Health & Lifestyle

Sunday, 02 January 2022 07:44 AM , by: R. Balakrishnan

Guava leaf use for Darken Hair

இளமையிலேயே வெள்ளை முடியால் பலர் அவதிப்படுகின்றனர். இதனால் கெமிக்கல் டை பயன்படுத்துவோர் எண்ணிக்கையும் அதிகரித்துவிட்டது. இது சிலருக்கு பக்க விளைவுகளையும் உண்டாக்கலாம். எனவே இயற்கையான முறையில் பின்பற்றுவது பக்கவிளைவுகளும் இருக்காது. பலனும் கிடைக்கும். அதற்கு சிறந்த வழி கொய்யா இலைகளிலேயே இருக்கிறது.

கொய்யா இலையில் விட்டமின் பி மற்றும் சி நிறைவாக உள்ளது. இது முடி வளர்ச்சியை ஊக்குவிக்கும் கொலாஜின் செயல்பாட்டை தூண்டுகிறது. ஆக்ஸிஜனேற்ற பண்புகள் , அழற்சி எதிர்ப்பு மற்றும் நுண்ணுயிர் எதிர்ப்பு பண்புகள் உள்ளன. எனவே கூந்தலை பராமரிக்கவும் , அதன் நிறத்தை மேம்படுத்தவும் கொய்யா இலைகள் (Guava Leaf) சிறந்து விளங்குகின்றன.

தேவையான பொருட்கள் :

  • கொய்யா இலை - 1 கைப்பிடி
  • தண்ணீர்- 1 லிட்டர்

செய்முறை :

  • கொய்யா இலைகளை நன்கு அலசிக்கொள்ளுங்கள்.
  • பின் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொய்யா இலைகளை நன்கு கொதிக்க வையுங்கள்.
  • 20 நிமிடங்கள் கொதிக்க வேண்டும். நன்கு கொதித்ததும் அடுப்பை அணைத்து விட்டு வடிகட்டிக் கொள்ளுங்கள்.
  • அந்த தண்ணீர் ஆறியதும் தலைமுடி வேர்களில் படும்படி தடவி மசாஜ் செய்ய வேண்டும். இதனால் தலையின் வேர்கள் தூண்டப்பட்டு இரத்த ஓட்டம் அதிகரிக்கும். முடி வளர்ச்சி அதிகரிக்கும். அதோடு முடியும் நிறம் மாறும்.
  • மசாஜ் செய்த பிறகு அரை மணி நேரம் அந்த தண்ணீர் தலையில் நன்கு ஊற வேண்டும். பின் வெதுவெதுப்பான நீரில் தலையை அலசிவிடுங்கள்.
  • இதை வாரம் இரண்டு முறை செய்யலாம். அவ்வாறு செய்வதால் நீங்கள் நினைத்தது போல் கரு கரு கூந்தல் அடர்த்தியான கூந்தல் கிடைக்கும்.

மேலும் படிக்க

வாழை இலையை அரைத்துப் பயன்படுத்தினால் இவ்வளவு நன்மைகளா?

பெருங்காயத்தை வாழைப்பழத்தில் வைத்து சாப்பிட்டால் என்ன நடக்கும்?

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)