் இரத்த அழுத்த அளவைக் குறைக்க வழிவகுக்கும். ஒரு நபர் குறைந்த இரத்த அழுத்தத்தால் அவதிப்பட்டால், தர்பூசணியை தவிர்ப்பது நல்லது. ஒவ்வாமை போன்ற உணர்வுகள் சிலருக்கு ஏற்படுத்தும். அவை கடுமையான அல்லது லேசான தடிப்புகள், அனாபிலாக்ஸிஸ் மற்றும் முக வீக்கம் ஏற்படும். கேரட், லேடெக்ஸ் மற்றும் வெள்ளரிக்காய் சாப்பிடுவதில் ஒவ்வாமை இருப்பவர்களுக்கு தர்பூசணி சாப்பிட்டாலும் ஒவ்வாமை எளிதில் உருவாக்கலாம்.
6. கர்ப்ப காலத்தில் தவிர்க்கவும்
கர்ப்பகால நீரிழிவு என்பது ஒரு பொதுவான, ஆனால் தீவிரமான உடல்நலப் பிரச்சினையாகும், இது பல கர்ப்பிணிப் பெண்களைப் பாதிக்கிறது. அதிக அளவு தர்பூசணிகளை உட்கொள்வது இரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரிக்கிறது, இது கர்ப்பகால நீரிழிவு நோய்க்கு வழிவகுக்கிறது. எனவே, கர்ப்பிணி பெண்கள் சில மாதங்களுக்கு தர்பூசணி சாப்பிடுவதை நிறுத்த வேண்டும். வருமுன் காப்பதே சிறந்தது.
7. வயிற்று போக்கு
தர்பூசணியில் சர்பிடால் எனப்படும் ஒரு சிறப்பு வகை சர்க்கரை உள்ளது. சர்பிடோல் ஒவ்வாம்மை இருக்கும் மக்கள் தர்பூசணியை உட்கொள்வதால் வயிற்றுப்போக்கு மற்றும் வாயுவை உருவாக்குகிறது.
8. நரம்புகள் மற்றும் தசைகள் தொடர்பான பிரச்சினைகள்
மக்கள், தர்பூசணியை அதிக அளவில் உட்கொள்வதால், நரம்பு, தசை மற்றும் சிறுநீரக பிரச்சினைகள் உருவாகின்றன.
மேலும் படிக்க:
விளைநிலங்களில் வீணாகும் தர்பூசணி பழங்கள்! இழப்பீடு வழங்க கோரிக்கை!
தர்பூசணியை விற்பனை செய்ய முடியவில்லை: வயலுக்கே உரமாகும் அவல நிலை!
வெயில் சுட்டெரிப்பதால் நாகையில் களைகட்டுகிறது தர்பூசணி விற்பனை!